மெட்ராஸ்காரன் சினிமா விமர்சனம் : மெட்ராஸ்காரன் செய்யாத குற்றத்திலிருந்து மீள துடிக்கும் வெள்ளேந்தி மனதுக்காரன் | ரேட்டிங்: 3/5

0
342

மெட்ராஸ்காரன் சினிமா விமர்சனம் : மெட்ராஸ்காரன் செய்யாத குற்றத்திலிருந்து மீள துடிக்கும் வெள்ளேந்தி மனதுக்காரன் | ரேட்டிங்: 3/5

எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சார்பில் பி ஜெ தயாரித்திருக்கும் மெட்ராஸ்காரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வாலி மோகன் தாஸ்.

இதல் ஷேன் நிகம் – சத்யா, கலையரசன் – துரை சிங்கம், நிஹாரிகா – மீரா, ஐஸ்வர்யா தத்த​h – கல்யாணி, கருணாஸ் – ஹீரோவின் மாமா, பாண்டியராஜன் – ஹீரோவின் அப்பா, சூப்பர் சுப்புராயன் – முத்து பாண்டி, சரண் – மணிமாறன், கீதா கைலாசம் கதீஷ்

தொழில்நுட்ப குழுவினர்கள் :- இசை: சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர்: பிரசன்னா எஸ் குமார், எடிட்டர்: வசந்தகுமார், கலை – ஆனந்த் மணி, ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன், மக்கள் தொடர்பு – சதீஷ் (எய்ம்)

புதுக்கோட்டையில் கஷ்டப்படும் சத்தியமூர்த்தி (ஷேன் நிகம்)குடும்பம். வைராக்கியத்துடன் சென்னை வந்து நன்றாக சம்பாதித்து வெற்றி பெற்று நல்ல நிலைமைக்கு வந்து சொந்த ஊருக்கு திரும்பும் சத்தியமூர்த்தி தனது காதலி மீராவுடன் (நிஹாரிகா கொனிடேலா) பிரமாண்டமான திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். திருமணத்தில் கலந்து கொள்ள மீரா, அவளது தங்கை மற்றும் திருமணத்தில் விருப்பமில்லாத தந்தை வந்து ஒட்டலில் தங்குகின்றனர். திருமண ஏற்பாடுகள் உறவினர்கள் சூழ தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. தாயின் பேச்சை கேளாமல் காதலியை பார்க்க காரில் செல்லுகிறார் சத்தியமூர்த்தி. வழியில் உள்@ரில் நல்ல மனிதராக இருந்தாலும் கோபக்கார  துரைசிங்கத்துடன் மோதல் ஏற்பட்டு அவரிடம் வாய் தகராறு செய்துவிட்டு செல்கிறார். காதலி மீராவிடம் சத்தியமூர்த்தி செல்போனில் பேசிக்கொண்டே தனது காரை ஓட்டுகிறார். வழியில் நாய் குறுக்கே வர எதிர்பாராத விதமாக துரைசிங்கத்தின் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிட அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் கொள்கிறார்கள். இந்த சம்பவம் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் ஒரு பெரும் மோதலாக மாறி, இருவரையும் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றுகிறது. அதன் பிறகு நிறை மாத கர்ப்பிணி நலமாக இருந்தால் மட்டுமே காவல் நிலையத்திலிருந்து வெளியே வர முடியும் என்ற சூழல் நிலவுகிறது.இதனால் சத்தியமூர்த்தி – மீரா திருமணம் தடைபட்டதா? நிறைமாத கர்ப்பிணி கல்யாணியின் நிலைமை என்ன? துரைசிங்கம் – சத்தியமூர்த்தி மோதல் எதுவரை கொண்டு சென்றது? இறுதியில் சத்தியமூர்த்தியின் வாழ்க்கை நடந்த சோகங்கள் என்ன? அதிலிருந்து மீண்டு வந்தாரா?  என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கலையரசன் துரைசிங்கமாக அநீதிக்கு எதிராக தனது கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் தடாலடியாக காட்டுவதும், நீண்ட காத்திருத்தலுக்குப் பின் பிறக்க போகும் குழந்தை, தன் மனைவி கல்யாணியின் நிலைமை கண்டு மனக்கலக்கத்துடன், எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தவிப்பதும், அதற்கு பழி வாங்க துடிக்கும் நேரத்திலும் தனக்கு ஏற்பட்ட சோகத்தை தாங்க முடியாத கணவராக தன் நிலைபாட்டை முரட்டுத்தனத்துடன் நன்றாக நிரூபித்திருக்கிறார்.

சத்தியமூர்த்தி கதாபாத்திரத்தில் ஷேன் நிகம் மலையாளம் கலந்த தமிழில் பேசி, காதல் காட்சிகளில் நெருக்கத்தை காட்டி உணர்;ச்சிகரமான காட்சிகளில் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

காதலி மீராவாக நிஹாரிகா கொனிடேலா காதல் காட்சிகள், நடனம் என்று முதல் சில காட்சிகள் வந்து விட்டு மறைந்து போகிறார்.

துரைசிங்கத்தின் மனைவி கல்யாணியாக ஐஸ்வர்யா தத்தா முக்கிய சாட்சியாக இருந்து இறுதியில் சொல்லும் காரணம் படத்தின் முடிவு, அவரது மைத்துனர் மணிமாறனாக சரண், சத்தியமூர்த்தியின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக பாண்டியராஜன், பாசமுள்ள தாய் மாமனாக கருணாஸ், வில்லனாக சூப்பர் சுப்பராயன் அவருடன் முத்து பாண்டி மற்றும் பலர் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் தாங்கி பிடித்து அழுத்தத்தை கொடுத்து சிறப்பாக செய்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையுடன் பின்னணி இசை படத்தின் பதட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார், எடிட்டர் வசந்தகுமார், தினேஷ் சுப்பராயன் கிராம மக்களின் கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், பழி வாங்குவதையும் அதிரடியாக கொடுத்து அசத்துகின்றனர்.

சாதித்ததை வெற்றியாக கொண்டாக நினைக்கும் இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் எப்படி அவனின் வாழ்க்கையையும், மற்றவர்களையும் துன்பத்தில் ஆழத்;தி, சிக்கலில் சிக்க வைத்து சின்னாபின்னமாக்கியது, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தவிப்பு, அதற்காக கொலைவெறியுடன் துரத்தும் கும்பல், எதிரிகள் யார்? ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு விடையை யூகிக்க முடியாத பலவித திருப்பங்கள் நிறைந்த காட்சிகளாக கடைசி வரை இழுத்துச் சென்று எதிர்பாராத பதிலாக கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் வாலி மோகன் தாஸ்.

மொத்தத்தில் எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி ஜெகதீஷ் தயாரித்திருக்கும் மெட்ராஸ்காரன் செய்யாத குற்றத்திலிருந்து மீள துடிக்கும் வெள்ளேந்தி மனதுக்காரன்.