எமன் கட்டளை சினிமா விமர்சனம்: | ரேட்டிங்: 3/5
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘எமன் கட்டளை’.
சந்திரிகா, டி பி கஜேந்திரன், அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா நடித்திருக்கின்றனர்.
என்.எஸ்.கே இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஏ.கார்த்திக் ராஜா. பாடல்கள் சினேகன், நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ, கதை வசனம் வி.சுப்பையன். தயாரிப்பு டாக்டர்.எஸ்.ஏ. கார்த்திகேயன். திரைக்கதை இயக்கம் எஸ்.ராஜசேகர். மக்கள் தொடர்பு வெங்கட்
குற்ற உணர்ச்சிக்கும் விரக்திக்கும் இடையில் சிக்கி, குருவின் வாழ்க்கை, கமலி என்ற மணப்பெண்ணின் விலைமதிப்பற்ற நகைகளைத் திருடிய பிறகு சுழல்கிறது. உதவி இயக்குனராக இருக்கும் குரு (அன்பு) பல இடங்களில் இயக்குனராக வாய்ப்பு தேடி அலைந்தும் வாய்ப்பு கிடைக்காததால் தானே ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து தன் நெருங்கிய நண்பனுடன் சேர்ந்து பணத்திற்காக ஒரு திருமண மண்டபத்தில் நுழைந்து கமலி (சந்திரிகா) என்ற மணமகளின் நகைகளை கொள்ளை அடிக்கிறார்கள். அதனால் கமலி திருமணம் நின்று போகிறது. மனமுடைந்த தந்தையும் (டி பி கஜேந்திரன்) மனமகள் கமலியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தன்னுடைய இந்த செயலால் மணமகள் கமலியின் கனவுகள் சிதைந்து போய் தந்தையும், மகளும் தற்கொலை செய்துக் கொண்டதாக நினைத்து, குற்ற உணர்ச்சியால் குரு விஷம் அருந்தி தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். குரு எமலோகத்தில் யமனை நேருக்கு நேர் சந்திக்கிறார். விஷம் அருந்திய தந்தையும், மகளும் இறக்க வில்லை என்ற செய்தியை எமன் குருவிடம் கூறுகிறார். தற்கொலைக்கு முயற்சி செய்த தந்தை, மகள் நிலைமைக்கு நீ தான் காரணம். அதனால், கமலியின் திருமணத்தை 60 நாட்களில் நீயே நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியதுடன் அந்த திருமணம் நடைபெற பல நிபந்தனைகளை சொல்லுகிறார் எமன். 60 நாட்களில் கமலிக்கு திருமண ஏற்பாடுகளை முடிக்காவிட்டால் உன் தலைவெடுத்து நீ இறப்பாய் என்று எச்சரித்து, 60 நாளில் அந்த டாஸ்க்கை முடிப்பதற்கு ஏதுவாக மூன்று ‘ஹெல்ப் லைன்’களை எமன் அளித்து மீண்டும் குருவுக்கு உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார். ஒரு அரிய இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்ட குரு, தனது தவறுகளை சரி செய்து, மரியாதை மற்றும் அன்பை மீட்டெடுக்கப் போராடுகிறார். கமலியின் வீட்டுக்கு மேல் பகுதியில் வாடகைக்கு தனது நண்பன் அர்ஜுனனுடன் குடியேறி விடுகிறார் குரு. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை அறிய மீதிக்கதையை வெள்ளித்திரையில் காண்க.