தி டோர் சினிமா விமர்சனம் : தி டோர் சிலிர்க்க வைக்கும் புதிய திகில் அனுபவம் | ரேட்டிங்: 3/5
ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் நவீன் ராஜன் தயாரித்திருக்கும் தி டோர் படத்தை இயக்கியிருக்கிறார் ஜெய்தேவ்.
இதில் பாவனா – மித்ரா, கணேஷ் வெங்கடராமன் – ரைசுதீன், ஜெயபிரகாஷ் – வேல்முருகன், ஸ்ரீPரஞ்சனி – தேவிகா, நந்தகுமார் – ரத்தினம், கிரீஷ் – நாகலிங்கம், பாண்டி ரவி – ஒப்பந்தக்காரர், சங்கீதா – மேகா, சிந்தூரி – மரியா, பிரியா வெங்கட் – ஷாலினி, ரமேஷ் ஆறுமுகம் – விஷ்வா, கபில் – ராம், பைரி வினு – இன்ஸ்பெக்டர் குமரன், ரோஷ்னி – மீரா, சித்திக் – ராஜேந்திரன், வினோலியா – பேய் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஓளிப்பதிவு : கௌதம் ஜி, எடிட்டர்: அதுல் விஜய், இசை: வருண் உன்னி, கலை இயக்குனர்: கார்த்திக் சின்னுடையான், ஸ்டண்ட் மாஸ்டர்: மெட்ரோ மகேஷ், ஆடை வடிவமைப்பு: வெண்மதி கார்த்திக், பாடலாசிரியர்: இளங்கோ கிருஷ்ணன், முருகன் மந்திரம், பாடியவர்கள்: கே.எஸ். சித்ரா, வருண் உன்னி, தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: சி.சிவச்சந்திரன், தயாரிப்பு நிர்வாகி: எம்.விஜயகுமார், ஸ்டில்ஸ்: ராஜா, விளம்பர வடிவமைப்பு: சந்திரு – தண்டூரா, ஒலிப்பதிவு: ஆர். கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு : பரணி
சென்னையில் கட்டிடக்கலை வடிவமைப்பாளரான மித்ரா (பாவனா) தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அந்த நிறுவனத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக அங்கு இருக்கும் ஒரு பழமையான சின்ன கோவில் ஒன்றை இடிக்க, அதே நேரத்தில் ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் மித்ராவின் தந்தை (வழக்கறிஞர்) மர்மமான முறையில் இறந்து விடுகிறார். தந்தையின் மரணம் மித்ராவையும் அவரது குடும்பத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. தந்தையிடம் சரியான பேச்சு வார்த்தையின்றி இருந்த மித்ரா அவர் இறப்பிற்கு பின் தன் தவறை உணர்ந்து மனஉளைச்சலில் தவிக்க, அதனால் சென்னை பணியில் இருந்து விலக முடிவெடுக்கிறார். நான்கு மாதங்கள் கழித்து கட்டிடக்கலை உரிமையாளரும் மித்ராவின் குடும்ப நண்பருமான வேல்முருகன் (ஜெயபிரகாஷ்) மித்ராவுக்கு ஆறுதல் கூறி, அந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணியை மித்ரா முடித்து தர அழைக்கிறார். அதன் பின் மீண்டும் தன் பணியை தொடங்க சென்னைக்கு வரும் மித்ராவிற்கு தனி வீட்டை தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருகிறார் வேல்முருகன். அந்த வீட்டில் இன்னொரு பெண்ணும் தங்கி இருந்தாலும் மித்ராவிடம் சரிவர பழகாமல் இருப்பதும் பெண் தோழி தூக்கத்தில் எழுந்து நடப்பது, சுவற்றில் முட்டி தன்னைக் காயப்படுத்திக் கொள்வது, மயக்கமடைவது என்று வினோதமாக நடந்து கொள்கிறார். மித்ரா தன் கட்டிட பணியை தொடங்கும் போது, அவரை சுற்றி அமானுஷ்ய சம்பவங்களாக கண்களுக்கு அவ்வப்போது ஒரு பெண்ணின் உருவமும், பள்ளி மாணவியின் உருவமும் தென்பட்டு மறைகிறது. நான்கு மாதங்களில் அந்த கட்டிடத்தில் வேலை செய்யும் ஐந்து பேர் எதிர்பாராத விதமாக குதித்து இறந்து விடுகின்றனர். அமானுஷ்ய சக்தி, கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத மித்ரா தன் தோழியின் வற்புறுத்தலின் பேரில் அமானுஷ்ய சக்தியை பற்றி ஆராய்ச்சி செய்யும் நண்பரை வீட்டிற்கு அழைத்து வர சொல்கிறார். அந்த நபர் உதவியுடன் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அது மித்ராவிடம் ஏதோ ஒரு உதவியை நாடுவதாகவும் சொல்ல மித்ரா அந்த அமானுஷ்ய சக்திக்கும், தனக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆராய தொடங்குகிறார். அப்போது அவர் சந்திக்கும் நபர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மர்மமான மரணம் எதனால் ஏற்படுகிறது? இந்த மரணத்திற்கும் மித்ராவிற்கும் உள்ள சம்பந்தம் என்ன? அமானுஷ்ய உருவம் மித்ராவை பின் தொடர்வது எதற்காக? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
மித்ராவாக பாவனா திகில் நிறைந்த காட்சிகளின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையிருப்பின் மூலம் அவரின் பண்பட்ட தனித்துவமான நடிப்பால் கவர்கிறார்.
போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம், கட்டிட தொழிலதிபராக ஜெயப்பிரகாஷ், தாயாக ஸ்ரீPரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்து பயமுறுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவை கௌதம் ஜி மதுரை, சென்னை, அடுக்குமாடி கட்டிடம், தனி வீட்டில் நடக்கும் திகில் சம்பவங்கள், அமானுஷ்ய சக்தி என்று பார்த்து பார்த்து தன் காட்சிக்கோணங்களால் புத்துணர்ச்சி ததும்ப செதுக்கியுள்ளார்.
வருண் உன்னின் இசை மற்றும் பின்னணி இசை, படத்தொகுப்பாளர் அதுல் விஜய் ஆகியோர் திகல் நிறைந்த காட்சிகளை திறம்பட கையாண்டுள்ளனர்.
தி டோர் படத்தில் அமானுஷ்ய திகில், புதிரும் கலந்து நவீன கதை சொல்லும் நுட்பங்களுடன் கிளாசிக் திகில் கூறுகளை தடையின்றி கலக்கிறது. பயம், விதி மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்டது பற்றிய நமது புரிதலை சவாலாக்குகிறது. வாழ்க்கையை வடிவமைக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளைப் பிரதிபலித்து ஒவ்வொரு காட்சியையும் இருக்கையின் விளிம்பில் உட்கார வைக்குமளவிற்கு தனித்துவமான திகில் திரைக்கதையை இயக்கியுள்ளார் ஜெய்தேவ்.
மொத்தத்தில் ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ் எல்எல்பி நவீன் ராஜன் தயாரித்துள்ள தி டோர் சிலிர்க்க வைக்கும் புதிய திகில் அனுபவம்.