மிஸ் யூ சினிமா விமர்சனம் : ‘மிஸ் யூ’ கலர்ஃபூல் காதல் கலந்த ஜாலியான காமெடி கலாட்டா | ரேட்டிங்: 3/5

0
26

மிஸ் யூ சினிமா விமர்சனம் : ‘மிஸ் யூ’ கலர்ஃபூல் காதல் கலந்த ஜாலியான காமெடி கலாட்டா | ரேட்டிங்: 3/5

7 மைல்ஸ் பர் செகண்ட் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிட மிஸ் யூ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என்.ராஜசேகர்.

இதில் சித்தார்த் – வாசுதேவன், ஆஷிகா ரங்கநாத் – சுப்புலட்சுமி, கருணாகரன் – பாபி, பாலசரவணன் – அரவிந்த், “லொள்ளுசபா” மாறன் – சால்ஸ், சஸ்திகா – சிந்து, பொன்வண்ணன் – ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் – ராஜேந்திரன், சரத் லோஹிதஸ்வா – சிங்கராயர், ராம – ஜோதி, அனுபமா – வாசுதேவன் அம்மா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கேஜி வெங்கடேஷ், படத்தொகுப்பு- தினேஷ் பொன்ராஜ், நடன அமைப்பு – தினேஷ், வசனங்கள் – அசோக் .ஆர், மக்கள் தொடர்பு – ஜான்சன்

வாசு (சித்தார்த்), ஒரு ஆர்வமுள்ள திரைப்பட இயக்குனர். சட்டத்தை மீறுபவர்களை எதிர்க்கும் அதே வேளையில் தனது கனவை அடைவதில் போராடுகிறார். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால் அமைச்சர் சிங்கராயனின் பகையை எதிர்கொள்கிறார். வாசு மீது உள்ள கோபத்தால் அமைச்சர் சிங்கராயன் விபத்து ஒன்றை ஏற்படுத்துகிறார். அதில் படுகாயம் அடையும் வாசு தனது நினைவை இழக்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து வாசு ரயில் நிலையத்தில் பாபியை (கருணாகரன்) சந்திக்கும் போது அவரது வாழ்க்கைளில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அவருடைய நட்பு பெங்க@ரில் உள்ள பாபியின் காபி ஷாப்பில் இணைகிறது, அங்கு வாசு சுப்பலட்சுமியை (ஆஷிகா ரங்கநாதன்) சந்திக்கும் போது முதல் பார்வையில் காதல் வசப்படுகிறார்.தன் காதலை சுப்பலட்சுமியிடம் சொல்ல அவள் அவனது காதலை நிராகரிக்கிறாள். மனம் தளராத அவன் அவளை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் பெற்றோரிடம் சுப்புவின் புகைப்படத்தை காட்டி சுப்புவுடன் திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்துகிறான். சுப்புவின் புகைப்படத்தை காணும் குடும்பத்தினரும், அவனது நண்பர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். குழப்பத்தில் இருக்கும் வாசுவிடம். அவனது பெற்றோர் மற்றும் நண்பர்கள் (பாலசரவணன் மற்றும் மாறன்) ஒரு உண்மையை கூறுகிறார்கள். வாசு தனது கடந்த காலத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பற்றி தெரிந்து கொள்கிறான். அந்த சம்பவம் என்ன? அவருக்கு சுப்பலட்சுமிக்கு உள்ள தொடர்பு என்ன? அடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

வாசுதேவனாக சித்தார்த் படத்தில் தன்னுடைய சார்மிங், டைமிங் சென்சால் ஒரு வித புத்துணர்;ச்சியோடு களத்தில் இறங்கி படம் முழுவதும் தன்னுடைய இருவித இருப்பை வேறுபடுத்தி காட்டி கொள்வதிலும் நகைச்சுவையிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வெலா காபியில் தொடங்கும் முதல் காட்சியிலிருந்து அந்த வெலா காபியாலேயே தன் நினைவை பெறும் இடத்தில் சிறப்பாக செய்துள்ளார்.

ஆஷிகா ரங்கநாத் இரண்டு மாறுபட்ட நிகழ்வுகளில் வித்தியாசத்தை காட்டி அவரது கதாபாத்திரத்திற்கு ஆழத்தை கொண்டு வருகிறார். சித்தார்த் மற்றும் ஆஷிகா இருவரும் ஒன்றாக காட்டும் போது அழகான தம்பதிகளாக தெரிகிறார்கள்.

கருணாகரன், பாலசரவணன், ‘ளொள்ளுசபா” மாறன், சஸ்திகா, பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், சரத் லோஹிதஸ்வா, ராம, அனுபமா உட்பட அனைத்து துணை நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக நடித்து கதைக்கு இலகுவான தருணங்களைச் சேர்த்துள்ளனர்.

கே.ஜி.வெங்கடேஷன் ஒளிப்பதிவு  படத்தில் சென்னை, பெங்க@ரு காட்சிகளில் ரிச்சான லுக்கை கொடுத்து அசத்தி உள்ளார்.

ஜிப்ரானின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

பிரிந்த தம்பதியினர் ஒரு விபத்திற்கு பின் சந்திக்க, நினைவை மறந்த கணவன் மீண்டும் தன் மனைவியுடன் சேரும் காதல், காமெடி, குடும்ப சென்டிமெண்ட், நட்பு கலந்து அருமையான பொழுதுபோக்கு படமாக ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் என்.ராஜசேகர்.

மொத்தத்தில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள ‘மிஸ் யூ’ கலர்ஃபூல் காதல் கலந்த ஜாலியான காமெடி கலாட்டா.