அந்தகன் சினிமா விமர்சனம் : அந்தகன் முடிவில்லாத ஏதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ரோலர் கோஸ்டர் த்ரில்லிங் ரைட் பார்க்கலாம், ரசிக்கலாம் வியக்கலாம் மாபெரும் வெற்றியில் திளைக்கலாம் | ரேட்டிங்: 4/5

0
1126

அந்தகன் சினிமா விமர்சனம் : அந்தகன் முடிவில்லாத ஏதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ரோலர் கோஸ்டர் த்ரில்லிங் ரைட் பார்க்கலாம், ரசிக்கலாம் வியக்கலாம் மாபெரும் வெற்றியில் திளைக்கலாம் | ரேட்டிங்: 4/5

ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்து பிரீத்தி தியாகராஜன் வழங்கி தியாகராஜன் இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’.

இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ரவி யாதவ் – ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் – இசை, செந்தில் ராகவன் – கலை இயக்கம், சதீஷ் சூர்யா – படத்தொகுப்பு, வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர், மக்கள் தொடர்பு -நிகில்முருகன்.

பாண்டிச்சேரியில் திறமையான பியோனோ இசைக்கலைஞர் கிருஷ் (பிரஷாந்த்) போதிய வருமானம் இல்லாததால் பார்வையற்ற இசைக்கலைஞர் என்ற போர்வையில் நடித்து சம்பாதிக்கிறார். இங்கே இரண்டு லட்சத்தை சம்பாதித்துக்கொண்டு லண்டனுக்குச் சென்று பெரிய இசைக் கலைஞர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிரிஷ் வாழ்கிறார். ஒரு நாள் ஜூலியின் (பிரியா ஆனந்த்) இரு சக்கர வாகனத்தில் அடிபடும் கிருஷ்ஷிற்கு அவர் மூலம் அவருக்கு சொந்தமான ரெஸ்ட்ரோ பாரில் பியோனோ வாசிக்க வாய்ப்பு கிடைக்க மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டு சென்று வர கூடவே ஜூலியின் நட்பும் கிடைக்கிறது. அந்த ரெஸ்டோ பாரில் ரெகுலர் கஷ்டமர் முன்னாள் கதாநாயகன் கார்த்திக் (கார்த்திக்). கிருஷ்ஷின் இசைத் திறமையை கண்டு வியந்து தன் திருமண நாள் அன்று வீட்டிற்கு வந்து தன் மனைவி சிமி (சிம்ரன்) முன் வாசித்து சர்ப்ரைஸ் தர முன் பணம் கொடுத்து வரச்சொல்கிறார். அதன் பின்னர் வீட்டிற்கு வரும் கார்த்திக் மனைவி சிமியிடம் பெங்க@ர் செல்வதாக பொய் சொல்லிவிட்டு செல்கிறார். மறுநாள் நடிகர் கார்த்திக் வீட்டிற்கு வரும் கிரிஷ் அங்கே கார்த்திக் இல்லை என்று சிமி கூறி வீட்டிற்குள் வந்து பியானோ வாசிக்குமாறு கூறுகிறார். கிருஷ்ஷ_ம் பியோனோ வாசிக்கும் போது அங்கே தரையில் கார்த்திக் சுடப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். கிரிஷ் பார்வையற்றவர் என்பதால் பயப்படாமல் சிமி இன்னொரு மர்ம நபருடன் சேர்ந்து இறந்த கார்த்திக் உடலை சூட்கேசில் பேக் செய்து அனுப்பி விடுவதை பார்க்கிறார். பின்னர் சிமியிடம் சொல்லி விட்டு நயமாக வீட்டிலிருந்து வெளியே வருகிறார் கிருஷ். இந்தக் கொலையைப் பற்றி கிரிஷ் போலீசிடம் சென்று புகார் கொடுத்தாரா? குற்றவாளிகளின் துரத்தலில் இருந்து தப்பிக்க முடிந்ததா? தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் என்ன? சந்திக்கும் ஆபத்து என்ன? இறுதியில் லட்சியக் கனவு நிறைவேறியதா? நிராசையானதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பிரசாந்த் உண்மையான பியோனோ இசைக் கலைஞர் என்பதால் கிரிஷ் கதாபாத்திரத்தை உள்வாங்கி வாசிக்கும் நுணக்கங்களை திறமையாக கையாண்டு அதே சமயம் பார்வை தெரிந்தும் கண் பார்வையற்றவராக நடிக்கவும் செய்து பல பரிணாமங்களில் ஜொலிக்கிறார். இசையால் கிடைக்கும் வேலை, அதன் பின் நட்பான காதல், நடிகரின் விருப்பம், அதனால் ஏற்படும் பேராபத்து என்று ஒவ்வொரு காட்சியிலும் பார்வை இல்லாதது போல் நம்ப வைக்க எடுக்கும் முயற்சிகள், நிஜமாக பார்வை பறி போனதும் தடுமாறும் இடங்களில் மெய் சிலிர்க்கும் நடிப்பில் அசர வைத்துள்ளார் பிரசாந்த். பல இடங்களில் துரோகத்தால் சிக்கினாலும் இவரின் நல்லெண்ணத்தால் உயிர் பிழைக்கும் காட்சிகள் படத்தின் சாராம்சத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. கிரிஷ்ஷாக விரல்களின் அசைவில் பியோனோ வாசிப்பு, திடுக்கிடும் காட்சிகளில் அமைதியை கையாண்டு, அழுத்தமான வசனஉச்சரிப்பு, கட்டுக்கோப்பான உடல் பலத்துடன், அசத்தல் ஆக்ஷனில் மீண்டும் ப்ர்ஷ்ஷாக புது நாயகனாக சீறும் நடிப்பின் நாயகனாக களமிறங்கியிருக்கிறார்.வெல்டன்

