ஆகக்கடவன சினிமா விமர்சனம் : ஆகக்கடவன பிரபஞ்ச விதியின் சுழற்சியை நேர்த்தியான திருப்புமுனையுடன் வித்தியாசமான திரைக்கதையுடன் புதுமையான த்ரில் அனுபவம் | ரேட்டிங்: 3/5

0
286

ஆகக்கடவன சினிமா விமர்சனம் : ஆகக்கடவன பிரபஞ்ச விதியின் சுழற்சியை நேர்த்தியான திருப்புமுனையுடன் வித்தியாசமான திரைக்கதையுடன் புதுமையான த்ரில் அனுபவம் | ரேட்டிங்: 3/5

சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ மற்றும் லியோ வி ராஜா இணைந்து தயாரித்திருக்கும் ஆகக்கடவன படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தர்மா.

இதில் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் விஜய் நிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினரகள் :இசை : சாந்தன் அன்பழகன், ஒளிப்பதிவு : லியோ வி ராஜ், படத்தொகுப்பு : சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ், பாடல்கள் : விக்கி, சண்டைபயிற்சி : தேசாய், கலை இயக்குனர் ​: விஜயவீரன், ஒளிக்கலவை : வினோத்குமார், ஒலி வடிவமைப்பு : சதிஷ்குமார், ஒலிக்கலவை : ராஜா நல்லைய்யா, மக்கள் தொடர்பு : எம்.பி.ஆனந்த்

ஆரம்பத்தில் நற்குணம், பட்டாணி, தாஸ் (வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ்) ஆகியோர் ஒரு இளைஞனை காரில் கடத்திக் கொண்டு செல்வதுபோல் கதைக்களம் தொடங்குகிறது. அதன் பின் காட்சிகள் மூன்று நண்பர்களை சுற்றி நடக்கிறது. கள்ளக்குறிச்சியில் இருக்கும் ஆதித்யா (ஆத்திரான் சுரேஷ்) மற்றும் விக்கி (சி.ஆர்.ராகுல்) புகழ் (ராஜசிவன்) ஆகிய மூன்று பேரும் மெடிக்கல் கடையில் வேலை செய்யும் போது நண்பர்களாகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக மெடிக்கல் கடை நடத்த வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இந்நிலையில் அந்த மெடிக்கல் கடையின் முதலாளி மகளின் திருமண பணத்தேவைக்காக நடத்தி வரும் கடையை 6 லட்சத்திற்கு மூன்று பேருக்கும் விற்க முடிவு செய்கிறார். அதற்கான பணத்தை மூன்று நண்பர்களும் ஏற்பாடு செய்து தங்கியிருக்கும் வீட்டில் வைத்திருக்க, அந்தப் பணம் திருடு போக போலீசில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்  இருப்பதால்  அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதித்யா தன் தந்தையிடம் பணம் கேட்க, நிலத்தை விற்று தருவதாகவும் ஊருக்கு கிளம்பி வருமாறும் தந்தை சொல்கிறார். அதனால் தன்னிடம் உள்ள நகையுடன் ஆதித்யா, விக்கி துணையுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கின்றார். புகழ் தாமதமாக வந்து சேர்ந்து கொள்வதாக சொல்ல, இருவரும் ஊருக்கு கிளம்புகின்றனர். ஆள் ஆரவரமற்ற காட்டுப்பகுதியில் வரும் போது ஆதித்யாவின் இருசக்கர வாகனம் பழுதாக, அருகில் பஞ்சர் கடையை தேடுகின்றனர். அங்கே சுவற்றில் பஞ்சர் கடை நம்பர் இருக்க, அந்த நம்பரில் தொடர்பு கொள்ள, அந்த கடைப்பையன் பஞ்சர் கடையின் முகவரியை சொல்லி, சிறிது நேரத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம் வரும் அதில் ஏறி வருமாறு கூறுகிறான். இருவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் பஞ்சர் கடைக்கு வருகிறது. மதிய உணவு வேளை என்பதால் சாப்பிட்டு விட்டு பழுதை சரி செய்வதாக அந்த கடைப்பையன் சொல்லிவிட்டு சென்று விடுகிறான். அந்த இடத்தில் கடத்தல் கும்பல் நடமாடுவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் அந்த பஞ்சர் கடை இடம் இருப்பதும், சிறு சிறு வாக்குவாதங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதனிடையே வண்டியின் பழுதை சரி செய்தவுடன் இருவரும் கிளம்பி சிறிது தூரம் சென்றவுடன், வண்டியில் பெட்ரோல் இல்லாததால் நின்று விடுகிறது. இதனால் பெட்ரோலை திருடி விட்டார்கள் என்று கோபமாகும் விக்கி மீண்டும் பஞ்சர் கடைக்கு வந்து தகராறு செய்ய, நடக்கும் கைகலப்பில் விக்கி காணாமல் போய் விடுகிறான். விக்கியை தேடும் ஆதித்யா, அங்கிருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்கு வருகிறான். இருவரையும் தேடி வரும் புகழ் கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் மூவரும் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்து சென்றார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? எதற்காக இவர்களை குறி வைத்து கடத்தல் கும்பல் தாக்கியது? இவர்களுக்கும், கடத்தல் கும்பலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி தப்பித்தார்கள்? மெடிக்கல் கடை நடத்தும் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

