ஜென்டில் வுமன் சினிமா விமர்சனம் : ஜென்டில்வுமன் அசாத்திய தைரியமிக்க பெண் கொடுக்கும் துரோகத்திற்கான துணிச்சலான தண்டனை | ரேட்டிங்: 3.5/5
கோமலா ஹரி பிக்சர்ஸ், ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ் சார்பில் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என். நரேந்திர குமார், லியோ லோகேன் நேதாஜி தயாரித்திருக்கும் ஜென்டில்வுமன் படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜோசுவா சேதுராமன். வெளியீடு: உத்ரா புரொடக்ஷன்ஸ் – எஸ் ஹரி உத்ரா
இதில் லிஜோமோல் ஜோஸ் – பூர்ணி, ஹரி கிருஷ்ணன் – அரவிந்த், லோஸ்லியா மரியானேசன் – அண்ணா, ராஜீவ் காந்தி – பூவேந்தன், தரணி – தீபிகா, வைராபாலன் – சோவியத், சுதேஷ் – பிரபு தோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர்கள்: இணை தயாரிப்பாளர்: தினேஷ் குமார் டி.சி, இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர்: சா.காத்தவராயன்,எடிட்டர்: இளையராஜா சேகர், தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.அமரன்,பாடல் மற்றும் உரையாடல்கள்: யுகபாரதி, அதிரடி நடன இயக்குனர்: சுதேஷ், நடன இயக்குனர்: அஸார், காஸ்டூமர்: சத்யா, ஆடியோகிராஃபர்: கெவின் ஃபிரடெரிக், இணை இயக்குநர்: அன்னமலை கரு, புகழ் மகேந்திரன், உதவி இயக்குநர்: தினேஷ் குமார், அரோக்கிய ராஜ், பகத் பி.எஸ், ஈஸ்வரன்.டி, கலரிஸ்ட்: அதிதியா கிருஷ்ணன், வி.எஃப்.எக்ஸ்: ஆண்டனி ஜெரோம், ராம் சிவனேஷ்,உதவி ஒளிப்பதிவாளர்: பாதல் பிதாடியா, கிரண், அபிஷேக் சிங், உதவி ஆசிரியர்: சத்ய மோகன், வசந்த் சாகர் சசிகலா, கலை அசோசியேட்ஸ்: பி.ஆர்.தேவந்திரன் பாலு, டி.யுவனேஷ், எஸ்.திவ்யராஜன், விளம்பர வடிவமைப்பாளர்: பரணிதரன், பி.டி.எஸ் புகைப்படக்காரர்: சாம் ஜெரிமியா, டிஜிட்டல் பி.ஆர்: அகமது அஸ்ஜாத், விளம்பரங்கள் – விவேக் அமிர்தாலிங்கம், வசன வரிகள்: கியூப், ஆடியோ லேபிள்: டிவோ இசை, பிஆர்ஒ: சதீஷ் (ஏய்ம்)
சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் எல்ஐசி ஊழியர் அரவிந்த் (ஹரி கிருஷ்ணன்) அவரின் மனைவி பூரணி (லியோமோல் ஜோஸ்) திருமணமாகி மூன்று மாதங்களே ஆன புது மண தம்பதிகள். இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. கணவனின் ஒப்புதலோடு பூரணியின் தோழியின் சகோதரி சென்னையில் நேர்காணலுக்கு வந்து இவர்கள் வீட்டில் தங்குகிறார். அதன் பின் தான் அரவிந்த் எத்தகைய சபலபுத்தி உடையவன் என்பது தெரிய ஆரம்பிக்கிறது. பூரணி கோயிலுக்கு சென்றிருக்கும் போது தனியாக இருக்கும் அந்த இளம்பெண்ணிடம் சமையலறையில் தப்பாக பழக நினைக்கும்போது தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி விழுகிறான். இதனால் அதிர்ச்சியாகும் அந்த பெண் செய்வதறியாது அழுகிறார். அப்பொழுது வீட்டிற்கு வரும் பூரணி கணவனின் செயலை கண்டு திகைக்கும் நேரத்தில், தொலைபேசி அழைப்பு வர அதில் காதலி அன்னா (லாஸ்லியா) பேசுவதை எடுத்து கேட்கும் பூரணி அதிர்ச்சியாகிறாள். அதன் பின் கணவனின் போனை எடுத்து பார்க்கும் போது கணவனின் உண்மையான முகம் தெரிய வருகிறது. இந்த நேரத்தில் சுயநினைவு வரும் அரவிந்த் விழித்தெழ முயலும் போது, பூரணி ஆத்திரத்தில் அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுகிறார். பின்னர் வீட்டின் அழைப்புமணி அடிக்க, வேறு வழி தெரியாமல் ஃபிரிட்ஜில் கணவனின் பிணத்தை வைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்கிறார்.கணவனை தேடி காதலி அன்னா வந்து விசாரித்து விட்டு காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து விட்டு செல்கிறார். அதன் பின் என்ன நடந்தது? போலீஸ் விசாரணையில் உண்மையை கண்டுபிடித்தார்களா? கொலையை மறைக்க பூரணி என்ன செய்தார்? அன்னாவால் பூரணிக்கு ஏற்பட்ட சங்கடங்கள் சிக்கல்கள் என்ன? கொலையை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதே எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.
