மேக்ஸ் சினிமா விமர்சனம் : மேக்ஸ் அதிரடி ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான அசத்தலான வசீகரிக்கும் மாஸ் த்ரில்லர் | ரேட்டிங்: 4.5/5
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரித்திருக்கும் மேக்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் கார்த்திகேயா.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அர்ஜுன் மஹாக்ஷய் – மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப், காவல் ஆய்வாளர் ரூபாவாக வரலட்சுமி சரத்குமார், காவலர் ஆரத்தியாக சம்யுக்தா ஹொர்னாட்,காவலர் மீனாவாக சுக்ருதா வாக்லே, கானியாக சுனில், அமைச்சர் பரசுராமாக சரத் லோகிதாஸ்வா, நரசிம்மனாக வம்சி கிருஷ்ணா, அமைச்சர் டேனியலாக ஆடுகளம் நரேன், தேவராஜாக பிரமோத் ஷெட்டி, செபாஸ்டியனாக ரெடின் கிங்ஸ்லி, தலைமைக் காவலர் ராவணனாக இளவரசு, காவலர் ஜகதீஷாக அனிருத் பட், உதவி காவல் ஆய்வாளர் தாஸாக ‘உக்ரம் மஞ்சு’இகாமராஜு கரண் ஆர்யா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் :- ஒளிப்பதிவாளர் : சேகர் சந்திரா, இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் : சிவகுமார் ஜே.,படத்தொகுப்பாளர் : எஸ். ஆர். கணேஷ் பாபு, அதிரடி ஆக்ஷன் இயக்குனர் : சேத்தன் டிசோசா ,நிர்வாக தயாரிப்பாளர் : எம். டி. ஸ்ரீPராம், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ஏ இளங்குமரன், தயாரிப்பு நிர்வாகி : என் மகேந்திரன், சம்பகடமா பாபு கே. எஸ்.,ஆடை வடிவமைப்பாளர் : பாரத் சாகர், ஆடைகள் : பெருமாள் செல்வம்,ஒப்பனை : நெல்லை வி.சண்முகம், ஒலிப்பதிவு : டி. உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு : டி. உதய் குமார், ரஞ்சித் வேணுகோபால், எம். சரவணா குமார் (சவுண்ட் வைப்),டிஐ : நாக் ஸ்டுடியோஸ்,எம். பி. சஜய் குமார்,வண்ணக் கலைஞர் : பிரசாத் சோமசேகர், விஎஃப்எக்ஸ் : அஜாக்ஸ், நாக் ஸ்டுடியோஸ், ஃபைவ்எஃப்எக்ஸ், படங்கள் : இம்ரான், டிசைன்கள் : பவன், nரடோட் டிசைன்ஸ், விளம்பரங்கள் : கே. ஆர். ஜி கனெக்ட்ஸ், பிஆர்ஒ தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்
பலமுறை பணிஇடைநீக்கம் செய்யப்பட்டு மாற்றலாகி புதிய காவல் நிலையத்தில் பொறுப்பேற்க வரும் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மஹாக்ஷய் (சுதீப்) என்ற மேக்ஸ். அவர் மீண்டும் புதிய பணியைத் தொடங்குவதற்கு முந்தைய இரவு, அவரது வீட்டிற்குச் செல்லும் வழியில், அதிகாரம், பணபலம் பொருந்திய இரண்டு அமைச்சர்களின் மகன்களால் தனது சக காவல் ஊழியர்கள் சிலர் மேல் காரை மோதி காயப்படுத்தி அதன் பின் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிளிடம் தவறாக நடந்து கொள்வதைக் மேக்ஸ் கண்டு அடித்து உதைத்து இரண்டு இளைஞர்களையும் கைது செய்கிறார். அவர்களை லாக்கப்பில் தள்ளி காவலர்களிடம் எப்ஐஆர் போடும்படி மேக்ஸ் சொல்லி விட்டுச் செல்கிறார்.அந்த இளைஞர்கள் அமைச்சர்களின் மகன்கள் என்பதைக் காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீஸ்காரர்கள் தெரிந்துகொண்டு தங்கள் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று அஞ்சி அவர்கள் மேல் எப்ஜஆர் போட மாட்டோம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகின்றனர்.அந்த நேரத்தில் மறுநாள் ஒய்வுபெற இருக்கும் தலைமைக் காவலர் ராவணன் (இளவரசு) தன் மனைவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக போனில் அழைப்பு வர அவரும் அந்த இருவரையும் லாக்அப்பில் வைத்து காவல் நிலையத்தை பூட்டி விட்டு செல்கிறார். சிறிது நேரம் கழித்து வரும் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தை திறந்து பார்க்கும் போது, ஆயதகிடங்கு அறையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கின்றனர். காவலர்கள் அந்த இரண்டு இளைஞர்கள் ஒருவரையொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு தாக்கி இறந்து விட்டதாக நினைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேக்ஸிடம் தெரிவிக்கின்றனர். அமைச்சர்களுக்கு தங்கள் மகன்கள் இறந்து விட்டனர் என்பது தெரிந்தால் காவலர்கள் அனைவரையும் கொன்று விடுவார்கள் அதனால் இதிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு மேக்ஸிடம் மன்றாடுகிறார்கள். அதே சமயம் அமைச்சர்கள், மேலதிகாரி ஆகியோர் மேக்ஸிடம் இரண்டு இளைஞர்கள் அங்கே இருந்தால் விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்கு மேக்ஸ் அந்த இளைஞர்;கள் காவல் நிலையத்தில் இல்லை என்று தெரிவிக்கிறார். இதனால் சந்தேகமடையும் அமைச்சர் தனக்கு நம்பிக்கைக்குரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாவை (வரலட்சுமி சரத்குமார்) போலீஸ் நிலையத்திற்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்த்து தனது மகன்கள் அங்கே