அக்கரன் சினிமா விமர்சனம் : அக்கரன் வில்லன்களை வதம் செய்யும் அசுரன் | ரேட்டிங்: 2.5/5

0
373

அக்கரன் சினிமா விமர்சனம் : அக்கரன் வில்லன்களை வதம் செய்யும் அசுரன் | ரேட்டிங்: 2.5/5

குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரித்திருக்கும் அக்கரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண்.கே.பிரசாத்.

இதில் எம்.எஸ்.பாஸ்கர் – வீரபாண்டி, கபாலி விஸ்வந்த் – சிவா, நமோ நாராயணா – பரந்தாமன், வெண்பா – தேவி, ஆகாஷ் பிரேம்குமார் – அர்ஜுன், பிரியா தர்ஷினி – பிரியா, கார்த்திக் சந்திரசேகர் – செல்வம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – எஸ்.ஆர்.ஹரி, எடிட்டர் – பி.மணிகண்டன், ஸ்டண்ட் – சரவெடி சரவணன், தயாரிப்பு நிர்வாகி – சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – சதீஷ் (ஏய்ம்), தமிழ் சினிமாஸ் மூலம் தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு (தனபால் கணேஷ் மற்றும் ஷிவானி செந்தில்)

மதுரையில் வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்) தேவி (வெண்பா) மற்றும் பிரியா (பிரியதர்ஷினி) என்ற இரு மகள்களுடன் வசிக்கிறார். மூத்த மகள் வெண்பாவுக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்த நிலையில், ஏதோ காரணத்துக்காக சிறை சென்று வந்ததால் அந்த திருமணத்துக்கு தந்தை வீரபாண்டி எதிர்ப்பு தெரிவித்தாலும் வெண்பா அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார்.முன்னால் எம்பி பரந்தாமன் (நமோ நாராயணா) மைத்துனர் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் இளைய மகள் பிரியதர்ஷினி சேர்ந்து படிக்கிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தை நடத்தும் மைத்துனர் அரசியல் செலவிற்காக படிக்கும் மாணவர்களிடம் பத்து லட்சம் பேரம் பேசி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பணம் கேட்கிறார். இந்த அப்பட்டமான மோசடியை பிரியா எதிர்க்க அந்த சம்பவத்திற்குப் பிறகு பிரியா காணாமல் போகிறார். விசாரணையின் போது அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவளது வயதான அப்பா வீரபாண்டி உண்மையை கண்டறிய நீட் மையம் நடத்தும் மைத்துனர் மற்றும் கவுன்சிலரை கடத்தி உண்மையை கண்டறிய சித்திரவதை செய்கிறார். இறுதியில் மகளை கொன்றவர்கள் யார் என்பதை வீரபாண்டி கண்டுபிடித்தாரா? வீரபாண்டியால் எப்படி சாதுர்யமாக கடத்த முடிந்தது? க்ளைமேக்ஸ் சஸ்பென்ஸ் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

வீரபாண்டியாக எம்.எஸ்.பாஸ்கர் இரண்டு மகள்களின் தந்தையாகவும், மகளை காணாமல் பரிதவிக்கும் காட்சிகளிலும், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள், செய்யும் சித்திரவதைகள் வித்தியாசமாக இருப்பதும், இரண்டு விதமான தோற்றத்தில் அவரின் குணசித்திர நடிப்பு ரசிக்க வைக்கிறது. அவரது கதாபாத்திரத்தை இறுதியில் திருப்புமுனையோடு முடித்திருக்கிறார்கள்.

கபாலி விஸ்வந்த் (சிவாவாக), நமோ நாராயணா (பரந்தாமனாக), வெண்பா (மூத்த மகள் தேவியாக), பிரியா தர்ஷினி (இளையமகள் பிரியாவாக), வில்லன்களாக கார்த்திக் சந்திரசேகர் (ஒரு கவுன்சிலராகவும் பினாமியாகவும் செல்வம்) மற்றும் அகாஷ் பிரேம்குமார் (அர்ஜுனாக)  ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – எஸ்.ஆர்.ஹரி, எடிட்டர் – பி.மணிகண்டன், ஸ்டண்ட் – சரவெடி சரவணன் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

காணாமல் போன மகளை தேடிச் செல்லும் தந்தையின் பாசத்தையும், அதற்கு காராணமான இரண்டு பேரை பிடித்து கொடூரமாக விசாரிக்கும் கதைக்களமாக வில்லன்கள் விவரிக்கும் விதத்தில் மாறுபாட்டை காட்டி இறுதியில் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரை கொடுத்துள்ளார் இயக்குனர் அருண் கே.பிரசாத்.

மொத்தத்தில் குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரித்திருக்கும் அக்கரன் வில்லன்களை வதம் செய்யும் அசுரன்.