சட்டம் என் கையில் சினிமா விமர்சனம் (SATTAM EN KAYIL MOVIE REVIEW) : சட்டம் என் கையில் வித்தியாசமான கோணத்தில் அனைவருக்கும் த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்து அசத்தியுள்ளது | ரேட்டிங்:3/5

0
412

சட்டம் என் கையில் சினிமா விமர்சனம் (SATTAM EN KAYIL MOVIE REVIEW) : சட்டம் என் கையில் வித்தியாசமான கோணத்தில் அனைவருக்கும் த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்து அசத்தியுள்ளது | ரேட்டிங்:3/5

சண்முகம் கிரியேஷன்ஸ் சார்பில் பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம் மற்றும் ஸ்ரீராம் சத்தியநாராயணன் தயாரித்திருக்கும் சட்டம் என் கையில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாச்சி.

இதில் சதீஷ், அஜய் ராஜ், பாவெல் நவகேதன், மைம் கோபி, ரித்திகா, கேபி சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு : பி.ஜி. முத்தையா, படத்தொகுப்பு : மார்ட்டின் டைட்டஸ் ஏ, இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், வசனம் : ஜே.எம்.ராஜா, தயாரிப்பு மேலாளர் : உமாமகேஸ்வர ராஜு, நிர்வாக தயாரிப்பாளர் : பா சிவா, வணிகத் தலைவர் : தினேஷ் குமார், கலை : பசார் என்.கே.ராகுல், பாடல் வரிகள் : ராகவ கிருஷ்ணன், நவீன் பாரதி சாய் விநாயகம், சண்டைக்காட்சி : ராம் குமார் – சுரேஷ், ஒலி வடிவமைப்பு : அருண் அக் – ராஜா நல்லையா, பி.ஆர்.ஓ : சதீஷ் (ஏய்ம்)

ஏற்காடு மலை பாதையில் உள்ள காவல் நிலையத்தில், மருத்துவமனையில் டாக்டர் மீது கர்ப்பிணி மனைவி பிரசவத்தில் இறந்ததற்காக புகார் கொடுக்க வரும் கணவனை டாக்டரிடம் பதினைந்து லட்சம் வாங்கிக் கொண்டு அடித்து உதைத்து அனுப்பிவிடும் ஈகோ, கோபம் நிறைந்த காவல் அதிகாரி பாஷா(பாவெல் நவகீதன்). காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை அடிதடி, அடாவடி செய்து அனைவரும் வெறுக்கும் வண்ணம் நடந்து கொள்கிறார் பாஷா. இந்நிலையில் இரவில் காரில் ஏதோ பதட்டத்துடன் ஒட்டி வருகிறார் கௌதம் (சதீஷ்), எதிரே எதிர்பாராமல் பைக்கில் ஒருவர் வந்து மோதி இறந்து போக சடலத்தை மறைக்க, அதைத் தனது காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார். இரவு ரோந்தில் இருக்கும் காவல் அதிகாரி பாஷாவிடம் மாட்டிக் கொள்ளும் கௌதம் காரில் சடலத்தை கண்டு பிடித்து விடுவார்களோ என்று பயந்து தான் குடித்து விட்டு வந்ததாக பொய் சொல்லி தகராறு செய்து காவல் அதிகாரி பாஷாவை அடித்து விடுகிறார்.  அதனால் கடுப்பாகும் பாஷா கௌதமையும், அவருடைய காரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றார். சக காவலர்கள் முன்னிலையில் தன்னை கன்னத்தில் அறைந்த கௌதமை பழிவாங்க துடிக்கிறார் பாஷா. அதே நேரத்தில், ஏற்காடு ரவுண்டானாவில் ஒரு இளம் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட தகவல் அறிந்து விசாரணைக்கு வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ். காவல் நிலையத்தில் உடனடியாக மறுநாள் காலையில் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க தீவர விசாரணையில் இறங்குகிறார் அஜய்ராஜ்.அதே சமயம் கௌதமை பார்க்கும் சப் இன்ஸ்பெக்டர் அஜய்ராஜ்  பாஷாவை அடித்ததை அறிந்து சந்தோஷப்பட்டு அவரை புன்முறுவலுடன் ஆதரிக்கிறார். கௌதம் இரு காவல் அதிகாரிகளுக்கிடையே இடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறார். இறுதியில் கௌதம்மால் காவல் நிலையத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா? காரில் இருக்கும் சடலத்தை கண்டுபிடித்தார்களா? கொலை செய்யப்பட்ட பெண் யார்? இவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சதீஷ் படம் முழுவதும் செய்த தவறை மறைக்க பதட்டத்துடன் காணப்படுவதும், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் காட்சிகளுக்கு வலு சேர்கிறது. அதுமட்டுமில்லாமல் அப்பாவித்தனமாகவும், காவலர்களிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதும், அடி வாங்குவதும் என்று பரிதாபம் ஏற்படும் நேரத்தில் க்ளைமேக்சில் கொடுக்கும் திருப்புமுனை தான் படத்தின் ஹைலைட்ஸ்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக தன் கடமையை செய்து கொண்டிருக்கும் அஜய் ராஜ் ஒவ்வொரு முறையும் பாவெல் நவகீதனை பழி வாங்க கொடுக்கும் வேலைகள், இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ எப்படி அவருக்கு எதிராகவே இறுதியில் கதை மாறுகிறது என்பதே முக்கிய அம்சம். அமைதியாக, யோசனையுடன் எடுக்கும் முடிவுகள், என்ன செய்யலாம் என்பதை தீர்மானித்துக் கொண்டு செய்யும் காரியங்கள் என்று அஜய்ராஜ் படத்தின் இன்னொரு சைலன்ட் கில்லர் ஹீரோ. வெல்டன்.

