ரேசர் திரைவிமர்சனம்: ரேசர் கனவுகள், லட்சியங்கள் மெய்பட விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம் வாழ்க்கையிலும் பந்தயத்திலும் ஜெயிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
311

ரேசர் திரைவிமர்சனம்: ரேசர் கனவுகள், லட்சியங்கள் மெய்பட விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம் வாழ்க்கையிலும் பந்தயத்திலும் ஜெயிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்து இருக்கும் படம் “ரேசர்”. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ் (எ) சாட்ஸ் ரெக்ஸ்.

இதில் அகில் சந்தோஷ் , லாவண்யா, ஆறுபாலா, ‘”திரௌபதி” சுப்ரமணியன், பார்வதி, சரத், நிர்மல், சதீஷ், அர்விந்த், அனிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரபாகர், இசை- பரத், கலை- கனியமுதன், எடிட்டிங்- அஜித், இணை  தயாரிப்பு-சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி. சண்டை- சீனு ரெக்ஸ், சாட்ஸ் ரெக்ஸ் , பிஆர்ஒ-வேலு.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வின், சிறுவயதிலிருந்தே பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு தொழில்முறை பைக் ரேசராகி தனக்கு விருப்பமான ஒரு ரேசர் பைக்கை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கனவு, லட்சியத்துடன் வளர்கிறார். தனது ஆசையை தந்தையிடம் சொல்ல, எதிர்ப்பு கிளம்புகிறது. படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் ரேசர் வாழ்க்கை தேவையில்லை என்று தந்தை கண்டிப்புடன் பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கிறார். அதனால் குடும்பத்திற்கு தெரியாமல் கடனில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவது, தெருப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பது என்று தனக்கு பிடித்ததை செய்கிறார். அவர் தனது ஆர்வத்தைத் தொடர முயன்றாலும், அவருக்கு தொழில்முறை பந்தயப் பயிற்சி இல்லாததால் முதல் முயற்சியிலேயே தோல்வியடைந்து சக போட்டியாளர்களின் ஏளனத்துக்கு உள்ளாகிறார். இருந்தாலும் சிறிய போட்டிகளில் விடாமுயற்சியோடு கலந்து கொண்டு வெற்றி பெற பல பகைகள் வந்து சேருகின்றன. இதனிடையே பைக் வாங்குவதற்கும், பங்கேற்பதற்கும் வாங்கிய கடன்கள் குவிந்து விட சமாளிக்க முடியாமல் தவிக்கிறார் அஸ்வின். இதற்காக விலை எதுவாக இருந்தாலும் சாம்பியன்ஷிப்பை வெல்ல முடிவு செய்கிறார். அவர் பெற்றோரை சமாதானப்படுத்தி தனது கனவுகளை அடைய முடிந்ததா? பைக் ரேசில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

புதுமுகம் அகில் சந்தோஷ் அஸ்வினாக பைக் பிரியராக தன் லட்சியக்கனவை அடைய எடுக்கும் முயற்சிகள், செயல்கள் பல இன்னல்களை ஏற்படுத்தினாலும், அந்த தடைகளை தாண்டி தன் இலக்கை அடையும் துடிப்புள்ள பைக் ரேசராக படத்தில் காட்டும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. தந்தையிடம் பாசமும், பயமும் இருந்தாலும் துணிந்து தனக்கு பிடித்ததை செய்யும் தைரியம் கொண்ட வீரராக இந்தப் படத்தில் காட்சிப்படுத்திய விதம் அருமை.

தந்தை மூர்த்தியாக”திரௌபதி” சுப்ரமணியன் அழுத்தமான நடிப்பு, கண்டிப்பு, அதே சமயம் தான் சொன்னதை செய்ய வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர் என்றாலும் படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து கதைக்களத்திற்கு நடிப்பில் மூலம் மெருகு சேர்த்திருக்கிறார்.

சின்னத்திரை நடிகை லாவண்யா காதலியாக, அஸ்வினுக்கு முக்கிய முடிவை எடுக்கும் உந்து சக்தியாக, அழகு பதுமையாக படத்தில் வந்து செல்கிறார். மெக்கானிக் சிவாவாக ஆறுபாலா, கதாநாயகனின் அம்மாவாக பார்வதி, நண்பர்களாக சரத், நிர்மல், சதீஷ், பைக் ரேஸ் பயிற்சியாளர் அனீஸ், வில்லனாக அரவிந்த் என அள்ளித்தெளித்த கதாபாத்திரங்கள் என்றாலும் மனதில் தெளிவாக பதிவும் விதத்தில் தனி சிறப்போடு நிற்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பிரபாகர், இசை- பரத், கலை- கனியமுதன், எடிட்டிங்- அஜித், . சண்டை- சீனு ரெக்ஸ், சட்ஸ் ரெக்ஸ் பட்ஜெட்டிற்குள் பிரம்மாண்டத்தை காட்டுவது, காட்சிகளை விவரிப்பது, பைக் ரேஸ் பந்தயங்கள் என்று காட்சிகளின் பிரமிப்பை கூட்டும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களால் இந்தப் படம் மென்மேலும் மெருகுகூடி படத்தின் விறுவிறுப்பை எகிற வைக்கிறது.

தொழில்முறை பைக் ரேசராக வேண்டும் என்று கனவு காணும் ஒரு இளைஞனின் வாழ்நாள் லட்சியம், குடும்பத்தின் பங்களிப்பு, காதல், மோதல், கார் பந்தயம் நடக்கும் விதம், விதிமுறைகள், செலவுகள் என்று திரைக்கதையில் நுணுக்கங்கள் பல இருக்கும்படி இயக்கியிருக்கிறார் சாட்ஸ் ரெக்ஸ். ஒவ்வொரு காட்சிகளும் அரங்கேற்றங்களும் முதல் பாதியில் உள்ள தொடர்பற்ற ஒன்-லைனர்களும், புதுமையான விவரிப்பும், சின்னஞ்சிறு கனவுகள் பழைய நாட்களின் ஞாபகங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு கண்ணியமாக உள்ளது மற்றும் பைக்கைத் தவிர வேறு எதுவும் தெரியாத அஷ்வின் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறது. நிஜ பைக் ரேஸ் வீரர்கள் நடித்திருப்பதும், கமர்ஷியலாக படத்தை கொடுத்து முடிந்த வரை சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கலந்து இயக்கியிருக்கிறார் சாட்ஸ் ரெக்ஸ்.

மொத்தத்தில் ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கும் ரேசர் கனவுகள், லட்சியங்கள் மெய்பட விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம் வாழ்க்கையிலும் பந்தயத்திலும் ஜெயிக்கலாம்.