கிங்ஸ்டன் சினிமா விமர்சனம் : கிங்ஸ்டன் பிரமிக்கும் காட்சிகளின் லட்சிய சாகச பயணம் | ரேட்டிங்: 3/5
இதில் கிங்ஸ்டன் – ஜி.வி. பிரகாஷ் குமார், ரோஸ் – திவ்யபாரதி, சாலமோன் – சேத்தன், ஸ்டீபன் போஸ் – அழகம் பெருமாள், மார்டின் – இ. குமரவேல், தாமஸ் – சாபுமோன் அப்துசாமத், லிபின் – ஆண்டனி, காட்ஸன் – ராஜேஷ் பாலாசந்திரன் , பிலிப்ஸ் – அருணாசலேஸ்வரன், பென்ஜமின் – பிரவீன், கிரியசர்- ஃபயர் கார்த்திக் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – கோகுல் பினாய், இசை – ஜி.வி. பிரகாஷ் குமார் , படத்தொகுப்பு – சான் லோகேஷ் , கலை இயக்குனர் – எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டை இயக்குனர் – திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி,Pசுழுளுவுர்நுவுஐஊ ஆயுமுநுருP – பிரதீப் விதுரா, மக்கள் தொடர்பு – யுவராஜ்
மீன்பிடி நகரமான தூவத்தூரில் 1982 ஆம் ஆண்டில் அகால மரணமடைந்த ஸ்டீபன் போஸ் (அழகம் பெருமாள்) ஆவி தான் பழி வாங்குவதாக கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் திரும்பி சடலமாக வருவதற்கு காரணம் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் மீன்பிடி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்@ர்வாசிகள் பிற வாழ்வாதாரத்தை நாட வேண்டிய சூழ்நிலையில் தூத்துக்குடியின் மீன்பிடி மையத்திற்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கிராம மக்கள் 43 ஆண்டுகளாக தூவத்தூர் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. நிகழ்காலமான 2025 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தாமஸ் (சபுமோன் அப்துசமத்) தலைமையிலான ஒரு கடல் அட்டை கடத்தல் கும்பலுக்காக வேலை செய்கிறார் கிங் (ஜி.வி.பிரகாஷ் குமார்). தாமஸ் சொல்லும் ஆட்களுக்கு பண பட்டுவாடா செய்யும் கிங் தான் சொந்தமாக படகை வாங்கி தூவத்தூர் கடலில் ஒட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன் தந்தை கடலில் இறப்பதற்கு மீனவ மக்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நம்ப மறுக்கிறார். இந்நிலையில் தாமஸ் சட்டவிரோத செயல்களை செய்வதை அறியும் கிங் அந்த வேலையிலிருந்து விலகுகிறார்.அதனால் கோபமடையும் தாமஸ் ஆட்களை அனுப்பி கிங்கை சொல்லச் சொல்கிறார். இவர்களின் துரத்தலை தாக்கு பிடித்து தப்பித்து தாமஸ{ற்கு சொந்தமான படகை எடுத்துக்கொண்டு தூவத்தூர் கடலில் நண்பர்களுடன் தப்பிச் செல்கிறார். அந்த படகில் தப்பிப்பதற்கு முன் தாமஸ் மற்றும் அவரின் கூட்டாளிகளை பிடித்து படகில் உள்ள ஒரு அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைத்திருக்கிறார். கிராமவாசிகளின் எச்சரிக்கைகளை மீறிச் கடலுக்கு சென்ற கிங் ஸ்டீபன் ஆவியிடம் மாட்டிக் கொண்டாரா? அங்கே நடக்கும் அமானுஷ்ய விஷயங்களிலிருந்து தப்பித்தாரா? தனது கிராமத்தின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தாரா? இந்த கட்டுக்கதைகளுக்கு பின்னால் யார் இருந்தார்கள்? அதற்கான காரணம் என்ன? மீண்டும் தூவத்தூர் மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜி. வி. பிரகாஷ் குமார் சிரமமின்றி கவலையின்றி சுற்றித் திரியும் மீனவ இளைஞராக வருவதும், அதன் பின்னர் மக்களின் துயரத்தை உணர்ந்து அதற்கான முயற்சியை கையிலெடுத்து செல்லும் சாகச பயணத்தில் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள், கடலில் தத்தளிக்கும் காட்சிகளில் தனி முத்திரை பதித்து உடல் மொழியிலும், உணர்ச்சிகரமான வசன உச்சரிப்பிலும் சிறப்பாக செய்துள்ளார்.
திவ்ய பாரதி காதலியாக சப்போர்டிவ் ரோலில் நடித்து கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
வில்லனாக சேத்தன், அழகம் பெருமாள், ஷபு மோன், குமரவேல், சாபுமோன், ஆண்டனி, அப்துசமத், ஆண்டனி, ராஜேஷ் பாலாசந்திரன், அருணாச்சலேஸ்வரன் மற்றும் பிரவீன் ஆகியோர் படத்திற்கு உற்ற துணையாக இருந்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.
கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படத்திற்கு மதிப்பு சேர்த்துள்ளதோடு, கடலில் தத்தளிக்கும் காட்சிகளை தத்ரூபமாக கொடுத்தும், பயமுறுத்தும் காட்சிகள், கடலில் மிதக்கும் மனித எலும்புகள், ஜோம்பிகள், தங்க புதையல், கடல் கிராமம், சண்டைக் காட்சிகள் என்று தன்னுடைய உழைப்பையும், திறமையையும் திறம்பட இதில் ஒட்டுமொத்தமாக கொடுத்து பெரும் பங்களிப்பில் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
;வி.எஃப்.எக்ஸ் மற்றும் சிஜிஐ தொழில்நுட்பத்தில் கவனிக்க வைத்துள்ளனர்.
சான் லோகேஷின் எடிட்டிங் மிகவும் சிறப்பாக இருந்திருக்கலாம். மெதுவாக செல்லும் முதல் பாதி கதைக்களமும், தேவையில்லாத பல காட்சிகள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதை தவிர்த்திருக்கலாம்.
மூன்று காலகட்டங்களில் 1982, 2009, 2025 நடக்கும் சம்பவங்களாக கற்பனை கலந்த கடல் சாகச திரைக்கதையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ். சுவாரஸ்யமாக வடிவமைக்ககூடிய கதையில் காட்சிகள் நான் லீனியர் பாணியில் காட்டப்படுவதால் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், கதைக்குள் கிளை கதையாக பல வருவதால் இடைவேளைக்கு பிறகு தான் படத்தின் வேகத்தை கொஞ்சம் பார்க்க முடிகிறது. கடல் பயணத்தில் ஏற்படும் திகில், த்ரில் அனுபவங்கள், அலைகளின் ஆர்பரிப்பு, தத்தளிக்கும் படகு, ஜோம்பிக்களின் பயமுறுத்தல்கள், தங்க புதையல், அதை எடுப்பவர்களை பழி வாங்கும் ஆவி என்று சுவாரஸ்ய குவியல்கள் இருந்தாலும் எதுவும் பயமுறுத்தவில்லை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் இயக்குனர் கமல் பிரகாஷின் கடல் சாகசம் நிறைந்த கதையின் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், உமேஷ் கே.ஆர்.பன்ஸல், பவானி ஸ்ரீ இணைந்து தயாரித்துள்ள கிங்ஸ்டன் பிரமிக்கும் காட்சிகளின் லட்சிய சாகச பயணம்.