பாவெல் நவகீதன் முரட்டுதனம் மிகுந்த காவல் அதிகாரியாக ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய முக்கிய பங்களிப்பை கொடுத்து முறைப்பு, விறைப்பு, வெறுப்பு கலந்த பார்வை என்று அச்சு அசலாக தன் கதாபாத்திரத்தின் தன்மைக்குகேற்றவாறு அழுத்தமான பதிவை கொடுத்துள்ளார்.

மைம் கோபி, ரித்திகா, கேபி சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் மற்றும் பலர் கவனிக்க வைத்துள்ளனர்.

ஏற்காட்டின் அசுர அழகை இரவில் படம்பிடித்து, படத்தின் சூழலுக்கு ஆழம் சேர்த்து காவல் நிலையத்தை சுற்றியே படம் நகர்ந்தாலும் வித்தியாசமான கோணத்திலும் விசாரிக்கும் விதத்திலும் நம்பகத்தன்மையோடு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

எம்.எஸ்.ஜோன்ஸ்; ரூபர்ட்டின் பின்னணி ஸ்கோர் பதற்றத்தை ஏற்படுத்தி விறுவிறுப்பை கூட்டியுள்ளது, மேலும் மார்ட்டின் டைட்டஸின் எடிட்டிங் கதை சீராக ஓடுவதை உறுதிசெய்து, அதன் பரபரப்பான வேகத்தை பராமரிக்கிறது.

காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து கொலை, குற்றவாளி, சூழ்ச்சியோடு பழி வாங்கும் சஸ்பென்ஸ் கலந்த கதைக்களமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சாச்சி. முதல் பாதி கதாபாத்திரங்களின் பின்னணியை விவரிப்பதும், இரண்டாம் பாதியில் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக சீராக விலகும் விதமாக காட்சிபடுத்தி தன் திறமையால் அசத்தியுள்ளார் இயக்குனர் சாச்சி. இந்தப் படம் போலீஸ் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான முன்னோட்டத்தோடு, அவர்களின் முரட்டுத்தனம், லஞ்ச ஊழல்கள் மட்டுமல்லாமல் இருண்ட, மிகவும் மோசமான பக்கத்துடன் காட்டி, அதே சமயம் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டாலும் அதிலிருந்து விடுபட சட்டத்தை தங்களுக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும் ஆற்றம் மிக்கவர்கள் என்பதை தௌ;ளத்தெளிவாக கதைக்களத்தை மிகுந்த விறுவிறுப்புடன், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் கொடுத்து அதையும் மீறி ஒருவன் பழி வாங்க எடுக்கும் முயற்சியில் கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் சாச்சி.

மொத்தத்தில், சண்முகம் கிரியேஷன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத்வாஜ் முரளி கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீPராம் சத்ய நாராயணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் சட்டம் என் கையில் வித்தியாசமான கோணத்தில் அனைவருக்கும் த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்து அசத்தியுள்ளது.