தில்ராஜா சினிமா விமர்சனம் (DHILRAJA Movie Review) : தில் ராஜா அதிரடி ஆக்ஷன் களத்துடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் | ரேட்டிங்: 2.5/5
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா தயாரித்திருக்கும் தில் ராஜா படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார்.
இதில் விஜய் சத்யா ,ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, அம்ரீஷ், விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனிஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை அம்ரீஷ், பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைக்குமார், ஒளிப்பதிவு மனோ ஏ.நாராயணா. படத்தொகுப்பு சுரேஷ் அர்ஷ். மக்கள் தொடர்பு : மணவை புவன்.
கட்டிடக் கலை நிபுணர் மற்றும் கார் மெக்கானிக் ரஜினி (விஜய் சத்யா) பெயருக்கேற்றவாறு தீவிர ரஜினி ரசிகர், தனது மனைவி ஷெரின் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசிக்கிறார். மகளின் பிறந்தநாளுக்;காக ஷாப்பிங் செல்கின்றனர் தம்பதியர். இரவில் காரில் வரும் போது வழியில் அமைச்சர் ஏ வெங்கடேஷின் மகன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் போதையில்; ஷெரினை அடைய நினைத்து அவர்களை துரத்தி வழிமறித்து போதையில்; ரகளை செய்கின்றனர். அந்த நேரத்தில் அவ்வழியே வந்த கவுன்சிலர் போதையில் ரகளை செய்தவர்களிடம் தட்டிக்கேட்க கவுன்சிலரை அமைச்சரின் மகன் துப்பாக்கியால் சுட்டு கொள்கிறான். அதன் பிறகு காரில் தப்பித்து செல்லும் விஜய் சத்யாவை துரத்த சண்டையில் அமைச்சரின் மகனை விஜய் சத்யா தாக்கும் போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு இறந்துவிடுகிறான். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியாகும் விஜய் சத்யா தன் மனைவி மகளுடன் தப்பித்து வந்து விடுகிறார். அமைச்சரின் மூன்று நண்பர்களும் அங்கிருந்து ஒடி விடுகின்றனர். அமைச்சர் ஏ.வெங்கடேஷிற்கு தன் மகன் கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்க துடிக்கிறார். போலீஸ் சம்யுக்தா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட, தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது. இறுதியில் விஜய் சத்யா அமைச்சர் மற்றும் போலீசிடமிருந்து தப்பித்தாரா? மனைவி மகள் இருவரையும் காப்பாற்ற முடிந்ததா? தப்பிச் சென்ற மூன்று நண்பர்கள் என்ன ஆனார்கள்? விஜய் சத்யா கொலை பழியிலிருந்து விடுபட என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நல்ல உடல் வலிமை, உயரத்துடன் விஜய் சத்யா நடுத்தர இளைஞனாக நடனம், ஆக்ரோஷம், ஆக்ஷன் கலந்து தனி முத்திரை பதித்துள்ளார்.
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அரசியல்வாதியாகவும் முக்கிய வில்லத்தனத்தில் மிரட்டலுடன் அதிரடி காட்டியிருக்கிறார்.
மனைவியாக ஷெரின் கவர்ச்சி துள்ளலுடன் படபடப்புடன் மகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என்று நடிப்பிற்கு ஸ்கோப் உள்ள வேடத்தில் வருகிறார்.
ஒரு சில காட்சிகளில் வரும் வனிதா விஜயகுமார், எடுபடாத நகைச்சுவையில் இமான் அண்ணாச்சி, குற்றவாளிகளை இறுதி வரை தேடிக்கொண்டே இருக்க ஒரு ட்விஸ்ட் தரும் சம்யுக்தா, கராத்தே ராஜா, இசையமைத்து பாடலுக்கு ஆடும் அம்ரீஷ், கவுண்டர் கொடுத்து ரிலாக்ஸ் செய்ய வைக்கும் விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனிஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் பக்கமேளங்கள்.
நெல்லை ஜெயந்தன், கலைக்குமார் எழுதிய பாடலுக்கு நன்றாக இசையமைத்து, பின்னணியிலும் ஆர்ப்பாட்டமாக கொடுத்து அறிமுக பாடலுக்கு ஒரு சாமியார் வேடத்தில் குத்தாட்டமும் போட்டிருக்கிறார் அம்ரீஷ்.
ஒளிப்பதிவு மனோ ஏ.நாராயணா மற்றும் படத்தொகுப்பு சுரேஷ் அர்ஷ் ஆகியோர் துரத்தல் கதைக்கேற்றவாறு காட்சிக்கோணங்களில் சிறப்பாக பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஒரு நடுத்தர குடும்பத்திற்கும் மற்றும் அரசியல் செல்வாக்கு மிகுந்த பணக்கார இளைஞர்களுக்கும் இடையிலான மோதலில் ஏற்படும் மரணத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் முன்னச்சிரிக்கை மற்றும் சாமர்த்திய வியூகத்துடன் கதைக்களத்தை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். பழைய கதைகளத்தை புதிய மெருகுடன் பொழுதுபோக்கு அம்சங்களுடன் த்ரில்லராக கொடுக்க முயற்சித்திருப்பதில் இன்னும் கூடுதல் அழுத்தத்துடன் கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா தயாரித்திருக்கும் தில் ராஜா அதிரடி ஆக்ஷன் களத்துடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்.