லப்பர் பந்து சினிமா விமர்சனம் : லப்பர் பந்து தேர்ந்த நடிகர்கள், புத்துணர்ச்சியூட்டும் கதைக்களம், நுட்பமான திரைக்கதையால் கில்லி போல் வெற்றி கூட்டணியில் சதம் அடித்துள்ளது | ரேட்டிங்: 3.5/5
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் லப்பர் பந்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து.
இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டிஎஸ்கே ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு இயக்குனர்: தினேஷ் புருஷோத்தமன், எடிட்டர்: மதன் ஜி, கலை இயக்குனர்: வீரமணி கணேசன், பாடல் வரிகள்: மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன், ஸ்டண்ட்: அபிஷேக் ஸ்ரீPனிவாஸ், ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார், வண்ணம்: பிரசாத் சோமசேகர், இணை இயக்குநர்கள்: விஜய் பிரபாகரன் செல்லா, மம்தா எம்.கே, இணை ஆசிரியர்:விநாயகமூர்த்தி தென்னரசு, விளம்பர வடிவமைப்பு : கண்ணதாசன் டிகேடி, தயாரிப்பு நிர்வாகிகள்: சாதிக், எஸ் நாகராஜன், ஸ்டில்ஸ்: பிரிதிவிராஜன் என், தயாரிப்பு நிர்வாகி: ஏ.பி.பால்பாண்டி, நிர்வாக தயாரிப்பாளர்: ஷ்ரவந்தி சாய்நாத், இணை தயாரிப்பாளர்: ஏ வெங்கடேஷ், மக்கள் தொடர்பு : ஏ. ஜான்
கடலூர் மாவட்டத்தில்; கிரிக்கெட் மீது தீராத பற்று வைத்திருக்கும் இருவரின் கடுமையான மோதலும், ஆதிக்கமும் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய கதைக்களம். 2011 ஆம் ஆண்டில் சுவN;ராவிய கலைஞர் பூமாலை கிரிக்கெட்டில் கெத்து (அட்டகத்தி தினேஷ்) என்ற பெயருடன் களமிறங்கும் திறமையான பேட்ஸ்மேன், விஜயகாந்த் பாட்டை போட்டு விளையாட்டு களத்தில் இறங்கினால் சிக்சர் மழையில் அடித்து தள்ளும் உள்@ர் ஜாம்பவான்;. அவரை வீழ்த்த பக்கத்து ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறு வயது அன்பு (ஹரிஷ் கல்யாண்) ஒரு வல்லமைமிக்க பந்துவீச்சாளர் என்பதால் அவர் ஜாலி பிரண்ட்ஸ் அணியில் பந்து வீச கருப்பையா (காளி வெங்கட்) மூலம் வரவழைக்கப்பட்டாலும் அந்த அணியில் இருக்கும் ஆதிக்க வீரர்களால் வாய்ப்பு தரப்படாமல் நிராகரிக்கப்படுகிறார். கெத்தை எப்படியாவது பந்து வீசி வீழ்த்த வேண்டும் என்பது மட்டும் அன்பின் கனவு நிறைவேறாமல் இருக்கிறது. கெத்து காதல் மனைவியின் யசோதா (ஸ்வாசிகா) பேச்சை மீறியும், வேலைக்கு செல்லாமல் கிரிக்கெட் விளையாடி பொழுதை போக்குகிறார். மகள் துர்காவை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ) படிக்க வைத்துக் கொண்டு குடும்பத்தை போராடி நடத்திக் கொண்டிருக்கும் யசோதா, பொறுப்பில்லாத கெத்துவின் கிரிக்கெட் ஆர்வத்தால் வீட்டில் சதா சண்டை நடக்கிறது. அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு அன்பு ஸ்போர்டஸ்;; ஜெர்சி கடையை நடத்தி, கிரிக்கெட் எங்கு நடந்தாலும் கெஸ்ட் பிளேயராக விளையாடுகிறார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கெத்துவின் ஆட்டத்தை காண நேரும் அன்பு தனது நண்பர் காத்தாடிக்கு (பாலசரவணன்) கெத்துவின் விளையாட்டு பாணியைப் பற்றிய கூறும் விமர்சனத்தை கெத்தின் நண்பர் குழந்தை (ஜெர்சன்) கேட்டு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. இது கெத்து மற்றும் அன்புக்கு இடையே பெரிய தீப்பொறியைத் தூண்டி எங்கு பார்த்தாலும் பதட்டத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு கெத்து மகள் என்று தெரியாமலேயே துர்காவைக் காதலிக்கிறார். மேலும், கெத்து தன் மகளை அன்பு காதலிப்பதை அறியும் போது மோதல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கிறது. யசோதா தன் கணவனின் போக்கு பிடிக்காததால் தன் பிறந்த வீட்டிற்கு சென்று விடுகிறார். மகளை அன்பிற்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கும் கெத்து, வேறு மாப்பிள்ளை தேடுகிறார். இதற்கிடையே ஜாலி பிரண்ட்ஸ் கிரிக்கெட் குழுவிலிருந்து கருப்பையா (காளி வெங்கட்) வெளியேற, அவருக்கு ஆதரவாக அன்பு மற்றும் கெத்து இருவரும் களமிறங்கும் சூழல் அமைகிறது. இருவரும் ஒன்றாக இணைந்து ஆடி ஜாலி பிரண்ட்ஸ் அணியை தோற்கடித்தார்களா? அன்பு துர்கா காதல் திருமணத்தில் முடிந்ததா? கெத்தும் யசோதாவும் ஒன்று சேர்ந்தார்களா? அன்பை மருமகனாக கெத்து ஏற்றுக் கொண்டாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
பூமாலை என்கிற கெத்தாக அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் வீரராக இளைஞராக சில காட்சிகள் வந்து, பின்னர் மகளின் தந்தையாக கதைக்களம் மாறும் போது காட்டும் தோற்றத்தில் மாற்றம், மனைவியிடம் காட்டும் பயம், காதல் மாறாத குணம், மகளிடம் காட்டும் பாசம், அன்பிடம் காட்டும் வெறுப்பு, கோபம் என்று தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அளவாக நடித்து அசத்தியுள்ளார்.
அன்பாக ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷிற்கு ஈடு கொடுத்து நடிக்கும் கேரக்டரை நன்றாக உள்வாங்கி திறம்பட செய்துள்ளார். கெத்திடம் வம்பில் மாட்டிக் கொண்டு முழிப்பதும், காதலி துர்காவின் வீட்டிற்கு சென்று கெத்தை பார்த்தவுடன் தடுமாறுவதும், இருவரின் ஈகோவால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் இறுதியில் தன் தவறை உணர்ந்து தைரியமாக மன்னிப்பு கேட்கும் இடத்தில் தனித்து தெரிகிறார். க்ளைமேக்சில் போட்டி நடக்கும் மைதானத்தில் எடுக்கும் முடிவு படத்தின் ஹைலைட்.
கெத்தின் காதல் மனைவி யசோதாவாக ஸ்வஸ்விகா, கணவனை திருத்த நினைத்து நொந்து போவதும், சண்டையிட்டு பிரிந்த பிறகு கணவனை நினைத்து வருந்துவதும், மகளிடம் காதலனால் தன்னை போல் கஷ்டப்படக்கூடாது என்று அறிவுரை கூறும் இடத்திலும், அன்பின் குடும்பத்தினரிடம் சவால் விட்டு செல்லும் போதும், முதல் காட்சியில் கெத்து விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை டிராக்டர் கொண்டு சேதம் செய்து விட்டு செல்லும் காட்சியில் கோபத்தின் உச்சத்தை வெளிக்காட்டி நடிப்பில் சிகரமாக திகழ்கிறார்.
மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தந்தை பாசத்தால் காதல் கை கூடாமல் போனாலும் அமைதியாக இருப்பதும், திருமண நிச்சயத்தின் போது அன்பை விளையாட அனுப்பும் நேரத்திலும், தாயிடம் கடுமையாக பேசினாலும், யதார்த்தத்தை புரிய வைக்கும் தருணங்களில் அழுத்தமான பதிவை விட்டுச் செல்கிறார்.
