அயோத்தி விமர்சனம்: அயோத்தி என்பது பெயரளவே தவிர மனித நேயத்திலும், அன்பிலும், சகோதரத்துவத்திலும் உலகளவு. அனைவரும் பார்க்க வேண்டிய மெய் சிலிர்க்கும் படம் | ரேட்டிங்: 4/5

0
740

அயோத்தி விமர்சனம்: அயோத்தி என்பது பெயரளவே தவிர மனித நேயத்திலும், அன்பிலும், சகோதரத்துவத்திலும் உலகளவு. அனைவரும் பார்க்க வேண்டிய மெய் சிலிர்க்கும் படம் | ரேட்டிங்: 4/5

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்து அயோத்தி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி.
இதில் சசிகுமார், யஷ்பால் ஷர்மா, பிரித்தி அஸ்ரானி, புகழ், அஞ்சு அஸ்ரானி  மற்றும் அட்வந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-மாதேஷ்மாணிக்கம், இசை-என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டர்-சான் லோகேஷ், கலை-ஜி.துரைராஜ், சண்டை-தினேஷ் சுப்பராயன், நடனம்-ஷெரிஃப், உடை-கீர்த்திவாசன், தயாரிப்பு நிர்வாகி-லிண்டா அலக்சாண்டர், பிஆர்ஒ-நிகில்.

அயோத்தியில் கடவுள் நம்பிக்கை மிகுந்த பல்ராம் நதியருகே கடை நடத்தி வருகிறார். மனைவி ஜானகி, கல்லூரி படிக்கும் ஷிவானி, மகன் சோனு என்று சிறு குடும்பம். பல்ராம் கண்டிப்பு மிக்கவர், மனைவியையும், குழந்தைகளையும் மதிக்காதவர், பிடிவாத குணம் கொண்டவர் ஆணாதிக்கத்தின் உச்சம். குடும்பத்தினருடன் புனித யாத்திரையாக ராமேஸ்வரம் n;சல்ல முடிவு செய்து தீபாவளியன்று ரயிலில் கிளம்புகிறார். மதுரை வந்தடையும் அனைவரும் அங்கிருந்து கால் டாக்சியில் மீதி பயணத்தை தொடர்கின்றனர். பல்ராமின் அடாவடித்தனத்தாலும், அவசரத்தாலும் வண்டி பெரும் விபத்து ஏற்பட்டு மனைவி ஜானகி அடிபட்டு உயிருக்கு போராடுகிறார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜானகி இறந்ததும் விஷயங்கள் சிக்கலாகின்றன. எஞ்சிய கதையில், ஆதரவற்ற நிலையில் நிர்கதியாக நிற்கும் இரண்டு குழந்தைகளும் தங்கள் மிகுந்த மத நம்பிக்கையுடைய தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர் சசிகுமாரும், புகழும் பார்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து அந்த தாயின் உடலை விமானத்தில் எடுத்துச் செல்ல நண்பர்களிடம் உதவி கேட்கின்றனர்.எவ்வாறு எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல சசிகுமாரும், புகழும் உதவுகிறார்கள் என்பதை சித்தரிப்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சசிகுமார் தனது கதாபாத்திரத்தை சரியாக ஏற்று நடித்து படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து ஒரு வடநாட்டு குடும்பத்தை  தன் குடும்பம் போல் பாவித்து இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்து வழி அனுப்பி வைக்கும் தருணத்தில் சகோதரனாக இருந்து மெய் சிலிர்க்க வைத்து விடுகிறார். எப்போழுதும் நட்பை தூக்கி பிடிக்கும் சசிகுமார் இந்த படத்தில் அன்பு, சகோதரத்துவத்தை மேலோங்க செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரை சித்தரிக்கும் இடங்களிலெல்லாம் பெயரை சொல்லாமல் இறுதியில் அவரது கதாபாத்திரத்தின் பெயரை வெளிப்படுத்தும் போது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

ஷிவானியாக ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பு அலாதியானது, உணர்ச்சிபூர்வமானது, தன் தாயின் மேல் இருக்கும் பாசத்தையும், தந்தை மேல் இருக்கும் வெறுப்பையும். தம்பி மேல் இருக்கும் அன்பையும் ஒருசேர தன் முகபாவத்தால் காட்சிப்படுத்தும் விதமும், அயோத்திக்கு திரும்பி செல்ல எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து சசிகுமாருக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் கண் கலங்க செய்து விடுகிறார். மேலும் அவரது நடிப்புத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளது. பாராட்டுக்கள்.

பழமைவாத  மனப்பான்மை கொண்ட மனிதராக பல்ராமாக யஷ்பால் ஷர்மாவின் தேர்ந்த நடிப்பும் மிகுந்த ஈடுபாடுடன் அச்சு அசலாக  நன்றாக பிரதிபலித்துள்ளார். இறுதியில் தன் தவறை உணர்ந்து சசிகுமரிடம் மன்னிப்பு கேட்டு குடும்பத்தின்  மதிப்பையும், உன்னதத்தையும் புரிந்து கொண்ட மனிதராக மாறும் தருணம் சிறப்பு.

தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்து நகைச்சுவை நடிகராக இல்லாமல் குணச்சித்திர வேடத்தில் புகழைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது.
தாய் ஜானகியாக அஞ்சு அஸ்ரானி அசத்தலான, நெகிழ்ச்சியான நடிப்பு, இவரை மையப்படுத்தி கதைக்களம் இருப்பதால் கூடுதல் சிறப்பு மற்றும் மகனாக அட்வந்த் பயமும், கலக்கமும் நிறைந்த அழுத முகத்துடன் கண் முன்னே நிற்கிறார்.

இசையமைப்பாளர் என்.டி.ரகுநந்தனின் பின்னணி இசை, உணர்ச்சிகரமான காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்தி, திரையில் வரும் கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்களை பலமுறை இணைக்க பயணிக்க உதவுகிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு உணர்ச்சிகளைத் திறம்படப் படம்பிடித்து, அவருடைய திறமையை பேச வைக்கிறது. முதல் காட்சியிலேயே அதன் தரம் தெளிவாகத் தெரிகிறது மற்றும் அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் இடங்கள் அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன. வெல்டன்.

வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் உணர்வுகளோடு பார்வையாளர்களும் பயணிப்பது தமிழ் சினிமாவில் அரிதான நிகழ்வாகும். மந்திரா மூர்த்தி இயக்கிய அயோத்தி, மெலோடிராமாடிக் அணுகுமுறை இருந்தபோதிலும் அதன் பார்வையாளர்களுக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படமாகும். இது மதம், மூடநம்பிக்கைகள், ஆண்களின் பேரினவாத மனப்பான்மை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை படம் தொட்டுச் செல்கிறது.அயோத்தி, உணர்வுப்பூர்வமான படமாக மதம், சாதி, மதம், இனம் எனப் பல்வேறு பெயர்களில் உருவாகும் சண்டையை மையப்படுத்தாமல் மனிதப் பண்பை படம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதில் இந்தி பேசும் வசனங்கள் எந்தவொரு தமிழாக்கம் இல்லாமல் காட்சிகளின் மூலம் புரிய வைத்திருக்கும் விதம் வித்தியாசமான முயற்சியால் படத்திற்கு ப்ளஸ்.

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் அயோத்தி என்பது பெயரளவே தவிர மனித நேயத்திலும், அன்பிலும், சகோதரத்துவத்திலும் உலகளவு. அனைவரும் பார்க்க வேண்டிய மெய் சிலிர்க்கும் படம்.