மார்கன் சினிமா விமர்சனம் :

0
676

மார்கன் சினிமா விமர்சனம் : மார்கன் திகிலூட்டும் சிந்தனையை தூண்டும் சூட்சமங்கள் நிறைந்த சித்து விளையாட்டு | ரேட்டிங்: 3.5/5

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் மார்கன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லியோ ஜான் பால்.

இதில் விஜய் ஆண்டனி – துருவ் கோரக், அஜய் தீஷன் – தமிழறிவு, மகாநதி சங்கர் – காளி, சமுத்திரக்கனி – மூத்த ஏடிஜிபி ராஜா, தமிழ்நாடு சென்னை, ராமச்சந்திரன் – முருகவேல், பிரிகிடா – இன்ஸ்பெக்டர் ஸ்ருதி, தீப்ஷிகா – ரம்யா, அர்ச்சனா – அகிலா, கனிமொழி – வெண்ணிலா, வினோத் சாகர் – உதவி ஆணையர், நடராஜ் – மூத்த நரம்பியல் நிபுணர், அருண் ராகவ் – ஐவு ர்சு, கதிர் – தரகர் முகவர், ராஜாராம் – ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் கார்த்திக், அபிஷேக் – இயக்குனர் ராஜேஷ், நிஹாரிகா – ரம்யா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை: விஜய் ஆண்டனி, ந​pர்வாகி: தயாரிப்பாளர் நவீன் குமார், ஒளிப்பதிவாளர்: எஸ்.யுவா, படத்தொகுப்பாளர்;: லியோ ஜான் பால், கலை இயக்குனர்: ஏ.ராஜா, திரைக்கதை: விஷ்ணு, லியோ ஜான் பால், நடனம்: பிரபு, இணை இயக்குனர்: பிரபு குப்புசாமி, இணை இயக்குநர்கள்: பிரேம்குமார்.கே.ஏ., ஜெய்சன், ஸ்வேதா செல்வராஜ், சந்துரு, பிரவீன் குமார்.டி., உதவி இயக்குனர்கள்: அருண் பிரசாத்.ஆர், அஸ்விகா குமரவேல், தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு, வண்ணம்: கௌஷிக் கே.எஸ்,ஆடை ஒப்பனையாளர்: ஷிமோனா ஸ்டாலின், போஸ்ட் புரொடக்ஷன்: திவாகர் டென்னிஸ், ஹரிஷ்.ஒய், ஒலி பொறியாளர்: எஸ் சந்திரசேகர், விஎஃப்எக்ஸ் கலைஞர்கள்: ஆதித் மாறன், காட்வின், சனத், சதீஷ், அருண், சிவா,டிஐ: ப்ரோமோவொர்க்ஸ்,மாஸ்டரிங்: ஆதித்யா,கதை குழு: லியோ ஜான் பால, விஷ்ணு, கே.பழனி, பி.பரத் குமார், விளம்பரங்கள்: பீட்ரூட்,மக்கள் தொடர்பு: ரேகா

