சொர்கவாசல் சினிமா விமர்சனம் : சொர்க்கவாசல் சுவாரஸ்யம் நிறைந்த பரபரப்பான சிறைக்கதை அனைவரையும் ஈர்க்கும் | ரேட்டிங்: 3/5

0
323

சொர்கவாசல் சினிமா விமர்சனம் : சொர்க்கவாசல் சுவாரஸ்யம் நிறைந்த பரபரப்பான சிறைக்கதை அனைவரையும் ஈர்க்கும் | ரேட்டிங்: 3/5

 

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் சொர்க்கவாசல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சித்தார்த் விஸ்வநாத்.

இதில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல், ஷரபுதீன், ஹக்கீம் ஷாஜஹான், சானியா ஐயப்பன், சாமுவேல் அபியோலா ராபின்சன், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஆக்ஷன் : பிரின்ஸ் ஆண்டர்சன், செல்வா ஆர்கே மற்றும் தினேஷ் சுப்பராயன் மாஸ்டர், இசை : கிறிஸ்டோ சேவியர், ஓளிப்பதிவு : பிரின்ஸ் ஆண்டர்சன், படத் தொகுப்பு : செல்வா ஆர்.கே, மக்கள் தொடர்பு – நிகில்முருகன்.

இஸ்மாயில் (நட்டி) தலைமையிலான ஒரு சிறப்புப் படையினரால் 90களின் பிற்பகுதியில் சிறைக் கலவரத்தில் 45 பேர் கொல்லப்பட்ட மற்றும் 60 பேர் காணாமல் போன மாநிலத்தின் அரசியல் வரலாற்றை மாற்றிய கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் பற்றி விசாரிக்கும்போது, ஒவ்வொரு கோணத்திலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முக்கிய காரணமாக இருந்த பார்த்திபனின் கதையை விவரிப்பதிலிருந்து கதைக்களம் ஆரம்பிக்கிறது. வடசென்னையில் குறைந்த பொருளாதார பின்னணியில் இருந்து வந்த பார்த்திபன் (ஆர்.ஜே. பாலாஜி) உணவு கடை வண்டியை தன் தாயுடன் சேர்ந்து நடத்துகிறார். பார்த்திபனின் கடையில் உணவு அருந்த வரும் ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் (பரம்), அந்தப் பகுதியில் ஒரு ஹோட்டலைத் திறக்க கடனைப் பெற உதவுகிறார். இருப்பினும், சண்முகத்தின் அகால மர்ம மரணம் மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் பார்த்திபனை குற்றவாளி என்று சிறைக்கு அனுப்புகின்றன. சிறைச்சாலையில் கடின உழைப்பாளியான ஜெயிலர் கட்டபொம்மன் (கருணாஸ்), சிறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல ரவுடி சிகா என்ற சிகாமணி (செல்வராகவன்),  சிகாவை தீர்த்துக் கட்ட நினைக்கும் புதிய சிறை கண்காணிப்பாளர் எஸ்பி சுனில் குமார் (ஷரஃப் யு தீன்) ஆகிய மூன்று கதாபாத்திரங்களுடன் பய​ணிக்கும் பார்த்திபனுக்கு சிறையில் என்ன சிக்கல்கள் ஏற்பட்டது. இவர்களுடன் சேர்ந்து ஆசை, பேராசை, பொறாமை மற்றும் ஈகோ ஆகியவற்றின் வலையில் சிக்கிக் கொள்ளும் பார்த்திபன் நிலை என்ன? ரவுடி சிகாவை சிறை கண்காணிப்பாளர் சுனில் என்ன செய்தார்? அதனால் வெடித்த கலவரம் என்ன? அதன் பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் விசாரணை வளையத்திற்குள் வரும் க்ளைமேக்ஸ்.

சுpறை வாழ்க்கையின் கொடுமையை உணர்வுபூர்வமாக கடத்தும் ஆர்.ஜே. பாலாஜி, மிரட்டல் ரவுடியாக செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல், ஷரபுதீன், ஹக்கீம் ஷாஜஹான், சானியா ஐயப்பன், சாமுவேல் அபியோலா ராபின்சன், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு தெளிவான நோக்கத்தையும், திறம்பட உணரக்கூடிய பாராட்டத்தக்க நடிப்பால் கதைக்களம் பயணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

இசை : கிறிஸ்டோ சேவியர், ஓளிப்பதிவு : பிரின்ஸ் ஆண்டர்சன், படத் தொகுப்பு : செல்வா ஆர்.கே இவர்களுடன் ஆக்ஷனில் பிரின்ஸ் ஆண்டர்சன், செல்வா ஆர்கே மற்றும் தினேஷ் சுப்பராயன் ஆகியோர் சிறைக்குள் சம்பந்தப்பட்ட தத்ரூபமான காட்சிகளுக்கு ரத்தம் தெறிக்க தங்கள் பங்களிப்பை கொடுத்து உழைத்துள்ளனர். வசனங்கள் அழுத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது.

1999ம் ஆண்டு மத்திய சிறைச்சாலையில் நடைப்பெற்ற கலவரத்தின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கற்பனை கலந்த கதைக்களத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சித்தார்த் விஸ்வநாத்.ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இரண்டு வித குணாதிசயங்களையும், விவரிக்கப்படும் கதாபாத்திரங்களுக்கென்று ஒரு கிளைக்கதையும், அதிகாரத்தால்  எப்படியெல்லாம்  நல்லதையும் கெட்டதையும் தன் இஷ்டப்படி செய்து பலிகாடாக்கி ஆட்டிப்படைக்கலாம் என்பதையும் எதிரிகளைவிட சூழ்நிலை தான் அதிக பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் தன்னுடைய திறமையான இயக்கத்தால் திறம்பட கொடுத்துள்ளார் சித்தார்த் விஸ்வநாத். முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி யூகிக்கக்கூடிய கதைக்களத்துடம் முக்கிய தருணத்தை அவசரமாக கடந்து விட்டது போன்ற உணர்வு மேலிட வைத்துள்ளார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.

மொத்தத்தில் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் சொர்க்கவாசல் சுவாரஸ்யம் நிறைந்த பரபரப்பான சிறைக்கதை அனைவரையும் ஈர்க்கும்.