மூன்று நண்பர்களாக ஆதிரன் சுரேஷ், சி.ஆர். ராகுல், ராஜசிவன் ஆகியோர் யதார்த்தமாக திரைக்கதையில் தங்களின் உணர்;வுகளின் வெளிப்பாட்டை நேர்த்தியாக கொடுத்துள்ளனர். இவர்களில் ஆதிரன், ராகுல் உரையாடல்கள் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் அழுத்தமான பதிவுடன், இயல்பாக பேசுவது போல் அமைக்கப்பட்டு, புரியாத புதிராக இருக்கும் அந்த மர்மமான மனிதர்களின் செயல்பாட்டை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவதும், ஆதிரனின் அமைதியோடு சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனவலிமை, சட்டென்று வரும் ராகுலின் முன்கோபம், சமயோஜிதமாக செய்யும் காரியம், எப்படி அவர்களின் உயிரை காப்பாற்றுகிறது என்று படத்தில் இவர்களின் பங்கு சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று கடத்தல் வில்லன்களாக வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் ஊடுறுவும் பார்வை, மிரட்டும் தோனியில் நடந்து கொள்ளும் விதம், ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் என்று மிரள வைத்துள்ளனர். இவர்களுடன் அப்பாவி பஞ்சர் கடை சிறுவன் தக்ஷன் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.

தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான லியோ வி ராஜா தன்னுடைய காட்சிக் கோணங்களில் கடத்தல் சம்பவங்கள், மெடிக்கல் கடை, வீடு, தெருக்கள், முள்ளுக்காட்டுப்பகுதி, பஞ்சர் கடை சுற்றியுள்ள இடங்கள், ஆக்ஷன் காட்சிகள் என்று திறம்பட கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகன் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் புதிரான காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் கச்சிதமாக செதுக்கியுள்ளனர்.

கடத்தல், கொள்ளை, கொலை சம்பந்தப்பட்ட திரைக்கதையில் 6 முக்கிய ஆண் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு சுவாரஸ்யம் குறையாமல், படபடப்பை எகிறும் வண்ணம், தோய்வில்லாத திரைக்கதையமைத்து, அத்தனை சம்பவங்களின் தொடர்ச்சியை ஒன்றிணைத்து, பேசும் கோபமான வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதத்தில் தான் சம்பவங்கள் நடக்கிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தி அனைவரையும் அசரும் வண்ணம் இயக்கியுள்ளார் தர்மா. ஆகக்கடவன என்றால் அப்படியே ஆகட்டும் என்பது பொருள். பெரியவர்கள் ஒருசொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள் அதாவது  யாரிடம் பேசினாலும் கவனமாக பேச வேண்டும் நம்முடைய சொல் சரியானதாக இருந்தால் வெற்றிபெறலாம். தவறான சொல்லால் கலவரமாகி எதிர்பாராத வெறுப்புக்கள், இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைத்தான் இயக்குனர் தர்மா இந்தப் படத்தின் மூலம் தெளிவாக புரியவைத்துள்ளார்.

மொத்தத்தில் சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ – லியோ வி ராஜா இணைந்து தயாரித்திருக்கும் ஆகக்கடவன பிரபஞ்ச விதியின் சுழற்சியை நேர்த்தியான திருப்புமுனையுடன் வித்தியாசமான திரைக்கதையுடன் புதுமையான த்ரில் அனுபவம்.