இருந்தால் போலீஸ் நிலையத்திலிருந்து மீட்டு வரும்படி சொல்லி உளவு பார்க்க அனுப்புகிறார். இதனிடையே விரைவாக வரும் இன்ஸ்பெக்டர் மேக்ஸ் காவல் நிலையத்திற்கு வந்து இருவர் உடலையும் அப்புறப்படுத்தும்படியும் இறந்ததை விபத்து போல் மாற்றும்படியும் காவலர்களிடம் அதற்கான திட்டத்தைச் சொல்கிறார். அதன் பின் துரிதமாக செயல்பட்டு இருவர் உடலையும் வெளியே காவல் நிலையத்தில் உள்ள பழுதடைந்த வாகனத்தில் மறைத்து வைக்கின்றனர். இந்நிலையில் அங்கே வரும் போலீஸ் ஆய்வாளர் ரூபா காவல் நிலையத்திற்கு வந்து சோதனை செய்ய இருவரும் இல்லாததால் வெளியே வந்து தகவல் கொடுக்கிறார். எனினும் இதனை நம்பாத அமைச்சர்கள் மற்றும் ரூபாவும் சேர்ந்து காவல் நிலையத்தை அடியாட்களை வைத்து கண்காணிக்கின்றனர். இவர்களிடமிருந்து தப்பித்து மேக்ஸ் அந்த இரண்டு பேரின் உடலை எப்படி வெளியே எடுத்துச் சென்றார்? காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்து வராமல் எப்படி மேக்ஸ் பார்த்துக் கொள்கிறார்? இறுதியில் அழுத்தம் தரும் அதிகாரம், அரசியலுக்கு அடி பணிந்தாரா? இல்லையா? இருவரும் எப்படி இறந்தார்கள்? அதற்கான முக்கிய காரணம் என்ன? என்பதே படத்தின் பரபரப்பை கிளப்பும் ஒரே இரவில் நடக்கும் கதையின் க்ளைமேக்ஸ்.
அர்ஜுன் மஹாக்ஷய் – மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் ஆக்ரோஷமான, மிரட்டலான பாணியில் படம் முழுவதும் நடை, உடை, பாவனை, வசனம், சண்டைக் காட்சிகள் என்று தனக்குரிய ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். பரபரப்பாக செல்லும் காட்சிகள், அதற்காக உடனடியாக எடுக்கும் முடிவுகள், தவறாக போய்விட்டாலும் கலங்காமல் அதற்காக தீர்வுகளை விரைவாக எடுக்கும் தந்திரம், என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பது, அனைவருக்கும் படத்தில் சமபங்களிப்பு என்று ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் மாஸ் ஹீரோவாக அதகளம் செய்துள்ளார். வெல்டன்.
காவல் ஆய்வாளர் ரூபாவாக வரலட்சுமி சரத்குமார், காவலர் ஆரத்தியாக சம்யுக்தா ஹொர்னாட்,காவலர் மீனாவாக சுக்ருதா வாக்லே, கானியாக சுனில், அமைச்சர் பரசுராமாக சரத் லோகிதாஸ்வா, நரசிம்மனாக வம்சி கிருஷ்ணா, அமைச்சர் டேனியலாக ஆடுகளம் நரேன், தேவராஜாக பிரமோத் ஷெட்டி, செபாஸ்டியனாக ரெடின் கிங்ஸ்லி, தலைமைக் காவலர் ராவணனாக இளவரசு, காவலர் ஜகதீஷாக அனிருத் பட், உதவி காவல் ஆய்வாளர் தாஸாக ‘உக்ரம் மஞ்சு’இகாமராஜு ,கரண் ஆர்யா என்று ஒவ்வொருவருக்கும் இந்த படத்தில் பங்கு முக்கியமானது அதை அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தில் தன்னுடைய ஒளிப்பதிவால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்று ஊகிக்க முடியாதபடி படபடக்க வைத்து முழு கதையும் ஒரு தனித்துவமாக ஆக்ஷன் காட்சிகளில் அசர வைத்து பரபரப்புக்கு உத்தரவாதம் தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா.
இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் படத்தின் காட்சிகளுக்கு முழு வலிமையான இசையை கொடுத்து படத்தின் இரண்டாவது ஹீரோவாக இருந்து தன் பின்னணி இசையில் அதிரடி காட்சிகளில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
படத்தொகுப்பாளர் : எஸ். ஆர். கணேஷ் பாபு படத்தின் விறுவிறுப்பை தக்க வைப்பதில் வெற்றி காண்கிறார்.
ஆக்ஷன் இயக்குனர் சேத்தன் டிசோசா படம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளில் சிறப்பாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார்.
லோகேஷ் கனகராஜின் கைதியை (2019) போன்று ஒரே இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களம் மேக்ஸ்.இதில் காவல் அதிகாரி தன் கீழ் பணிபுரியும் காவலர்களை காப்பாற்றுவதற்காக எடுக்கும் முடிவு உயர் காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரௌடிகள் என்று சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவதை சமாளித்து அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக திரைக்கதையமைத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்; விஜய் கார்த்திகேயா. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தோய்வு ஏற்படாதபடி ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையோடு அசத்தலான திரைக்கதை, சிறப்பான தொழில்நுட்பம் மூலம் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற பதைபதைப்பை தக்க வைத்து அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம்இறுதி காட்சியில் திருப்புமுனையோடு கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா.
மொத்தத்தில் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரித்திருக்கும் மேக்ஸ் அதிரடி ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான அசத்தலான வசீகரிக்கும் மாஸ் த்ரில்லர்.