லோக்கல் சரக்கு சினிமா விமர்சனம் : லோக்கல் சரக்கு குடிமகன்களின் போதையை தெளிய வைக்கும் காமெடி நெடி கலந்த பொழுதுபோக்கு மருந்து | ரேட்டிங்: 2.5/5

0
101

லோக்கல் சரக்கு சினிமா விமர்சனம் : லோக்கல் சரக்கு குடிமகன்களின் போதையை தெளிய வைக்கும் காமெடி நெடி கலந்த பொழுதுபோக்கு மருந்து | ரேட்டிங்: 2.5/5

வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்திருக்கும் லோக்கல் சரக்கு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ராஜ்குமார்

பிரபல நடன இயக்குனர் தினேஷ் நாயகனாகவும், யோகி பாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-இசை – வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், ஒளிப்பதிவு- கே.எஸ்.பழநி, படத்தொகுப்பு – ஜே.எப்.கேஸ்ட்ரோ, பாடல்கள் – விவேகா, கலை முஜ்பூர் ரகுமான் மக்கள் தொடர்பு ‘கிளாமர்’ சத்யா.

நாயகன் தினேஷ் குடிக்கு அடிமையானவர், தன் தங்கையின் சம்பாத்தியத்தில் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஜாலியாக வாழ்கிறார். இமான் அண்ணாச்சி தினேஷிற்கு கஷ்டப்பட்டு வேலை வாங்கி கொடுத்தாலும் ஒரிரு நாட்களில் மீண்டு;ம் குடிக்க சென்று வேலையை சரிவர செய்யாமல் துரத்தி விடும் அளவிற்கு ஈடுபாடு இல்லாமல் குடிப்பதையே முழு நேர வேலையாக இருக்கிறார். இதனால் தங்கையும், இமான் அண்ணாச்சியும் பலமுறை அறிவுரை கூறினாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் நண்பர் யோகிபாபுடன் சேர்ந்து அளப்பறை பண்ணுகிறார். இதனிடையே இவரின் வீட்டிற்கு அருகில் உபாசனா வாடகைக்கு குடியேறுகிறார். தினேஷை பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் உபாசனா, பின்னர் தினேஷை பற்றி விசாரித்து விட்டு தன் வேலையை பார்க்க சென்று விடுகிறார். ஒரு நாள் தினேஷின் தங்கை சென்றாயனை திருமணம் செய்து கொள்ள, இவர்களுடன் உபாசனா கோயிலுக்கு செல்;கிறார்.அங்கே உபாசனாவை பார்த்த ஒருவர் தினேஷ{டன் நடந்த திருமணத்தை பற்றி விசாரிக்கிறார். இதனை கேள்விப்படும் அனைவரும் அதிர்ச்சியாக, உபாசனா நிதானமாக தன் திருமணத்தை பற்றி விவரிக்கிறார். தன் தாயின் உயிரை காப்பாற்ற 25 ஆயிரம் பணம் மற்றும் தங்கம் தருவதாக சொல்லும் இலவச கலப்பு திருமணத்தில் வேறு வழியின்றி கலந்து கொண்டதும், அந்த திருமணத்தில் குடிபோதையில் இருந்த தினேஷ் தனக்கு தாலி கட்டியதும், பணத்தை வாங்கி கொண்டு இருவரும் சென்று விட்டதாக உபாசனா கூறுகிறார். தாயை காப்பாற்ற முடியாமல் போக வீட்டை காலி செய்து கொண்டு இங்கே வந்து விட்டதாகவும், தினேஷ் அங்கே இருப்பது தனக்கு தெரியாது என்று உபாசனா சொல்ல, வேறு வழி தெரியாமல் இமான் அண்ணாச்சியும், தங்கையும் சேர்ந்து இவர்களை ஒன்றாக வாழ சொல்கிறார்கள். அதன் பின் இருவரும் ஒன்றாக வாழ்ந்தார்களா? குடிக்கு அடிமையான தினேஷால் உபாசனாவிற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? இறுதியில் குடிபோதையை தினேஷ் கைவிட்டாரா? என்பதே படத்தின் அழுத்தமான க்ளைமேக்ஸ்.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் படம் முழுவதும் குடிபோதை ஆசாமியாக 95 சதவீத காட்சிகளில் வருகிறார். குடித்தவுடன் வேலையில் செய்யும் காn;மடி அளப்பறைகள் சிரிக்க வைப்பதுடன், சில சமயங்களில் சிந்திக்க வைக்கும் அளவிற்கு இவரின் அட்டாகாசமான நடிப்பு அசத்தலாக உள்ளது. அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு அவமானத்தை பற்றி கவலைப்படாமல் குடிக்க பணத்தை எப்படி பலரிடம் ஏமாற்றி வாங்க வேண்டும் என்ற வித்தையை தெரிந்து வைத்துக் கொண்டு பண்ணும் சில்மிஷங்கள் அட இப்படியும் ஏமாற்ற முடியுமா என்ற ரகத்தில் இருக்கிறது. மனைவியை பற்றி துளியும் சிந்திக்காமல் எதற்கும் கவலைப்படாத கதாபாத்திரத்தில் துணிந்து நடித்துள்ளார் என்றாலும் எப்பொழுது பார்த்தாலும் குடியும் கையுமாக வருவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்திருப்பதற்காக பாராட்டுக்கள்.

