வரலாறு முக்கியம் விமர்சனம் : வரலாறு முக்கியம் ஆழமும், அழுத்தமும் இல்லாத காமக்காதல் | ரேட்டிங்: 2/5
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் வரலாறு முக்கியம்.
இதில் ஜீவா, கஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன,மலையாள நடிகர் சித்திக், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ஷான் ரஹ்மான்,ஒளிப்பதிவு : சக்தி சரவணன், படத்தொகுப்பு : என்.பி. ஸ்ரீகாந்த், கலை: மோகன் , சண்டை :க்தி சரவணன், நடனம்: பிருந்தா, மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டிஒன்.
கோயமுத்தூரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா (கார்த்திக்) அவரது நண்பர் அடைக்கலம் (வி.டி.வி கணேஷ்) அரசியல்வாதி கனவில் மிதந்து கொண்டிருப்பவர். ஜீவா தந்தை கே.எஸ்.ரவிக்குமார், தாய் சரண்யா பொன்வண்ணன், தங்கையுடன் வசிக்கிறார். ஜீவா இருக்கும் தெருவில் கேரளாவிலிருந்து காஷ்மீரா, பிரக்யா சகோதரிகள் பெற்றோருடன் வந்து குடியேறுகிறார்கள். இவர்களின் தந்தைக்கு மகள்களை துபாய் மாப்பிள்ளைக்கு தான் கட்டி வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர். அதனால் காதல் வலையில் மகள்கள் விழாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். இருந்தாலும் பிரக்யா ஜீவாவை பார்த்தவுடன் காதல் வயப்பட, ஜீவாவிற்கு முதலில் சம்மதம் என்றாலும், அவளின் அக்கா காஷ்மீராவை பார்த்த பிறகு எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். காஷ்மீராவை துரத்தி துரத்தி காதலித்து சம்மதமும் வாங்கிவிடுகிறார். இவர்களின் காதல் விவகாரம் காஷ்மீராவின் தந்தைக்கு தெரிய வர அவசரஅவசரமாக துபாய் மாப்பிள்ளையை நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இறுதியில் காஷ்மீராவின் நிச்சயதார்த்தம் நடந்ததா? ஜீவா-காஷ்மீரா காதல் கை கூடியதா? தந்தை இதற்கு சம்மதம் தெரிவித்தாரா? காதல் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
ஜீவா, கஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன,மலையாள நடிகர் சித்திக், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
ஷான் ரஹ்மானிள் இசை படத்திற்கு உதவவில்லை. சக்தி சரவணன் ஒளிப்பதிவு படத்தின் ஒட்டத்திற்கு துணை செய்கிறது.
2050 என்ற ஆண்டை குறிப்பிட்டு தன் நண்பனின் கடந்த கால காதல் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் விடிவி கணேஷ். டைட்டிலுக்கும், கதைக்கும் சம்பந்தமே இல்லாத கதைக்களம். அழகான பெண்ணை பின் தொடர்ந்து காதலிக்க வைக்க இளைஞன் முயற்சி செய்வதே படத்தின் திரைக்கதை. இதில் பல இரட்டை அர்த்த வசனங்கள், காதல் என்ற பெயரில் பெண்களின் புறஅழகை மட்டுமே குறிவைத்து காட்சிகளை அமைத்து, கதாநாயகன் தன் தங்கைக்கு ஆதரவாக சண்டை ஈடுவதும், ஆனால் கதாநாயகியை இவரே துரத்தி வற்புறுத்தி காதலிப்பது போன்ற காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அக்காவையா? தங்கையையா? காதலிக்க யோசிக்கும் இடம் முதல் அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசத்துடன் காதல் கதைக்களத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன்.
மொத்தத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் வரலாறு முக்கியம் ஆழமும், அழுத்தமும் இல்லாத காமக்காதல்.