யசோதாவின் மாமியாராக கீதா கைலாசம் சில காட்சிகள் தலையை காட்டினாலும் உண்மையான பாசத்தை பிரதிபலித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட்டின் மகளாக வரும் கிரிக்கெட் வீராங்கனையின் பங்களிப்பு, தேவதர்ஷினியின் நடிப்பு படத்தின் காட்சிகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இயக்குனர் பெண் கதாபாத்திரங்களுக்கு வலிமையான காட்சிகளையமைத்து கொடுத்துள்ளதற்காக பாராட்டுக்கள்.
கருப்பையாவாக காளி வெங்கட் இவரின் தொடக்கபுள்ளி தான் கதையின் ஒட்டத்தை தீர்மானித்து இறுதி வரை இழுத்துச் செல்கிறது.அதன் பின் இருவரின் நண்பர்களாக வரும் பால சரவணன், மற்றும் ஜென்சன் திவாகர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் வான வேடிக்கை நகைச்சுவைக்கு உத்திரவாதம். காளி வெங்கட்டின் தம்பியாக டிஸ்கே வில்லனாக காட்சி தந்தாலும் படத்திற்கு கூடுதல் பலமே.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு மைதானத்தின் தூசி நிறைந்த பழுப்பு நிறத்தையும், கெத்து வீட்டின் கிராமிய அமைப்பையும், அன்பின் போராட்ட களத்தையும், கிரிக்கெட் விளையாட்டின் சாராம்சத்தையும் நேர்த்தியான பாணியில் வெளிப்படுத்தி படத்தின் சுவாரஸ்யத்தை மெருகேற்றியிருக்கிறது.
அதே நேரத்தில் மதன் ஜியின் படத்தொகுப்பு கதை சொல்லலைக் கூர்மைப்படுத்தி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சீன் ரோல்டன், பாடல் மற்றும் பின்னணி இசை சேர்ப்பால் புதிய பரிமாணத்தை உருவாக்கி கிரிக்கெட் காட்சிகளில் உணர்ச்சிகரமான தருணங்களை திறம்பட கையாண்டு வலிமை சேர்த்துள்ளார்.
தொடக்கத்தில் 2011ல் 15 ரூபாய் லப்பர் பந்தின் விலை என்று தொடங்கி சில காட்சிகளை காட்டிவிட்டு பல வருடங்களை காட்ட 35 ரூபாய் விலையில் விற்கும் லப்பர் பந்து என்று காட்சிகளை வேறுபடுத்த தொடங்கும் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆரோக்கியமான விளையாட்டு சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு படமாக கொடுத்து வித்தியாசத்தை காட்டும் விதத்தில் வெற்றி பெற்றுள்ளார். கிரிக்கெட்டை விரும்பும் இரு ஆண்களுக்கு இடையே நடக்கும் மோதலை உள்ளடக்கிய வழக்கமான விளையாட்டுதளமாக கொடுத்தாலும் அதில் உறுத்தாத காட்சிகளாக கலப்பு திருமணம், ஜாதி பாகுபாடு, பாலின பாகுபாடு, ஆண் ஈகோவின் பலவீனம், விஜயகாந்த் பாடல்களுடன் களப்போட்டி, காதல், நட்பு என்று புதுமை ததும்பும் விதத்தில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்து பிரசங்கிக்காமல், இறுதியில் ஜெயிப்பதை விட சமூக பாகுபாட்டை உடைத்தெறியும் தருணம் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தியிருக்கும் விதத்தில் முடித்து அசத்தியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. ஒரு நொடியில், தலைமுறை தலைமுறையாக விஷயங்கள் எவ்வாறு கடந்து செல்கின்றன என்பதை படம் சுட்டிக்காட்டுகிறது மேலும் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை பதற்றத்தை அப்படியே தக்க வைத்து, மோதல் தீர்க்கப்பட்டாலும், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை, முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, துணை கதாபாத்திரங்களும் கூட அற்புதமாக வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிபடுத்தியிருப்பதற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் லப்பர் பந்து தேர்ந்த நடிகர்கள், புத்துணர்ச்சியூட்டும் கதைக்களம், நுட்பமான திரைக்கதையால் கில்லி போல் வெற்றி கூட்டணியில் சதம் அடித்துள்ளது.