ரூட் நம்பர் 17 சினிமா விமர்சனம் : ‘ரூட் நம்பர் 17’ சஸ்பென்ஸ் மர்மம் நிறைந்த ஆபத்தான த்ரில் பயணம் | ரேட்டிங்: 3/5

0
228

ரூட் நம்பர் 17 சினிமா விமர்சனம் : ‘ரூட் நம்பர் 17’ சஸ்பென்ஸ் மர்மம் நிறைந்த ஆபத்தான த்ரில் பயணம் | ரேட்டிங்: 3/5

நேநி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும்; ‘ரூட் நம்பர் 17’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜி தேவன்.

இதில் ஜித்தன் ரமேஷ் – ஜான் ஃப்ரெடி மற்றும் ஃப்ரெடி, அகில் பிரபாகர் – கார்த்திக், அஞ்சு ஓடியா – அஞ்சனா, மதன் குமார் – கான்ஸ்டபிள் விக்னேஷ்,ஹரீஷ் பேரடி மந்திரி குருமூர்த்தி,டாக்டர்.அமர் ராமச்சந்திரன் – இன்ஸ்பெக்டர் முகமது, ஜெனிபர் – ஜெனி ஜான் மனைவி,மாஸ்டர் நிஹல் – ஃப்ரெடி, டைட்டஸ் ஆபிரகாம் – நடராஜன் நிருபர், ஃப்ரோலிக் ஜார்ஜ் – ஹாஷிம் இப்ராஹிம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை : அவுசேப்பச்சன்,ஒளிப்பதிவு : பிரசாந்த் பிரணவம்,படத்தொகுப்பு : அகிலேஷ் மோகன்,சவுண்ட் கிராபிக்ஸ் : காந்தாரா டீம்,சவுண்ட் டிசைன் : ராஜாகிருஷ்ணன் (காந்தாரா டீம்), ஆக்சன் காட்சிகள் : ஜாக்கி ஜான்சன், ஒப்பனை : ரஷீத் அகமது (தேசிய விருது), மக்கள் தொடர்பு : ஏ.ஜான்

தென்காசி அருகில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதி இருக்கும் ரூட் நம்பர் 17 பாதையில் ஆறு மணிக்கு மேல் யாரும் பயணிப்பதில்லை. முப்பது வருடங்களாக மூடப்பட்ட பாதையில் பயணிப்பவர்கள் அனைவரும் இறந்து விடுவதாலும் ஆபத்து நிறைந்த பகுதிகாக கருதப்படுகிறது. இந்த பகுதிக்கு முன்னால் அமைச்சரின் மகன் கார்த்திக் (அகில் பிரபாகர்) மற்றும் அவரின் காதலி அஞ்சனா (அஞ்சு ஓடியா) உல்லாச ஜாலி டிரிப்பிற்காக அங்கே வருகின்றனர். அன்றிரவு அவர்களை பரட்டை தலை முடியும், தாடியும் கொண்ட ஃப்ரெடி (ஜித்தன் ரமேஷ்);  கொலைவெறியுடன் தாக்கி குகைக்குள் அடைத்து வைக்கிறார். அக்குகையிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் இருவரையும் அடித்து துன்புறுத்துகிறார் ஃப்ரெடி. இதில் கார்த்திக் தலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறார். இந்நிலையில் அஞ்சனா தங்கியிருக்கும் ஹாஸ்டல் வார்டன் அஞ்சனாவை காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவிக்கிறார். அதன் பின் முகமது  (டாக்டர்.அமர் ராமச்சந்திரன்) மற்றும் கான்ஸ்டபிள் விக்னேஷ் (மதன் குமார்) ஆகியோர் அஞ்சனாவையும், அவளுடைய காதலன் கார்த்திக்கையும் தேடி காட்டுப் பகுதிக்குள் பயணிக்கின்றனர். ரூட் நம்பர் 17 பாதையில் சென்ற இருவரும் இருட்டி விட்டதால் திரும்பி வந்து விடுகின்றனர்.ஆனால் இன்ஸ்பெக்டர் முகமதிற்கு ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்து இரவில் மீண்டும் தனியாக புறப்பட்டு ரூட் நம்பர் 17 பாதைக்கு வருகிறார். அவரும் ஃப்ரெடியால் தாக்கப்பட்டு மற்றொரு குகையில் அடைக்கப்படுகிறார். கார்த்திக், அஞ்சனா, இன்ஸ்பெக்டர் முகமது காணாமல் போன விவரத்தை கண்டுபிடிப்பதற்காக நிருபர் நடராஜன் (டைட்டஸ் ஆபிரகாம்) உதவியை கான்ஸ்டபிள் விக்னேஷ் நாடுகிறார். அவர் மூலம் முப்பது வருடங்களுக்கு முன் பொறியாளர் ஜான் ஃப்ரெடி (ஜித்தன் ரமேஷ்) ரூட் நம்பர் 17 பாதையில் குடும்பத்துடன் கொல்லப்பட்ட விவரத்தையும், அவருடைய மகன்; ஃப்ரெடி (மாஸ்டர் நிஹல்) மட்டும் தப்பித்து விட்டதாக சொல்கிறார். 30 வருடங்களாக காட்டில் மிருகங்கள் மத்தியில் போராடி வளர்ந்து தன் பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்க மகன் ஃப்ரெடி (மகன் ஜித்தன் ரமேஷ்) அவர்களை கடத்தியிருக்கலாம் என்று கூறுகிறார். இந்த தகவலின் அடிப்படையில் மீண்டும் ரூட் நம்பர் 17 பாதையில் மூன்று பேரை தேடி செல்கிறார் கான்ஸ்டபிள் விக்னேஷ். இவரின் தேடுதல் வேட்டையில் தொலைந்து போனவர்களை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? ஃப்ரெடியிடம் மாட்டிக் கொண்டாரா? ஃப்ரெடியின் வழி வாங்கும் படலம் முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் இறுதியில் புரியாத புதிருக்கான விடை.

