‘ரூல் நம்பர் 4’ (Rule Number 4)

0
128

‘ரூல் நம்பர் 4’ (Rule Number 4)

பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா ( AK Pratheesh Krishna ) கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka)கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா(Mohan vidhya ), ஜீவா ரவி(Jeeva Ravi), கலா கல்யாணி (Kala Kalyani ), பிர்லா போஸ்(Birla Bose), கலா பிரதீப்(Kala Pradeep ) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படக்குழு:
டேவிட் ஜான் (David John ) ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீரஜ் சுகுமாறன் (Dheeraj Sukumaran )பின்னணி இசையமைத்துள்ளார். எஸ்.பி.அஹமது ( S P Ahmed )எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, நடன இயக்குர் பொறுப்பை அஜய் காளிமுத்து (Ajay Kalimuthu )ஏற்றுள்ளார். சண்டைக் காட்சிகளை ராக் பிரபு (Rock Prabhu) வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை பா.சிவக்குமார்(P.SIVAKUMAR) கவனிக்கிறார். தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z ) இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை (Kumara Pillai, Kiran Meleveetil, Devarajan Pillai). தமிழகமெங்கும் ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution ) படத்தை வெளியிட்டுள்ளார். மக்கள் தொடர்பு – பா.சிவக்குமார்

கதைக்களம்:

ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது. அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதை அதிரடியான திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார்கள். காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள்.

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா இளமையாக லட்சணமாக இருக்கிறார். நாயகியைக் கண்டதும் காதலில் விழுவது, அவளிடம் காதலுக்கு சம்மதம் பெற விதவிதமாக அணுகுவது என எளிமையாக நடித்தால் போதும் என்பது மாதிரியான கதாபாத்திரம். அதை சரியாக செய்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீகோபிகாவின் தேகத்திலிருக்கும் கேரளத்து வனப்பும் பளீர் புன்னகையும் வசீகரிக்கிறது. ஹீரோவை காதலிக்கும் காதலி என்ற எந்தவிதமான தனித்துவமும் இல்லாத வழக்கமான வேடமாக இருந்தாலும், கிளைமாக்ஸ் நெருங்கும்போது வேறொரு அவதாரமெடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக மோகன் வைத்யா. மகளின் காதல் விவகாரம் தெரிந்து கொதிப்பது, உயிருக்கு ஆபத்தான சூழலில் மனம் கலங்கித் தவிப்பது என நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.

காதலுக்கு பாலமாக இருக்க நினைத்து, நினைத்ததை செய்து முடித்து, கொள்ளையர்களால் பரிதாப முடிவை சந்திக்கிற ஜீவா ரவி, வேனில் பயணிக்கிற அந்த கர்ப்பிணிப் பெண், கொள்ளையர்களாக வருகிற முரட்டு ஆசாமிகள் என மற்ற நடிகர்கள் கதைக்கு தேவையான நடிப்பை குறையின்றி வழங்கியிருக்கிறார்கள்.

காட்டிலாக்கா காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிர்லா போஸின் வில்லத்தனம் கெத்து.

பரந்து விரிந்த கேரள காட்டுப் பகுதியின் செழுமையை அதன் அழகு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’, ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே’ பாடல்களில் தென்றலின் குளுமையைத் தந்திருக்கிற தீரஜ் சுகுமாறன், பின்னணி இசையில் காட்சிகளின் எதிர்பார்ப்பை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்.

வேன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு, உடன் வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், நாயகன் எதையும் செய்யாமல் வேனில் அமர்ந்தபடியே திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதை, கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பயந்து சாகிற செக்யூரிட்டியின் நிலைப்பாட்டை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.

கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை மணிக்கணக்காக தாக்கிக் கொண்டேயிருப்பது சலிப்பு தருகிறது.

உருவாக்கத்தில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் வேன் கடத்தப்படுவதிலிருக்கும் பரபரப்பு, அழகிய கவிதையாய் கடந்தோடும் காதல் காட்சிகள் படத்தின் கவனம் ஈர்க்கும் சங்கதிகளாக அமைந்திருக்கின்றன.