வணங்கான் சினிமா விமர்சனம் : வணங்கான் குற்றவாளிகளை வதம் செய்யும் அசகாய சூரன் பெண்களை பாதுகாக்கும் மாவீரன் | ரேட்டிங்: 3.5/5
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் வணங்கான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலா.
இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், ரிதா, டாக்டர். யோஹான் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன்ராஜ், சாயா தேவி, கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமாரன், மை பா நாராயணன், பிருந்தா சாரதி, தீபிகா, ஷ்ரேயா சாஜர், ஷானு, அஞ்சனா அஞ்சு, பிரியா நாயர், ஐஸ்வர்யா, சக்தி மாரியப்பன், எம். வின்சென்ட், கார்த்திகேயன், ஸ்ரீராம் சந்திரசேகர், டிவிடி பாலா, அனந்தி.கே, சரண்யா ஸ்ரீ, அனீஷா, ஜானகி சுரேஷ், அம்சரேகா.என், எஸ்.அஸ்வின் சங்கர், கார்த்திகா சுரேஷ், ஆர்.சுப்ரமணியம், பாபி பஜாஜ், ஜிசூஃப்பின் ஜான்சன், மணி, ரமேஷ், லோகேஷ், ஏபி.லோகேஷ், பிரவீன் மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை : ஜி. வி. பிரகாஷ் குமார், பின்னணி இசை : சாம் சி.எஸ், ஒளிப்பதிவு : ஆர். பி. குருதேவ், படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா, ஸ்டண்ட் : சில்வா,கலை : ஆர்.கே.நாகு, மக்கள் தொடர்பு : ஏ.ஜான்
கன்னியாகுமரியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட காது, மற்றும் பேச இயலாத மாற்றுத்திறனாளி அண்ணன் கோட்டி (அருண் விஜய்) மற்றும் தன்னைப் போல அனாதையான தேவியை தங்கையாக (ரிதா) பாவித்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்கின்றனர். மாற்றுத்திறனாளி கோட்டி, வருமானத்திற்காக சிறிய வேலைகளைச் செய்ய தங்கை தேவி ஒரு டாட்டூ ஸ்டுடியோவில் பணிபுரிகிறார். சைகை மொழியில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களை கண்டு அமைதியாக இருக்க முடியாத குணம் படைத்தவர் என்பதால் வீண் சண்டை, சச்சரவுகள் நடைபெறுகிறது.இதனிடையே, பல மொழிகளில் பேசும் சுற்றுலா வழிகாட்டியாக பிழைப்பு நடத்தி வரும் டீனா (ரோஷினி பிரகாஷ்), கோட்டியை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு நிரந்தரமான வேலை இருந்தால், கோட்டி சரி ஆகிவிடுவார் என்று நம்பும் அவரது தங்கை தேவி,காதலி டீனா, பாதிரியார் உதவியுடன் குழந்தைகள், பெண்கள் உட்பட பார்வையற்றோர் வசிக்கும் ஒரு ஆதரவற்ற இல்லத்தில் கோட்டியை காவலராக வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். அப்போது அந்த இல்லத்தில், பார்வையற்ற பெண்களிடம் சொல்ல முடியாத ஒரு விரும்பத்தகாத சம்பவம் ஒன்று வக்கிரம் பிடித்த மூன்று மனித மிருகங்களால் நடக்க நேரிலும் பார்த்து விடுகிறார். இரண்டு பேரை மட்டும் நேரில் பார்க்கும் கோட்டி அவர்களை அடித்து துவைத்து கழுமரத்தில் சொருகி விடுகிறார். மூன்றாவது ஆளை பின்புறம் மட்டுமே பார்த்த கோட்டியால் அடையாளம் காண முடியாமல் பழி வாங்காமல் விட்டு விடுகிறார். இதனிடையே போலீஸ் தீவிரமாக விசாரிக்க தொடங்க கொலைகளை நான் தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டு சரணடைகிறார். கோட்டி சிறையில் அடைத்ததால் மனஉளைச்சலில் இருக்கும் தங்கை தேவி அனாதையாக மீண்டும் ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார். சிறையில் இருக்கும் கோட்டி எப்படி வெளியே வந்து மீதம் இருக்கும் குற்றவாளியை கண்டுபிடித்து அழித்தார்? அதன் பின் தேவிக்கு என்னானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கோட்டியாக மாற்றுத்திறனாளி மனிதராக அருண் விஜய் படம் முழுவதும் தன்னுடைய மேனரஸிசத்தையும் ஆ@மையும் தனித்தன்மையாக தெரியுமாறு, தன் கதாபாத்திரத்தின் முக்கிய பங்களிப்பையும் திறம்பட அனைத்து காட்சிகளிலும் முக்கியமாக சண்டைக் காட்சிகளில் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். வெல்டன்
பாசமிகு தங்கை தேவியாக ரிதா படம் முழுவதும் அண்ணனுக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருந்து தன் இயலாமையையும், அனாதை என்பதை உணரும் தருணங்களில் அழுகை கலந்து மேம்பட்ட நடிப்பு அற்புதம், இறுதியில் எடுக்கும் முடிவு கண் கலங்க செய்கிறது.