நேர்மையான இன்ஜீனியார் தந்தை ஜான் ஃப்ரெடி மற்றும் பரட்டைத்தலை, தாடி, அழுக்குபடிந்த உடையுடன் மகன்  ஃப்ரெடி என்று இரு வேறு மாறுபட்ட கதாபாத்திரத்தில் தேர்ந்த அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்து அமைதியாகவும் அதே சமயம் பயமுறுத்துவதிலும் வெற்றி வெற்றிருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

காதல் ஜோடியாக நடித்திருக்கும் அகில் பிரபாகர் மற்றும் அஞ்சு ஓடியா முதலில் சந்தோஷமாக காட்டிற்குள் பயணிக்கும் இருவரும், அதன் பின் ஜித்தன் ரமேஷிடம் மாட்டிக் கொண்டு படாதபடு படுவதும், அதிலும் அஞ்சு ஒடியா பரபரப்பாக ஒடுவது, தப்பிக்க முயற்சிப்பது, சேற்றில் விழுந்து எழுவது, காதலனை காப்பாற்ற முயற்சிப்பது, கஷ்டப்பட்டு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணாகும் போது உடைந்து அழுவது என்று படம் முழுவதும் அவரின் நடிப்பு அபாரம்.

வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பேரடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருவி மதன், ஜான் ஃப்ரெடி மனைவியாக ஜெனிபர், மகன் சிறு வயது ஃப்ரெடியாக மாஸ்டர் நிஹல், நிருபராக டைட்டஸ் ஆபிரகாம், ஃப்ரோலிக் ஜார்ஜ் என்று அத்தனை பேரின் உழைப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

ரூட் எண் 17 பாதையின் ஆபத்தையும், இயற்கை எழிலுடன் வினோதமான சூழ்நிலையையும், குகைகளின் வடிவமைப்பும், மிரட்டலான காட்சிக் கோணங்கள் பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு திகிலை வரவழைப்பதில் பெரும் பெற்றி பெற்றிருக்கிறார்.

யுகபாரதி, கு.கார்த்திக் மற்றும் கவிஞர் செந்தமிழ்தாசன் பிரசாந்த் பிரணவம் எழுதிய பாடல் வரிகளுடன் பல வெற்றிகளை கொடுத்த மலையாள இசையமைப்பாளர் ஓசேப்பச்சன் திறமை படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

ஜாக்கி ஜான்சனின் சண்டைக் காட்சிகளும், பேபோர் முரளியின் கலை இயக்கம் அபாரம். இவர்களின் கடின உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது.

அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பு படத்தின் தொழில்நுட்ப நேர்த்திக்கு மேலும் பங்களிக்கிறது.

உணர்ச்சிகரமான கதையுடன் பிண்ணிப் பிணைந்த மர்மத்தை திறமையாகக் கையாள்வதே படத்தின் வெற்றிக்குக் காரணம். அபிலாஷ் ஜி.தேவனின் இயக்கம் பயம் நிறைந்த சூழலை உருவாக்கி, ரூட் எண் 17ன் அமானுஷ்ய உலகிற்கு பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான ஆழத்துடன் இணைந்து, வழக்கமான த்ரில்லருக்கு அப்பால் படத்தை உயர்த்தி தடைசெய்யப்பட்ட பாதையின் மர்மத்தை திறம்பட படம்பிடித்து, சஸ்பென்ஸ் நிறைந்த சூழலை உருவாக்குவதில் அதிக திறமையுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன்.

மொத்தத்தில் நேநி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும்; ‘ரூட் நம்பர் 17’ சஸ்பென்ஸ் மர்மம் நிறைந்த ஆபத்தான த்ரில் பயணம்.