லிஜோமோல் ஜோஸ் சாதாரண இல்லத்தரசியாக அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு, கணவனுக்கு பணிவிடை செய்வது, அக்கம்பக்கத்தில் சுமுகமாக பேசிக்கொண்டு எப்பொழும் சுறுசுறுப்பாக இன்முகத்துடன் வலம் வரும் பெண்ணாக, கணவனின் துரோகத்தை அறிந்து அதிரும் தருணம் தான் படத்தின் திருப்புமுனை. திடீரென்று எடுக்கும் முடிவு எத்தகைய பாத்pப்பை எற்படுத்திவிடுகிறது என்பதையும், அதை சமாளிக்கும் திறனை கண்டு வியப்பூட்டும் வகையில் அமைதியாக கையாண்டு பதட்டமில்லாமல் நேர்த்தியாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.
அரவிந்தாக ஹரி கிருஷ்ணன் சபல புத்தியோடு இருக்கும் நெகடிவ் கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் படத்திற்கு முக்கிய ஆரம்ப புள்ளியாக அமைந்து அப்பாவியாக நடித்து அடப்பாவியாக தெரிகிறார்.
காவலர் பூவேந்தனாக வரும் ராஜிவ் காந்தி, தரணி – தீபிகா, வைராபாலன் – சோவியத், சுதேஷ் – பிரபு தோஸ் மற்றும் பலரின் நடிப்பு கச்சிதம்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் ஒளிப்பதிவாளர் சா.காத்தவாராயண் படத்தின் ஸ்டைலிஸ்டிக் காட்சிகள் வைத்திருப்பதன் மூலம் நம்பகத்தன்மையை அதிகம் மனதில் பதியுமாறு செய்து பல காட்சிகளை பதட்டத்துடன் வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் இளையராஜா காட்சிகளை சிறப்பாக செதுக்கியுள்ளார்.
ஜென்டில்வுமன் சில நிர்ணயிக்கப்பட்ட சமூக எதிர்பார்ப்புகள் ஒரு பெண்ணுக்கு அல்லது யாருக்கும் விதிமுறையாக மாற முடியாது என்பதை மக்களுக்கு நினைவூட்டுகின்ற ஒரு திரைப்படமாக முடிகிறது. அமைதியான வாழ்க்கையை விரும்பும் பெண், வெகுண்டெழுந்தால் எத்தகைய காரியத்தையும் துணிந்து செய்து விடுவாள் என்பதையும், ஏமாற்றும் ஆண்களால் பெண்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை குடும்ப க்ரைம் த்ரில்லராக வடிவமைத்து திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும், அடுத்தடுத்து திருப்பங்களையும் தோய்வு எற்படாத வண்ணம் சமூகத்தில் கேள்விப்பட்ட நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இரு பெண்களின் கண்ணோட்டத்தில் சஸ்பென்ஸ் கலந்து அதிர்ச்சி தரும் வகையில் இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜோசுவா சேதுராமன்.
மொத்தத்தில் கோமலா ஹரி பிக்சர்ஸ், ஒன் டிராப் ஓஷன்பிக்சர்ஸ் சார்பில் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என். நரேந்திர குமார், லியோ லோகேன் நேதாஜி தயாரித்திருக்கும் ஜென்டில்வுமன் அசாத்திய தைரியமிக்க பெண் கொடுக்கும் துரோகத்திற்கான துணிச்சலான தண்டனை.