ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம் : ஸ்ட்ரைக்கர் நகர்த்துவதில் தடுமாறுவதால் திருப்பம் ஏற்படுத்தும் நேரத்தில் சரியான பாயிண்ட் எடுக்க முடியவில்லை | ரேட்டிங்: 2/5

0
252

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம் : ஸ்ட்ரைக்கர் நகர்த்துவதில் தடுமாறுவதால் திருப்பம் ஏற்படுத்தும் நேரத்தில் சரியான பாயிண்ட் எடுக்க முடியவில்லை | ரேட்டிங்: 2/5

ஜேஎஸ்ஜே சினிமாஸ் சார்பில் ஹென்ட்ரி டேவிட் ஐஆர், ஜஸ்டின் விஜய் ஆர் தயாhரித்துள்ள ஸ்ட்ரைக்கர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஏ.பிரபு.

இதில் ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கஸ்தூரி சங்கர், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: விஜய் சித்தார்த், ஓளிப்பதிவு : மணீஷ் மூர்த்தி, எடிட்டிங்: நாகூரன், பாடலாசிரியர்: ஹரிசங்கர் ரவீந்திரன், ஆடை வடிவமைப்பாளர்: அகிலன் ராம்,கிரியேட்டிவ் ஹெட்: அசோக் பெரியசாமி, வசனங்கள்: எஸ் ஏ பிரபு, நடனம்: ஜே.எம்., ராபர்ட் நாத், சண்டைக்காட்சிகள்: சங்கர், கலை இயக்குனர்: ஆனந்த் மணி, பின்னணி இசை: ஏவு மோனிஷ் மற்றும் ஏவு பாரதி, ஸ்டில்ஸ்: பாக்கியா, ஒலிப்பதிவாளர்: சுகவேதன் வி.பி, தயாரிப்பு நிர்வாகி: சுகிதன் சக்திவேல், நிர்வாகத் தயாரிப்பாளர்: ராஜேஷ் கிருஷ்ணன் ஆர்,மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது.

மெக்கானிக் ஜஸ்டின் விஜய் ஒய்வு நேரத்தில் ஒஜோ போர்ட்டை வைத்து ஆவிகளுடன் பேசும் பயிற்சி வகுப்பிற்கும் சென்று வருகிறார். இவரைப் பற்றி கேள்விப்பட்டு நாயகி வித்யா பிரதீப் யூ டியுப் சேனலுக்காக பேட்டி எடுக்க வருகிறார். அதன் பின் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர். இந்நிலையில் ஆவிப் பயிற்சியாளர் கஸ்தூரி  ஒஜோ போர்ட் மூலம் ஆவிகளிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், விருப்பம் இல்லை என்றால் பேசக் கூடாது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் அதை மீறி செயல்பட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜஸ்டின் விஜய்க்கு அறிவுரை கூறுகிறார். இதனிடையே ஆரவாரம் இல்லாத ஒரு வீட்டில் விசித்திரமான ஒசை கேட்பதாகவும் ஆமானுஷ்யம் இருப்பதாக கூற அதை கண்டுபிடிக்க ஜஸ்டின் விஜய் செல்கிறார். அவரைத் தேடி வித்யா பிரதீப்பும் அந்த வீட்டிற்கு வருகிறார். இருவரும் ஒஜோ போர்ட்டில் ஆவியுடன் பேச முற்படுகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஆமானுஷ்ய சக்தி இவர்களிடம் பேசியதா? இருவருக்கும் என்ன நடந்தது? இறுதிக் காட்சியில் எதிர்பாராத திருப்பம் என்ன? என்பதே மீதிக்கதை.

ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கஸ்தூரி சங்கர், அபிநயா தாங்கள் ஏற்ற  கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கொடுத்துள்ளனர்.

இசை: விஜய் சித்தார்த், ஓளிப்பதிவு : மணீஷ் மூர்த்தி, எடிட்டிங்: நாகூரன், பின்னணி இசை: மோனிஷ் மற்றும் பாரதி ஆகியோர் இன்னும் பரபரப்பாக கொடுக்க முயற்சித்திருக்கலாம்.

ஒரு சிறு தவறு எத்ததைய விபத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகிறது, அதன் பின் பாதிக்கப்பட்ட பெண் எவ்வாறு ஆமானுஷ்ய சக்தியோடு இணைந்து பழி வாங்கி தன் இழப்பை மீண்டும் சரி செய்கிறார் என்பதை இன்னும் அழுத்தமாக சுவாரஸ்யத்தோடு இயக்குனர் எஸ்.ஏ.பிரபு தந்திருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் ஜேஎஸ்ஜே சினிமாஸ் சார்பில் ஹென்ட்ரி டேவிட் ஐஆர், ஜஸ்டின் விஜய் ஆர் தயாரித்துள்ள ஸ்ட்ரைக்கர் நகர்த்துவதில் தடுமாறுவதால் திருப்பம் ஏற்படுத்தும் நேரத்தில் சரியான பாயிண்ட் எடுக்க முடியவில்லை.