உபாசனா படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தன் வாழ்க்கையை ஒட்ட வேண்டிய கட்டாயத்தில் ;இருக்கும் வறுமை சூழலில் வாடும் பெண்ணாக தேர்ந்த நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார். இந்த படத்தில் தான் உபாசனாவிற்கு அழுத்தமான வேடம் கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஏழை என்றாலும் வைராக்கியத்திலும், தைரியத்திலும், துணிச்சலிலும் அனைவருக்கும் சவால் விட்டு தன்மானத்தை காத்துக் கொள்ளும் குணாதிசயத்தில் தனித்து நிற்கிறார். கணவன் குடிக்கு அடிமையாகி சிக்கலில் மாட்டி விடும் நேரத்தில், தைரியமாக எதிர்கொண்டு, தன்னை தற்காத்துக்  கொள்ளும் காட்சிகளில் கை தட்டல் பெறுகிறார். இறுதிக்காட்சியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி பாதிக்கப்படும் பெண்களுக்கு பயப்படாமல் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை புரிய வைத்து மனதைரியத்தை கொடுக்கும் செயல் தான் படத்தின் ஹைலைட்.

மற்றும் யோகி பாபு, இமான் அண்ணாச்சி, அசர வைக்கும் காமெடி கலாட்டா செய்யும் சாம்ஸ் மற்றும் ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி ஆகியோர் நடிப்பு சிறப்பு.

இசை – வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், ஒளிப்பதிவு- கே.எஸ்.பழநி, படத்தொகுப்பு – ஜே.எப்.கேஸ்ட்ரோ, பாடல்கள் – விவேகா, கலை முஜ்பூர் ரகுமான் படத்திற்கு முக்கிய பங்களிப்பு கொடுத்துள்ளனர்.

குடி குடியைக் கெடுக்கும் என்பதை வலியுறுத்தும் கதையில் குடிகாரனின் சிக்கலான திருமண பந்தம்,வம்பில்  மாட்டிக் கொண்டாலும் தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணின் பார்வையில் திரைக்கதையை இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ராஜ்குமார். கணவன் சரியாக அமையாவிட்டால் அதுவும் குடிகார கணவன் இருந்து விட்டால் குடும்ப பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவமானங்களையும், அந்த சமயத்தில் வன்மம் நிறைந்த மனிதர்களின் நடவடிக்கைகளையும், செயல்களையும் எப்படி சமாளித்து எதிர் கொண்டு மிரட்டும் ஆண்களை கையாள்வது என்பதும், எதற்கும் கவலைப்படாமல் துணிந்து எதிர்த்து சமாளிக்கும் திறனுடன், நகைச்சுவை களத்துடன் சுவாரஸ்யத்துடன் இயக்கியுள்ளார் எஸ்.பி.ராஜ்குமார். படத்தின் பெயரை வைத்து செல்ல தயங்குபவர்களுக்கு, படத்தின் திரைக்கதை அந்த எண்ணத்தை மாற்றி ரசிக்க வைக்கும் வகையில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்திருக்கும் லோக்கல் சரக்கு குடிமகன்களின் போதையை தெளிய வைக்கும் காமெடி நெடி கலந்த பொழுதுபோக்கு மருந்து.