ரங்கோலி திரைப்பட விமர்சனம் : ‘ரங்கோலி’ இளமை பருவத்தின் வர்ணஜாலம் | ரேட்டிங்: 3/5

0
334

ரங்கோலி திரைப்பட விமர்சனம் : ‘ரங்கோலி’ இளமை பருவத்தின் வர்ணஜாலம் | ரேட்டிங்: 3/5

கோபுரம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பாபுரெட்டி மற்றும் சதீஷ்குமார்; தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி இருக்கிறார்.

ஹமரேஷ், பிரார்த்தனா, சாய்‌ ஸ்ரீP, அக்‌ஷயா, ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-எடிட்டிங் சத்யநாராயணன். இசை கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு மருதநாயகம். கலை ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு சதீஷ் (ஏய்ம்)

சலவை தொழிலை செய்து வரும்‌ காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) காளியம்மா (சாயஸ்ரீ பிரபாகரன்) தம்பதிகளுக்கு சத்யா (‌ஹமரேஷ்‌) எனும்‌ மகனும்‌, வேம்பு லட்சுமி (அக்ஷயா) எனும்‌ மகளும்‌ உள்ளனர்‌. வேம்பு தந்தைக்கு உதவியாக இருக்க, சத்யா மட்டும் அரசு பள்ளியில் படிக்கிறார். சத்யா தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாட்டு, சண்டை என்று நேரத்தை போக்குவதை அறியும் பெற்றோர் மகனை அரசு பள்ளியிலிருந்து தனியார் பள்ளிக்கு அவன் விருப்பத்திற்கு எதிராக சேர்க்கின்றனர். ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் காந்தி, மகனை படிக்க வைக்க மேலும் கடன் வாங்குகிறார். இதை சமாளிக்க தாய் காளியம்மாவும் வேலைக்கு செல்கிறார். சத்யா அரசு பள்ளியிலிருந்து வருவதால் தனியார் பள்ளியில் சக வகுப்பு மாணவர்கள் அடாவடியாக சண்டை இழுக்கின்றனர்;. மேலும் தமிழ் வழி கல்வி படித்த சத்யா ஆங்கில வழி கல்வி படிக்க தடுமாறுகிறார். இதனால் பள்ளிக்கு செல்ல விரும்பம் இல்லாவிட்டாலும் பெற்றோரின் ஆசைக்காக சென்று வருகிறார். வகுப்பில் படிக்கும் பார்வதி (பிரார்த்தனா) மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.முதலில் படிப்பில் கவனம் சிதறினாலும், அதன் பின் தன் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை பார்த்து மனதை மாற்றிக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துகிறார். இறுதியி;ல்  சக மாணவர்கள் ஏற்படுத்தும் பிரச்சனையால் சத்யா எவ்வா பாதிக்கப்படுகிறார்? சத்யா எடுக்கும் முடிவு என்ன? தனியார் பள்ளியில் படிப்பை தொடர்ந்தாரா? பார்வதி மீது இருக்கும் ஈர்ப்பை கை விட்டாரா? தான் நினைத்ததை சாதித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பள்ளி மாணவன் சத்யாவாக ஹமரேஷ் பொருத்தமான தேர்வு. உணர்ச்சிகளை முகத்திலும், கண்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தி முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். பெற்றோர்களின் துன்ப நிலையை பார்த்து மனம் வருந்தும் இடத்தில் நல்ல மகனாக ஜொலிக்கிறார்.இவர் எதிர்காலத்தில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் பேசப்படும் நடிகராக வலம் வருவார்.

ஆடுகளம் முருகதாஸ் மகனின் வளர்ச்சிக்காக தன்னை வருத்திக் கொள்ளும் கதாபாத்திரம். எந்த சூழ்நிலையிலும் மகனை நினைத்து பெருமை கொள்ளும் மனோபாவத்துடன் கஷ்டத்திலும் சமாளித்து இறுதியில் மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்து அவனின் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் இடத்திலும் யதார்த்தமாக செய்துள்ளார்.

பள்ளி மாணவியாக பிரார்த்தனா குழந்தை முகத்துடன் அப்பாவியாக உண்மையில் காதலிக்கிறாரா அல்லது ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் செய்துள்ளார்.

தாய் காளியம்மாவாக சாய்‌ஸ்ரீP சில இடங்களில் மிகையான நடிப்பாக தெரிந்தாலும் வடசென்னை வசனத்தில் அசத்தியுள்ளார். அக்காவாக அக்‌ஷயா இயல்பான நடிப்பு அற்புதம்.

இசை கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு மருதநாயகம். கலை ஆனந்த் மணி, எடிட்டிங் சத்யநாராயணன் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்கள் சிம்பிளான கதைக்கேற்ற வகையில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

நன்றாக படிக்கும் மாணவனை நண்பர்களின் சேர்க்கை சரியில்லை என்று அரசு பள்ளியிலிருந்து தனியார் பள்ளிக்கு மாற்றும் பெற்றோர் அதனால் பாதிக்கப்படும் மாணவனின் மனநிலையையும், உளவியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறுவதும், இடையிடையே சக மாணவர்கள் மோதல், காதல் என்று பள்ளியில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் கோர்வையாக கொடுத்து இயக்கியுள்ளார் வாலி மோகன்தாஸ். ஆனால் இந்தப் படத்தில் காதல் பற்றி மட்டுமே காட்டாமல், பெற்றோர்களின் வலியையும் அதிகமாக காட்டி மகனின் பொறுப்பையும், உண்மை நிலையையும் அறிந்து நடக்கும் மாணவனாக சிறப்பான கருத்தை சொல்லியிருந்தாலும் இறுதியில் படத்தை எப்படி முடிப்பது என்பதில் சிறிது தடுமாறியிருக்கிறார் இயக்குனர் வாலி மோகன்தாஸ். இருந்தாலும் இயக்குனரின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கோபுரம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பாபுரெட்டி மற்றும் சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘ரங்கோலி’ இளமை பருவத்தின் வர்ணஜாலம்.