யூகி திரைப்பட விமர்சனம்: யூகி கதாபாத்திரத்தேடலில் கொஞ்சம் த்ரில்லிங்கான பரமபத பழி தீர்க்கும் விளையாட்டு | ரேட்டிங்: 2.5/5

0
220

யூகி திரைப்பட விமர்சனம்: யூகி கதாபாத்திரத்தேடலில் கொஞ்சம் த்ரில்லிங்கான பரமபத பழி தீர்க்கும் விளையாட்டு | ரேட்டிங்: 2.5/5

யூஏன் பிலிம் ஹவுஸ் தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ் தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் யூகி படம் வெளிவந்துள்ளது.
இதில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்ஷ்மி,ஆத்மியா, முனிஷ்காந்த், நமோ நாராயண் மற்றும் வினோதினி  இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் யூகி.
புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவாளராகவும், ஜோமின் எடிட்டராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினராக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார்.மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.

பிரபல நடிகர் ஜான் விஜய் அடையாள தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்படுகிறார். முன்னால் போலீஸ் அதிகாரி பிரதாப் போத்தன் தன்னுடைய மகள் கார்த்திகாவை கண்டுபிடித்து தருமாறு துப்பறியும் நபர் நரேனிடம் சொல்கிறார். நரேன், கதிர் மற்றும் தன் சகாக்களுடன் தீவிரமாக கார்த்திகாவை தேடுகிறார். இன்னொருபுறம் நட்டியும் கார்த்திகாவை தன் நண்பர்களுடன் தேடுகிறார். இவர்கள் அனைவருமே கார்த்திகாவுடன் சம்பந்தபட்டவர்களை நெருங்கும் போது அவர்கள் முன்கூட்டியே கொல்லப்பட செய்வதறியாது திகைக்கிறார்கள்.கார்த்திகாவை இவர்கள் தேடுவதற்கான காரணம் என்ன? கார்த்திகாவிற்கு என்னவானது? கார்த்திகாவை கண்டுபிடித்தார்களா? இவர்களின் நோக்கம் நிறைவேறியதா? ஜான் விஜய்யை கொன்றவர் யார்? எதற்காக? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

முதலில் சாதாரண இன்ஸ்பெக்டராக சித்தரிக்கப்படும் கதிர் இடைவேளைக்கு பின் பழி வாங்கும் கோபக்கார இளைஞராக, இன்னொரு முகத்தை  வெளிப்படுத்தி சண்டைக்காட்சிகளில் அனல் பறக்க தெறிக்க விட்டு அசத்திவிடுகிறார். துப்பறியும் நிபுணராக நரேன் அமைதியாக எடுக்கும் நடவடிக்கை, முதலில் வில்லனாக தோன்ற பின்னர் அவரின் உண்மையான முகம் வெளிப்பட தன் முதிர்ச்சியான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். ரவுடி என்று நினைக்க ஆனால் இன்ஸ்பெக்டராக காட்டப்படும் நட்டி, வாடகை தாயாக கயல் ஆனந்தி கதாபாத்திரம் தத்ரூபமான நடிப்பு கைதட்டல் பெறுகிறது, தொலைந்து போன பெண்ணாக பவித்ரா லக்ஷ்மி, ஆத்மியா, முனிஷ்காந்த், நமோ நாராயண் மற்றும் வினோதினி படத்திற்கு பலம்.

புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு, எடிட்டராக ஜோமின், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ரஞ்சன் ராஜ் இசை படத்தின் வித்தியாசமான கோணத்தில் காட்சிகளை விரிவுபடுத்தி அசத்தலுடன் கொடுத்துள்ளனர்.

வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான கதைக்களமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ். இப்பொழுது புது டிரெண்டாக கதாபாத்திரங்களை காட்டி படத்தை நகர்த்தி பின்னர் அந்த கதாபாத்திரங்களில் உண்மையான நபர்கள் வேறொருவராக காட்டி படத்தின் போக்கை திசை திருப்பும் முயற்சியாக முதலில் மிரள் படத்தில் பார்த்த அனுபவத்தை இந்தப் படத்தில் உணர முடிகிறது. முதல் பாதி ஒருவித எதிர்பார்ப்புடன் நகர இரண்டாம் பாதியில் முக்கிய கதையை பலவித கோணங்களில் பயணிக்க தட்டுத் தடுமாறி சற்று குழப்பத்துடன் முடித்திருக்கிறார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ்.

மொத்தத்தில் யூஏன் பிலிம் ஹவுஸ் தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ் தயாரிப்பில் யூகி கதாபாத்திரத்தேடலில் கொஞ்சம் த்ரில்லிங்கான பரமபத பழி தீர்க்கும் விளையாட்டு.