தினசரி சினிமா விமர்சனம் : தினசரி சராசரி மனிதனின் பணப்பேராசையால் குடும்பத்தில் ஏற்படும் மனக்கஷ்டம் | ரேட்டிங்: 2.5/5
சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லூர்தே தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.சங்கர்.
இதில் ஸ்ரீகாந்த் – சக்திவேல், சிந்தியா லூர்தே – சிவானி, எம்.ஆர்.ராதாரவி – புண்ணியகோடி, எம்.எஸ். பாஸ்கர் – பழனிநாயகன், மீரா கிருஷ்ணன் – வள்ளியம்மை, வினோதினி – காயத்ரி, பிரேம்ஜி – பிரேம், சாம்ஸ் – மேரேஜ் புரோக்கர், கேஒய்பி சரத் – சரத், சாந்தினி தமிழரசன் – ஷாலினி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை – இளையராஜா, 2வது யூனிட் இயக்குனர் – தினேஷ் தீனா, ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் யாதவ், படத்தொகுப்பு- என்.பி.ஸ்ரீகாந்த், கலை- ஜான் பிரிட்டோ, சண்டை – ஸ்டன்னர், நடனம் – தினேஷ் குமார், பத்திரிக்கை தொடர்பு – குமரேசன், கே.மீடியா
நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைய மகன் சக்திவேலுக்கு (ஸ்ரீகாந்த்) பெற்றோரான பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் பழனிநாயகன் (எம்.எஸ்.பாஸ்கர்)- வள்ளியம்மை (மீரா கிருஷ்ணன்) மற்றும் அவர்களது மூத்த மகள் காயத்ரி (வினோதினி) ஆகியோர் நீண்ட நாளாக பெண் பார்த்து திருமணம் முடிக்க படாதபாடு படுகிறார்கள். பெண் கிடைத்தாலும் சக்திவேல்; போடும் கண்டிஷனில் தெறித்து ஒடிவிடுகின்றனர். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெற்று வேலையில் இருக்க வேண்டும், பணம் மட்டுமே வாழ்க்கையின்; குறிக்கோளாக இருக்கும் நிபந்தனையை ஏற்க முடியாமல் அவரது திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில், திருமண தரகர் மூலம் நல்ல வரனாக அமெரிக்காவில் பிறந்து பெற்றோரை இழந்து அனாதையாக இருக்கும் தமிழ்க் கலாச்சார பிடிப்போடு அன்பை எதிர்பார்த்து வேலைக்கு போகாமல் குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் பெண் ஷிவானியை (சிந்தியா) பெண் பார்க்கச் செல்லும் குடும்பத்தினர் சக்திவேலுவின் நிபந்தனைகளை மறைத்து பொய் செல்லி சக்திவேலுவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். முதலிரவில் சக்திவேலுக்கு உண்மைகள் தெரியவர தன் குடும்பமே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த விஷயம் தெரிந்து மனமுடைந்து அனைவரின் மேல் வெறுப்பாக இருக்கிறார்.ஏற்கனவே பல லட்சங்கள் கடன் வாங்கி செலவு செய்து வீடு கட்டுவதும், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இரட்டிப்பு பணஆசையில் முதலீடு செய்து வருவதால், பண நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தடுமாறுகிறார். இந்நிலையில் மனைவியின் வேலைக்கு செல்லாத பிடிவாதம் மேலும் சக்திவேலுக்கு சிக்கலை உண்டாக்குகிறது. இதனிடையே முதலீடு செய்த நிறுவனம் ஏமாற்றி விட, வேலையிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு பறிபோகிறது. இதனால் வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் சக்திவேல் கதி என்னவானது? மனைவி சக்திவேலுக்கு உதவி செய்தாரா? மீண்டும் வேலை கிடைத்ததா? கடன்களை சமாளித்தாரா? என்பதே தினசரி மனிதனின் திண்டாடலை சொல்லும் மீதிக்கதை.
பணத்தாசை பிடித்த சக்திவேலாக ஸ்ரீகாந்த் தேர்ந்த நடிப்பை வழங்கினாலும் சில இடங்களில் உணர்ச்சிளில் தடுமாற்றம் அடைவது தெரிகிறது.
மனைவி ஷிவானியாக சிந்தியா லூர்தே திருமணம் செய்து கொண்டு வீட்டில் செய்யும் சமையல் அலப்பரை அதன் பின் கணவனின் அன்பை பெற முடியாமல் தவிக்கும் தவிப்பு, பின்னர் பணத் தேவைக்காக தன் முடிவை மாற்றி உதவி செய்வது என்று தமிழ் பெண்ணாக சிறப்பாக செய்துள்ளார்.
எம்.எஸ். பாஸ்கர் (பழனிநாயகன்), மீரா கிருஷ்ணன் (வள்ளியம்மை), வினோதினி (காயத்ரி) சக்திவேலுக்காக எடுக்கும் முயற்சிகள், சமாளிக்க தடுமாறும் இடங்களில் பாசஉணர்ச்சியில் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
இவர்களுடன் எம்.ஆர்.ராதாரவி (புண்ணியகோடி), பிரேம்ஜி (பிரேம்), சாம்ஸ் (திருமண தரகர்), கே.ஒய்.பி. சரத் (சரத்), சாந்தினி தமிழரசன் (ஷாலினி) உள்ளிட்ட அனைவரும் பக்க மேளங்களாக வந்து போகிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீPகாந்த், கலை – ஜான் பிரிட்டோ, சண்டை – ஸ்டன்னர், நடனம் – தினேஷ் குமார் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் குடும்ப கதைக்கேற்ப காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தின் தேவையையும், வசதியாக வாழ்வதற்கும் தம்பதிகள் இருவரும் சம்பாதிக்க வேண்டியது அவசியம் என்றாலும் அதற்காக பணமே குறிக்கோளாக வாழ்வது சரியில்லை அதிக பணத்தாசை பெரும் நஷ்டத்தில் விடும் என்ற கருத்தை வலியுறுத்தி குடும்ப பாசமே வலிமையானது மகிழ்ச்சி தருவது என்பதை அழுத்தமான பதிவாக சொல்லி கொஞ்சம் நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜி.சங்கர்.
மொத்தத்தில் சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லூர்தே தயாரித்திருக்கும் தினசரி சராசரி மனிதனின் பணப்பேராசையால் குடும்பத்தில் ஏற்படும் மனக்கஷ்டம்.