சிமியாக சிம்ரன் நெகடிவ் கேரக்டராக தான் நினைத்ததை சாதிக்க எடுக்கும் முயற்சிகள், தன் பேச்சாலேயே வசியம் செய்து நம்ப வைத்து ஏமாற்றுவது, உயிர் பிழைக்க யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பது, இறுதி வரை போராடி தப்பிக்க நினைக்கும் ஷ்டைலீஷ்; கலந்த வில்லத்தனத்தில் படம் முழுவதும் ஆக்ரமித்து ஆடு புலி ஆட்டத்தில் மிரட்டியிருக்கிறார்.

ஜூலியாக கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார் பிரியா ஆனந்த், நடிகராகவே வந்து தன் ஸ்டைலில் துளியும் மாறாத கார்த்திக், இன்ஸ்பெக்டராகவும், கள்ளக்காதலனாகவும் இரண்டையும் கையாண்டு மனைவியையும் சமாளித்து பதட்டமும் முரட்டுத்தன்மையான ரோலில் சமுத்திரக்கனி, கள்ள லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டே குறி சொல்லி பணத்தாசையால் குணம் மாறும் ஊர்வசி, அவருக்கு உடந்தையாக ஆட்டோ டிரைவர் யோகி பாபு, பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து பிழைக்க நினைக்கும் டாக்டர் ஸ்வாமியாக கே. எஸ். ரவிக்குமார், வாய், வம்பு சண்டை போட்டாலும் நல்ல மனைவியாக வனிதா விஜயகுமார், போலீஸ் உதவியாளராக மறைந்த நடிகர் மனோபாலா, சிமியின் நடவடிக்கையை கண்காணித்து போட்டு கொடுத்து உயிரை விடும் லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, முதல் காட்சியில் இவர் செய்யும் செயல் இறுதியில் முக்கிய நிகழ்வின் காரணமாக இருக்கும் பெசன்ட் ரவி, சின்ன வேடம் என்றாலும் தனித்து தெரியும் ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் படத்தின் முதகெலும்பாக இருந்து விறுவிறுப்பை எகிற செய்துள்ளனர்.

இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் லின்டின் நாதஸ்வரம் வாசிக்கும் பியோனோ இசையை கலந்து, சில இடங்களில் இளையராஜாவின் இசையின் பழைய மெலடிகளையும், ‘சந்திரனே சூரியனே’ மற்றும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ பாடல்கள் என்று காட்சிகளுக்குஏற்ப கொடுத்து ஒரு புதிய அனுபவத்துடன் பியோனோ வாசித்து கொண்டே பாடும் பாடல்கள், பின்னணி இசை என்று பரவசத்துடன் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் காட்சிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.

படத்திற்கு ஒரு ப்ரஷ் லுக்கை கொடுத்து, பாண்டிச்சேரி,லண்டன், ரெஸ்டோ பார், அடுக்குமாடி குடியிருப்பு, பழைய ஆஸ்பத்திரி பில்டிங், ஆக்ஷன் காட்சிகள், துரத்தல் காட்சிகள் என்று காட்சிக் கோணங்களை பரபரப்பாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்.

நறுக்கென்று படத்தொகுப்பில் கவனிக்க வைத்துள்ளார் சதீஷ் சூர்யா.

பார்வையற்ற பியானோ கலைஞர்  ஒரு கொலைக்கு சாட்சியாக இருக்க மனசாட்டிக்கு பயந்து புகாரளிக்க முடியாமல் தவிப்பவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் இன்னல்கள், இடர்பாடுகளை சுற்றி நகரும் கதைக்களமாக 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேட் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அதே சாரம்சத்தை உள்ளடக்கி இயக்கியுள்ளார். முதல் பாதி அற்புதமான திரைக்கதை மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விவரிப்பு, கதையின் துணிச்சலான கதாபாத்திரங்கள் மற்றும் தொடர்ச்சியான திருப்பங்கள் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்று கிளாசிக் பாணியில் படபடப்பு, சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த கலவையுடனும்,  இரண்டாம் பாதி குழப்பமான சதி, ஏமாற்றம், துரோகம் கலந்து எதிர்பார்க்காத பதற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான கிளைமாக்ஸ் என்று தோய்வில்லாமல் பயணித்து இறுதி வரை பரபரப்புடன், விறுவிறுப்புடன் இயக்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்து பிரீத்தி தியாகராஜன் வழங்;கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ முடிவில்லாத ஏதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ரோலர் கோஸ்டர் த்ரில்லிங் ரைட் பார்க்கலாம், ரசிக்கலாம் வியக்கலாம் மாபெரும் வெற்றியில் திளைக்கலாம்.