யசோதா விமர்சனம் : வாடகைத்தாய் வணிகத்தை அப்பட்டமாக சொல்லி இளம் பெண்கள் பணத்திற்காக ஏமாறாமல் விழிப்புடன் இருப்பதற்காக எச்சரிக்கை தரும் பொன்மணி இந்த பெண்மணி வெற்றி வசூலில் சூட்டும் மகுடமணி | ரேட்டிங்: 3.5/5
யசோதவில் சமந்தா வாடகைத்தாய் வேடத்தில் நடித்துள்ளார். முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீPபாதா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திட்டத்தை ஸ்ரீPதேவி மூவிஸ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார்.
இசை மணி சர்மா, ஒளிப்பதிவு எம்.சுகுமார், எடிட்டங் மார்த்தாண்டன். கே.வெங்கடேஷ், கலை : அசோக், இயக்கம்: ஹரி-ஹரிஷ்,இயக்கம் : ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா.
யசோதா (சமந்தா) தன் தங்கையுடன்; வசிக்கிறாள். சகோதரியின் ஆபரேஷனுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பணக் கஷ்டம் காரணமாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறாள். ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவள் வயிற்றில் ஒரு பணக்காரக் குழந்தை வளரச் செய்துஅதற்காக ஈவா என்ற ஒரு மறைக்கப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மது (வரலக்ஷ்மி சரத்குமார்) கண்காணிப்பில் ஈவா மருத்துவமனையில் யசோதாவைப் போல வேறு சில இளம் வாடகைத் தாய்மார்கள் பிரசவத்திற்கு முன் பராமரிக்கப்படுகிறார்கள். அந்த ஆடம்பர மையத்தில் அவருக்கு அனைத்து விதமான தங்கும் வசதிகளையும் செய்து கொடுத்தது யசோதாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. யசோதா இந்த மையத்தில் கவுதம் (உன்னி) என்ற அழகான மருத்துவரால் சிகிச்சை பெறுகிறார், ஆனால் அங்கே சில பெண்கள் மாதங்கள் கடந்து பிரசவ நேரத்தில் மறைந்து விடுவார்கள். ஏதோ அபத்தம் நடக்கிறது என்பதை யசோதா விரைவில் உணர்ந்தாள். அவள் அங்கு வாடகைத்தாய் என்ற பெயரில் குற்றங்கள் நடக்கிறது என்பதை அறிந்து, அந்த குற்றங்களை எதற்;காக நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். மறுபுறம் ஒரு கார் விபத்தில் ஒரு தொழிலதிபரையும் ஒரு மாடலையும் கொள்ளப்பட, மற்றொன்று ஒலிவியா என்ற வெளிநாட்டு நடிகரின் மரணம் குறித்து சதி இழையுடன் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? ஈவாவில் வாடகைத் தாய்மார்களுக்கு என்ன நடக்கிறது? அவற்றின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் என்ன? யசோதா அவர்களை எப்படி கண்டுபிடித்தாள்? அந்த மருத்துவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் என்ன ஆனது என்பதை தெரிந்துக்கொள்ள படம் பார்க்க வேண்டும்.
ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நாயகியாக பரிமளித்துக்கொண்டே, மறுபுறம் கதாநாயகியின் முக்கிய வேடங்களில் ரம்யமாக இருக்கிறார் சமந்தா. சமந்தாவின் நடிப்பு இந்தப் படத்தின் ஹைலைட் என்று சொல்லலாம். அவரது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டிருந்தாலும், சமந்தா அனைத்தையும் சமன் செய்து முழுமையான உழைப்பை அளித்துள்ளார். சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் அட்டகாசம், கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்ததுள்ளது.
வரலக்ஷ்மி சரத்குமார் முக்கியமான நெகட்டிவ் ரோலில் அசத்தியுள்ளார். உன்னி முகுந்தன் இரண்டு மாறுபாடுகளுடன் நன்றாக செய்துள்ளார். நடிகர்கள் ராவ் ரமேஷ் , சம்பத், சத்ரு, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீPபாதா மற்றும் பலர் தங்கள் பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
மணி சர்மா இசையமைத்திருக்கும் இசையும், பின்னணி இசையும் காட்சியை சிறப்பாக்கியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் படத்திற்கு நல்ல கலர்ஃபுல் காட்சிகளை கொடுத்துள்ளார். எடிட்டிங் த்ரில் உணர்வை அளிக்கிறது.
யசோதாவை ஹரி மற்றும் ஹரிஷ் எழுதி இயக்கியுள்ளனர், எல்லோரும் நினைப்பது போல் இது ஒரு ‘வாடகைத் தாய்’ என்ற கதையைச் சுற்றி நடக்கும் கதையல்ல. வாடகைத் தாய் என்ற வணிகத்தைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. சமூகத்தில் பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இந்தக் கதைக்களத்தில்தான் யசோதா பயணிக்கிறது. குழந்தையை சுமக்கும் பெண்கள் மட்டுமல்ல… அதன்பிறகு குழந்தையின் தாயாக மாறும் பெண்களின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கிறது முதல் பாகம். இரண்டாம் பாகத்தில், மத்திய அமைச்சர் (ராவ்ரமேஷ்) மற்றும் மருத்துவ மாஃபியாவில் உள்ள மருத்துவர்களுடன் அவருக்கு இருந்த தொடர்பைப் பற்றி கதை செல்கிறது. படத்தில் கர்ப்பிணிகள் காணாமல் போகும் காட்சிகளால் கதையின் வேகம் கூடுகிறது. நம்ப முடியாத உண்மைகளையும், சம்பவங்களையும் இந்தப் படத்தில் இருந்தாலும், இறுதியில் அதற்கான ஆதாரங்களாக காட்டப்படும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறுதியில் இரண்டு ட்ராக்குகளை இணைத்தது மிகவும் இயல்பாக, வெகுவாக கவர்ந்து எங்கும் சலிப்பின்றி அமைத்து அவர்கள் தங்கள் பங்கை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளனர்.
மொத்தத்தில்: ஸ்ரீதேவி மூவிஸ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள ‘யசோதா” வாடகைத்தாய் வணிகத்தை அப்பட்டமாக சொல்லி இளம் பெண்கள் பணத்திற்காக ஏமாறாமல் விழிப்புடன் இருப்பதற்காக எச்சரிக்கை தரும் பொன்மணி இந்த பெண்மணி வெற்றி வசூலில் சூட்டும் மகுடமணி.