வாஸ்கோடகாமா திரைப்பட விமர்சனம் : வாஸ்கோடகாமா சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை | ரேட்டிங்: 2/5
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஆர்ஜிகே.
இதில் நகுல்,அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார்,முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி,மதன்பாப்,நமோ நாராயணா ,ஆர். எஸ் .சிவாஜி, லொள்ளு சபா சேஷ{ ,பயில்வான் ரங்கநாதன் , படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை சதீஷ்குமார் என். எஸ். ஒளிப்பதிவு செய்து அருண் என்.வி இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.
கலியுக காலத்தின் முடிவில் நன்மை குறைந்து, தீமை அதிகரித்து வரும் உலகில், அநீதி மற்றும் துரோகத்தால் கட்டமைக்கப்பட்ட உலகத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும், தீயவர்கள் ஆட்சி செய்யும் போது நல்லவர்கள் தண்டிக்கப்படுவதாக எதிர்காலத்தில் அமைந்தால் என்னவாகும் என்பதின் கற்பனை வடிவமே ‘வாஸ்கோடகாமா”வின் முழுக்கதை. தாதாவான ஆனந்த்ராஜ்; மகள் அர்த்தனா ஒரு நல்ல மனிதனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணும் பெண். ஆனால் தந்தை ஆனந்த் ராஜ் ஒரு அயோக்கியனை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அர்த்தனா உண்மையான நல்ல மனிதரான நகுலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். இதனிடையே எதிர்பாராத சூழ்நிலையில் நகுல் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. மேலும் சிறைச் சுவர்களுக்குள் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான குழப்பமான சம்பவங்கள் நடக்க, நகுல் நல்லவராக இருந்து தீயவர்களிடமிருந்து அனைவரையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
இதில் நகுல், அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார், முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதன்பாப், நமோ நாராயணா , ஆர். எஸ் .சிவாஜி, லொள்ளு சபா சேஷ{ , பயில்வான் ரங்கநாதன், படவா கோபி என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் கதையை கேட்டு எப்படி புரிந்து கொண்டு நடித்தார்கள் என்ற கேள்விக்குறியோடு படத்தை பார்க்க வேண்டியுள்ளது. தேர்ந்த நடிகர்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் என்.எஸ். மற்றும் இசையமைப்பாளர் அருண் என்.வி. படத்தின் பட்ஜெட்டையும் இயக்குனரின் எண்ணத்தையும் பூர்த்தி செய்து திறமையான வேலையை செய்திருக்கின்றனர்.
முதல் பாதி நல்லவனாக இருக்கும் நகுலை கெட்டவனாக காட்டி திருமணம் செய்து கொள்வதில் ஆரம்பித்து இரண்டாம் பாதியில் சிறைக்கு சென்றவுடன் நல்லவர்கள் தண்டனை அனுபவிக்க அவர்களை கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கும் வாஸ்கோடகாமா சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து எப்படி தப்பித்து வெளியே வருகின்றனர் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல நினைத்து பல இடங்களில் அலுப்பை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் ஆர்ஜிகே. கற்பனை கதைத்திறனை இன்னும் கொஞ்சம் சாதுர்யமாக குழப்பமில்லாமல் புரியும்படி காட்சிப்படுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்த்தில் 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை.