குழந்தைகள் முன்னேற்ற கழகம் சினிமா விமர்சனம் : குழந்தைகள் முன்னேற்ற கழகம் குழந்தைகளின் அரசியல் சதுராட்டம் | ரேட்டிங்: 2/5

0
192

குழந்தைகள் முன்னேற்ற கழகம் சினிமா விமர்சனம் : குழந்தைகள் முன்னேற்ற கழகம் குழந்தைகளின் அரசியல் சதுராட்டம் | ரேட்டிங்: 2/5

மீனாட்சி அம்மான் மூவிஸ் சார்பில்  அருண்குமார் சம்மந்தம் மற்றும் சங்கர் தயாள்.என் தயாரித்திருக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் தயாள்.என்.

இதில் செந்தில், யோகிபாபு, இமயவர்மன், (இயக்குநர் சகோதரர் மகன்) அத்வைத் ஜெய் மஸ்தான் (இயக்குநர் மகன்) ஹரிகா கொயிலம்மா (அன்டே சுந்தரனிகி) பவாஸ் (மாஸ்டர்), பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி, ப்ராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் மூர்த்தி, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:- ஒளிப்பதிவு:- ஜே. லக்ஷ்மேன், எடிட்டர்: ரிச்சர்ட் கெவின் .ஏ, இசை இயக்குனர்: “சாதக பறவைகள்” ஷங்கர், கலை இயக்குநர்: சி.கே. முஜிபூர் ரஹ்மான், நிர்வாக தயாரிப்பாளர்- பாண்டியன் நன்மாறன், நடனக் கலை- ராதிகா, அபு, பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

ஆளும் அரசியல் கட்சியின் தலைவரான பக்கிரிசாமிக்கு(செந்தில்) நெருக்கமானவர்களாக ஆதிமூலமும் (யோகிபாபு), சாணக்கியர் (சுப்பு பஞ்சு) என்ற இரு ஊழல் அரசியல்வாதிகள் பக்கபலமாக இருக்கிறார்கள். இருவருக்குள் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டி பொறாமை இருந்து கொண்டே இருக்கிறது. ஆதிமூலத்துக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும் தனித்தனியே வாழ்கின்றனர்.  மூத்த மனைவிக்குப் பிறந்தவன் பல்லவன் (இமயவர்மன்), இரண்டாவது மனைவிக்குப் பிறந்த ​மகன் அலெக்சாண்டர் (அத்வைத்). இருவரும் ஒரே பள்ளியில் படிக்க உள்ளுக்குள் வெறுப்பு புகைந்து கொண்டே இருக்கிறது.பள்ளியிலிருந்தே அரசியல் வாரிசாக பல்லவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரு முயற்சி செய்கிறான். அதற்காக சக மாணவ மாணவிகளுடன் கெத்தாக வலம் வருகிறான், இதனை அறியும் அலெக்சாண்டர் அண்ணனை ஆதரிப்பது போல் நடித்து பல வழிகளில் தடங்கல் செய்கிறான். இருவரும் அரசியலில் முழு மனதாக இறங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்க, இவர்களின் ஆசை பெரியவர்களானதும் நிறைவேறியதா? குழந்தைகளை வைத்து சாணக்கியர் என்ன அரசியல் செய்தார்? இதனால் அரசியலில் வளர்ந்த பிறகு எந்த பதவிக்கு சென்றார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

செந்தில், யோகிபாபு, இமயவர்மன், (இயக்குநர் சகோதரர் மகன்) அத்வைத் ஜெய் மஸ்தான் (இயக்குநர் மகன்) ஹரிகா கொயிலம்மா (அன்டே சுந்தரனிகி) பவாஸ் (மாஸ்டர்), பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி, ப்ராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் மூர்த்தி, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ் இவர்களுடன் அனுபவ நடிகர்களும் இவர்களுக்கு துணையாக நடித்திருப்பது குழந்தைகள் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு:- ஜே. லக்ஷ்மேன், எடிட்டர்: ரிச்சர்ட் கெவின் .ஏ, இசை இயக்குனர்: ‘சாதக பறவைகள்” ஷங்கர், கலை இயக்குநர்: சி.கே. முஜிபூர் ரஹ்மான், நடனம்: ராதிகா, அபு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி சிறப்பாக உள்ளது.

குழந்தைகளை வைத்து அரசியல் பேசியிருக்கிறார் இயக்குனர் சங்கர் தயாள்.என். பள்ளியிலேயே அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி, ஊழலை மையமாக வைத்து அரசியல் வாரிசு குழந்தைகள் செய்யும் நகைச்சுவை திரைக்கதையை சுவாரஸ்யம் போதிய அழுத்தம் இல்லாமல் எழுதி இயக்கியுள்ளார் சங்கர் தயாள்.என்.

மொத்தத்தில் மீனாட்சி அம்மான் மூவிஸ் சார்பில்  அருண்குமார் சம்மந்தம் மற்றும் சங்கர் தயாள்.என் தயாரித்திருக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம் குழந்தைகளின் அரசியல் சதுராட்டம்.