டெக்ஸ்டர் சினிமா விமர்சனம் : டெக்ஸ்டர் ட்விஸ்ட் கலந்த பழி தீர்க்கும் சைக்கோ கில்லர் | ரேட்டிங்: 3/5

0
313

டெக்ஸ்டர் சினிமா விமர்சனம் : டெக்ஸ்டர் ட்விஸ்ட் கலந்த பழி தீர்க்கும் சைக்கோ கில்லர் | ரேட்டிங்: 3/5

ராம் என்டர்டெய்னர்ஸ் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்திருக்கும் டெக்ஸ்டர் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியிருக்கிறார் சூரியன்.ஜி.

இதில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ,ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – ஆதித்ய கோவிந்தராஜ், இசை- ஸ்ரீPநாத் விஜய், பாடல்கள்- மோகன்ராஜன், படத்தொகுப்பு- ஸ்ரீPனிவாஸ் பி.பாபு, சண்டை பயிற்சி- அஷ்ரப் குருக்கள், கே.டி வெங்கடேஷ், நடனம் – சினேகா அசோக், எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – ஷார்வாக்கா, கதை – சிவம், மக்கள் தொடர்பு -வெங்கட்

ஆதி (ராஜீவ் கோவிந்த்)யும்  யாமினி (யுக்தா பெர்வி) யும் காதலர்கள். இவர்களின் காதல் ஒரு கொடூரமான சம்பவத்தால் பறி போகிறது. திருமணம் செய்து கொண்டு புதிதாக குடி போகப் போகும் வீட்டை பார்வையிட தன் காதலியும் வருங்கால மனைவி யாமினியை அழைத்துச் செல்கிறார் ஆதி. அன்று எதிர்பாராதவிதமாக யாமினி யாரோ முகம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு ஒரு பாழடைந்த பங்களாவில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். யாமினியின் பேரழிப்பு ஆதிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் குடித்து சுயநினைவு இழந்து கிடக்கிறார். இவரை காப்பாற்றும் நண்பர் டாக்டர் சத்யா சக டாக்டர்களின் ஆலோசனைப்படி நினைவுகளை அழிக்கும் ​சிகிச்சையை ஆதிக்கு மேற்கொள்கிறார். அதன் பின் காதலியின் துக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டு புதிய மனிதனாக மாறும் ஆதிக்கு பால்ய சினேகிதி புவியின் (சித்தாரா விஜயன்) சகோதரி பாச நட்பு கிடைக்கிறது. இந்நிலையில் பெரிய மனிதராக வலம் வரும் கான்( ஹரிஷ் பெர்டி) தன் மகளின் சாவிற்கு காரணமான ஒரு தம்பதியரை பிடித்து வைத்துக் கொண்டு அவர்களின் மகனை கண்டுபிடிக்கும் வரை பிணைக்கைதியாக இருபத்திரண்டு ஆண்டுகள் வைத்திருக்கிறார். இந்த தம்பதியரின் மகள் தான் புவி, தன் அண்ணனை கண்டுபிடித்து எப்படியாவது பெற்றோரை மீட்க வேண்டும் என்பது அவளது குறிக்கோள். புவியின் கதையை கேட்கும் ஆதி உதவி செய்ய முன் வருகிறார்.  அவளின் பெற்றோரை காப்பாற்றும் போது புவியும் கடத்தப்படுகிறாள். தன் காதலியைப்போல் சகோதரியான புவியையும் இழந்து விடக்கூடாது என்று ஆதி தீவிரமாக தேடுகிறார். இறுதியில் புவி யாரால் கடத்தப்படுகிறாள்? புவியின் கடத்தலுக்கும், காதலி யாமினியின் கடத்தலுக்கும் உள்ள தொடர்பு என்ன? யார் அந்த சைக்கோ குற்றவாளி? புவியின் அண்ணன் என்ன ஆனார்? காரணம் என்ன? சைக்கோவிடமிருந்து ஆதியால் அனைவரையும் காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஆதியாக ராஜீவ் கோவிந்த் நல்ல உயரம், உடற்கட்டு, நீண்ட முடி என்று தனக்குரிய அடையாளத்துடன் காதல், ஆக்ஷன், துயரம் என்று தன் பங்களிப்பை மிகச் சிறந்த முறையில் உணர்ச்சிகளின் ஆழத்துடன் கொடுத்துள்ளார்.

அழகான காதலியாக யுக்தா பெர்வி வசீகரித்து, இறக்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.

பல பரிமாணங்களை காட்டும் குரூர வில்லனாக அபிஷேக் ஜார்ஜ், சிகோதர பாசத்துடன் பழகும் சித்தாரா விஜயன், வில்லனாக தோன்றி பின்னர் பரிதாபமாக கதறும் ஹரிஷ் பெர்டி, தேர்ந்த சண்டை காட்சிகளுக்கு அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் ஆகியோர் கதைக்கு பலமாக இருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ஆதித்ய கோவிந்தராஜ், இசை – ஸ்ரீPநாத் விஜய், பாடல்கள்- மோகன்ராஜன், படத்தொகுப்பு – ஸ்ரீPனிவாஸ் பி.பாபு, சண்டை பயிற்சி- அஷ்ரப் குருக்கள் மற்றும் கே.டி வெங்கடேஷ், நடனம் – சினேகா அசோக் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தின் சாராம்சத்தை தத்ரூபமாக காட்சிகளில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

நான்கு சிறுவ சிறுமியரால் சிறு வயதில் சிறுவன் ஒருவன் அவமானத்தால் பாதிக்கப்பட வளர்ந்த பின் அவர்களை வெறி கொண்டு அலைந்து திரிந்து கண்டுபிடித்து பழி வாங்கி ஆனந்தப்படும் சைக்கோ இளைஞரால் எத்தனை பேருடைய  வாழ்க்கை சின்னாபின்னமாகிறது,  பாதிக்கப்பட்டவர்கள் படும் துன்பங்கள், இன்னல்கள் எடுக்கும் முடிவுகள், சைக்கோ கொலையாளியை அழித்தார்களா என்பதை முடிந்த வரை நேர்த்தியாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் சூரியன்.ஜி.

மொத்தத்தில் ராம் என்டர்டெய்னர்ஸ் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்துள்ள டெக்ஸ்டர் ட்விஸ்ட் கலந்த பழி தீர்க்கும் சைக்கோ கில்லர்.