மிஷன் : இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங் பார்ட் ஒன் (MISSION : IMPOSSIBLE-DEAD RECKONING PART ONE)

0
176

மிஷன் : இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங் பார்ட் ஒன் (MISSION : IMPOSSIBLE-DEAD RECKONING PART ONE)

இப்படம், ‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வரவுள்ளது.

‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ படத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படுகிறது. எதிர்காலத்தின் கட்டுப்பாடும், உலகின் தலைவிதியும் ஆபத்தில் இருக்க, ஈத்தனின் இருளடர்ந்த கடந்த காலம் நெறுக்க, உலகம் முழுவதும் பயணிக்கும் ஆபத்தான சாகம் தொடங்குகிறது. ஒரு மர்மமான, சர்வ வல்லமையுள்ள எதிரியை எதிர்கொள்ளும் ஈதன், தனது பணியை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று கருத வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறார். அவர் மிகவும் அக்கறை கொண்டவர்களின் வாழ்க்கையை விடவும் கூட இந்தப் பணி அதி முக்கியத்துவமானதாக மாறுகிறது ஈதனுக்கு.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 6, 2020 அன்று தொடங்கியது. அந்தப் படப்பிடிப்பில், கடற்பரப்பை விட 1200 நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான ஒரு செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை அமைத்து, மாற்றியமைக்கப்பட்ட ஹோண்டா CRF 250  பைக்கை ஓட்டுவதைக் காண முடிந்தது. பின் 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, தரையில் இருந்து 500 அடி தூரத்தில் பாராசூட்டைத் திறந்து தரையிறங்கினார். இதற்காகப் படத்தின் முன் தயாரிப்பின் பொழுது, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார். கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், 500 ஸ்கை டைவ் (skydive)-களையும், 13000 motocross jumps-களையும் பயிற்சிக்காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். இப்படியான அர்ப்பணிப்பால், டாம் க்ரூஸ் மீண்டுமொரு முறை வெள்ளித் திரையில் ஜொலிக்கத் தயாராகிவிட்டார். இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘மிஷன் இம்பாசிபிள் – டெட் ரெகனிங்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலையும் புயல் போல் கவரவுள்ளார்.

‘மிஷன்’ படம் என் வாழ்வின் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறியதற்கு, அந்தப் படத்திற்காக நானெடுத்த பயிற்சியே முக்கியமான காரணமென நினைக்கிறேன். இத்தொடரில், டாம் க்ரூஸோடு எனக்கு இது மூன்றாவது படம்” என்றார் MI6 அதிகாரியாக நடித்திருக்கும் சக நடிகை ரெபேக்கா பெர்குசன். “இந்தப் படம், அதிரடி சாகசங்களுக்காக அதிகம் பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மோட்டர்பைக் ஜம்ப்பிங் ஸ்டன்ட் சிலாகிக்கப்படுகிறது. பல வகையிலும், படத்தில் பணி புரிந்த இத்தகைய பொக்கிஷமான தருணங்கள் வாழ்நாளுக்குரியதாக மாறிவிட்டன. டாமும் நானும் பதினாறு வருடங்களாக இணைந்து பணியாற்றுகிறோம். கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் செய்துவிட்டதாகக் கருதுகிறேன்’ என்றார் இயக்குநர் க்றிஸ்டோபர் மெக்குவாரி. “மனிதனை விட தொழில்நுட்பமே மேன்மையானது என மனதார நம்பும் உளவாளியாக, நான் அவரைப் (டாம் க்ரூஸ்) பார்க்கிறேன்” என்றார் வில்லனாக நடித்துள்ள Esai Morales.

CREDITS

நடிகர்கள் – Hayley Atwell, Ving Rhames, Simon Pegg Vanessa Kirby, Henry Czerny

ஒளிப்பதிவு – Fraser Taggart

இசை – Lorne Balfe

படத்தொகுப்பு – Eddie Hamilton

இப்படத்தை, ஜூலை 12 அன்று தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது வையாகாம் 18 ஸ்டுடியோஸ்.