ஷாட் பூட் த்ரீ விமர்சனம் : ஷாட் பூட் த்ரீ விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளின் தேடுதல் வேட்டை பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
344

ஷாட் பூட் த்ரீ விமர்சனம் : ஷாட் பூட் த்ரீ விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளின் தேடுதல் வேட்டை பயணம் | ரேட்டிங்: 2.5/5

யூனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் ஷாட் பூட் த்ரீ

இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹ{ட், வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-ஆனந்த் நாகவ் மற்றும் அருணாச்சலம் வைத்தியநாதன், ஒளிப்பதிவு- சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசை-ராஜேஷ் வைத்தியா, எடிட்டிங்-பரத் விக்ரமன், கலை- ஆறுசாமி, சண்டை-சுதேஷ், நிர்வாக மேற்பார்வை-அருண்ராம் கலைச்செல்வன்,  நிர்வாக தயாரிப்பு- வெங்கடேஷ்  சடகோபன், இணை தயாரிப்பு-முகில் சந்திரன், தயாரிப்பு நிர்வாகி- கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன், பிஆர்ஒ- நிகில்.

கைலாஷ், பிரணநிதி, வேதாந்த் மூவரும் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள். இவர்களுக்கு பேருதவியாக இருக்கும் நண்பன் பூவையார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சினேகா- வெங்கட் தம்பதியருக்கு ஒரே மகன்; கைலாஷ் என்பதாலும் நன்றாக சம்பாதிப்பதாலும், அவனுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்கும் பெற்றோருக்கு அவனிடம் அன்பாக பேச மட்டும் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கின்றனர். அதே போல் பல் டாக்டர் பெற்றோரின் மகள் பிரணநிதி நன்றாக பாடும் திறன் பெற்ற சிறுமி என்றாலும் அவளுக்கு வீட்டில் ஆதரவு இல்லை. சிங் குடும்பத்தில் பிறந்த வேதாந்த் வசந்தா, ஏழ்மை நிலையில் இருந்தாலும் அனைவரிடமும் பாசமுடன், எந்த வேலை செய்தாலும் ஈடுபாடும் செய்யும் பூவையார். கைலாஷின்; பிறந்த நாளுக்கு பிரணநிதி, வேதாந்த் இருவரும் இணைந்து மேக்ஸ் என்ற கோல்டன் ரிட்ரிவர் நாய்க்குட்டியை பரிசாக கொடுக்கின்றனர். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கைலாஷின் பெற்றோர் பின்னர் சம்மதித்து மேக்ஸை வீட்டில் வளர்கின்றனர். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு கைலாஷின் பெற்றோர் வேலை நிமித்தமாக ஊருக்கு செல்ல, கைலாஷ் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் வீட்டில் ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். இந்நேரத்தில் மேக்ஸ் காணாமல் போகிறது. கைலாஷ் மற்றும் நண்பர்கள் மேக்ஸை தேடிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் பெரும் தொந்தரவாக இருக்கும் தெரு நாய்களை பிடித்து கொல்ல திட்டமிடுகின்றனர். தெருவில் வழி தெரியாமல் உலாவிக் கொண்டிருக்கும் மேக்ஸ் யோகிபாபுவின் ஆட்டோவில் ஏறிவிடுகிறது. யோகிபாபு கடனை அடைக்க மேக்ஸை விற்க முடிவு செய்கிறார். அதே சமயம் குழந்தைகள் நாயை கண்டுபிடிப்பதற்காக நடிகை த்ரிஷாவின் நாய் காணவில்லை என்று பொய்யாக முகநூலில் பதிவிடுகின்றனர். இதனால் மேக்ஸை தேட பலர் முன் வருகின்றனர். இறுதியில் மேக்ஸை யார் கண்டுபிடித்தார்கள்? எந்த ஆபத்தில் மாட்டிக் கொண்டான்? குழந்தைகள் அனைவரும் சேர்ந்து மேக்ஸை காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சியாமளாவாக சினோகா – சுவாமிநாதனாக வெங்கட் பிரபு ஜோடி ஐடி வேலை, நேரமின்மை,வேலை பளு ஆகியவற்றால் அவதிப்படுவதை யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சிவாங்கி, யோகிபாபு மற்றும் பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹ{ட், வேதாந்த் வசந்தா குழந்தை நட்சத்திரங்களின் அழுத்தமான இயல்பான நடிப்பு, டாக்டராக அருணாச்சல வைத்தியநாதன், பைரவாக சாய் தீனா ஆகியோர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். மேக்ஸ் என்கிற நாயின் பங்களிப்பும் சிறப்பு.

பெரிய அடுக்குமாடி குடியிருப்பு, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும், நாயை தேடும் காட்சிகளையும் மாநகராட்சி கட்டிடம் என்று தன் காட்சிக் கோணங்களால் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன்.

ராஜேஷ் வைத்தியா படத்திற்குகேற்ற இசையையும், பின்னணி இசையையும் திறம்பட கையாண்டுள்ளார் .

எடிட்டிங்-பரத் விக்ரமன், கலை- ஆறுசாமி, சண்டை-சுதேஷ் ஆகியோர் கச்சிதம்.

பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் ஒடிக் கொண்டிருக்கும் பெற்றோர் மகனிடம் சின்ன சின்ன சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள அரவணைக்க மறப்பது, குழந்தைகளின் திறனை ஊக்கபடுத்த மறுக்கும் பெற்றோர், எந்த விஷயங்கள் என்றாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகள்,  வீட்டுச் செல்ல பிராணிகளிடம் அன்பு காட்ட வேண்டும் அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன். வளர்ப்பு நாயை கண்டு பிடிக்க புறப்படும் தேடுதல் பயணத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக கொடுக்க நினைத்து, அதனுடன் வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு அனைவருக்கும் கல்வி முக்கியம் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். அதனுடன் தெரு நாய்களை காப்பாற்றும் அட்வென்சர் படமாகவும் ஆக்ஷன் கலந்து கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் யூனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் ஷாட் பூட் த்ரீ விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளின் தேடுதல் வேட்டை பயணம்.