காதலி டீனாவாக ரோஷினி பிரகாஷ் கோட்டியை விரட்டி காதலிக்கும் கதாபாத்திரம் மட்டுமே, தங்கைக்கு துணையாக வந்து போகிறார்.
துணிச்சல் நிறைந்த முடிவுகளை சொல்லும் நேர்மையான நீதிபதி குபேரனாக வரும் இயக்குநர் மிஷ்கின், மிடுக்கான காவல் துறை சிறப்பு அதிகாரியாக வரும் இயக்குநர் சமுத்திரக்கனி ஆகிய இருவரின் பார்வை, நடை,உடை, பாவனை, நச்சென்று பேசும் வசனம் என்று தனித்து தெரிகின்றனர்.
ஜி. வி. பிரகாஷ் குமார் இசை ஒகே. சாம் சி.எஸ்.பின்னணி இசை, ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவுஸ்டண்ட் சில்வா சண்டை காட்சிகள் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்;களின் பணி அளப்பறியது. படத்தில் விறுவிறுப்பை எகிறச் செய்கிறது.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா முதல் பாதியில் வரும் பார்வையற்ற பெண்களுக்கு எதிரான காட்சிகளை தெளிவாக காட்ட தேவையில்லை தவிர்த்திருக்கலாம். அந்த காட்சிகள் மனதை நெருட செய்கிறது.
வணங்கானின் சில பகுதிகள்; பெரும்பாலும் பாலாவின் பல படங்களின் கதைசொல்லல் மற்றும் திரைப்பட உருவாக்கம். கோட்டியின் நேர்மையான கோபத்தைக் காட்ட, ஒன்றல்ல, மூன்று ஆக்ஷன் பிளாக்கள்,ரொமாண்டிக் டிராக், ஊனமுற்றவர்களை மோசமான கண்ணோட்டத்;துடன் கண்டு களிக்கும் குற்றவாளிகளை பழி வாங்கும் செயல்கள் என்று சித்தரித்துள்ளார். வெறும் செயல்பாட்டுடன் இருக்கும் அதே வேளையில் எழுத்துக்கள் ஆழத்துடன் எழுதப்படவில்லை. இரண்டாம் பாதியின் நிகழ்வுகள் கதாநாயகனின் குறைபாடுகள் காரணமாக ஒருவித ஆர்வத்தை சேர்க்கின்றன, மேலும் அருண் விஜய்யின் வலுவான நடிப்பால் படத்தின் வழக்கமான தன்மையை உயர்த்த முடிகிறது. முதல் காட்சியில் கிணற்றில் தொடங்கும் களம் இறுதியில் கிணற்றில் தான் முடிகிறது. இயக்குனர் பாலா தன்னுடைய கண்ணோட்டத்தில் முழுமையான அழுத்தமான பழி வாங்கும் படத்தை கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் வணங்கான் குற்றவாளிகளை வதம் செய்யும் அசகாய சூரன் பெண்களை பாதுகாக்கும் மாவீரன்.