சென்னையில் விஷ ஊசி போட்டு உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறிய நிலையில் ரம்யா என்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ஒரு காலனியில் உள்ள குப்பை மேட்டில் கண்டெடுக்கப்படுகிறார். இன்ஸ்பெக்டர் ஸ்ருதி (பிரகிடா) விசாரணையைத் தொடங்க  சீனியர் அதிகாரியான முத்துவேல் ராஜன் (சமுத்திரக்கனி) இந்த வழக்கைக் கையாள துருவ் (விஜய் ஆண்டனி) மும்பையிலிருந்து கூடுதல் டிஜிபியாக சென்னைக்கு வரவைக்கிறார். இதற்கு காரணம், இதே போன்று ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு, துரவ்வின் மகள் பிரியாவும்  கொலை செய்யப்பட இதனால் பாதிக்கப்பட்டு கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் துரவ்வும் பாதிக்கப்பட்டு, அவரது உடலின் இடது பக்கத்தில் ஒரு பகுதி கருப்பாக மாறி விட,அதற்கான சிகிச்சை பெற்று தேறி வரும் நிலையில் தனிப்பட்ட சவாலாக நினைத்து இப்பொழுது இந்த வழக்கை தீவிரமாக கவனம் செலுத்தி கொலையாளியை பிடிக்க நினைக்கிறார் துரவ். தனது மகளைப் போல வேறு யாரும் பலியாகக் கூடாது என்று எண்ணுகிறார் துரவ். இந்த கொலை தொடர்பான சிறிய தடயங்களின் மூலம் தமிழறிவு (அஜய் தீஷன்) என்ற ஒரு இளைஞரை நெருங்குகிறார். தமிழறிவு மீது சந்தேகம் இருந்தாலும், விசித்திரமான அரிதான ‘மெமரி பவர்’ நடந்து கொள்ளும் விதம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வெளிப்பாட்டுடன் இருப்பதை துரவ் அறிந்து கொள்கிறார். தமிழறிவு மூலம் இளம் பெண்களின் கொலைகள் தொடர்பான சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இந்த தகவலில் அடிப்படையில் கொலையாளியை நெருங்கும் நேரத்தில் ஆச்சர்யமான விஷயங்களை கண்டுபிடிக்கிறார் துருவ். அது என்ன? இந்த கொடூரமான கொலைகள் எதற்காக? துருவ் கொலையாளியை பிடித்தாரா? வித்தியாசமான இந்த வழக்கு முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விஜய் ஆண்டனி ஒரு விசாரணை அதிகாரியாக, மகளின் இழப்பால் பாதிக்கப்பட்ட தந்தையாக, அவரது தனித்துவமான தோற்றத்தில் முதல் பாதியில் சஸ்பென்ஸ{டன் படைக்கப்பட்ட அம்சம் நன்றாக வேலை செய்கிறது. சோகத்தையும், விசாரிக்க வேகம் காட்டும் விதமும் படத்திற்கு ப்ளஸ்.

அஜய் தீஷன் நடித்திருக்கும் தமிழறிவு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் பார்வையாளர்களுடன் ஒரு முரண்பாடான இணைப்பை ஏற்படுத்தி விட்டு மேலும் அவரது பாத்திரத்தின் மாறுபாடுகள் படத்தின் மிகப்பெரிய பலமாக முக்கிய தருணங்களில் செயல்படுகின்றன.

வெண்ணிலா கதாபாத்திரத்தில் கனிமொழி எதிர்பாராத சர்ப்ரைஸ் தருகிறார்.

மூத்த அதிகாரி முத்துவேல் ராஜனாக சமுத்திரக்கனி, இன்ஸ்பெக்டர் ஸ்ருதியாக பிரிகிடா, தலைமை காவலர் காளியாக மகாநதி சங்கர்,அஜய் திஷானின் தங்கையாக அர்ச்சனா, ராமச்சந்திரன் (முருகவேல்), தீப்ஷிகா (ரம்யா), அர்ச்சனா (அகிலா), வினோத் சாகர் (உதவி ஆணையர்), நடராஜ் (மூத்த நரம்பியல் நிபுணர்), அருண் ராகவ் – (ஐவு ர்சு), கதிர் (தரகர் முகவர்), ராஜாராம் (ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் கார்த்திக்), அபிஷேக் (இயக்குனர் ராஜேஷ்), நிஹாரிகா (ரம்யா) மற்றும் பலர் படத்தில் சிறு பங்களிப்பு என்றாலும் முக்கிய காட்சிகளுக்கு தங்களின் நடிப்பால் முத்திரை பதித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் இசை , எஸ். யுவராஜின் ஒளிப்பதிவு காட்சிகளின் மாற்றத்திற்கேற்றவாறு தடதடக்கும் விதத்தில் சிறப்பாக கொடுத்துள்ளனர்.

குற்ற பின்னணி கொண்ட மர்மமான த்ரில்லரில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களும் படத்தில் ஒரு தனித்துவமான முறையில் வழங்கப்பட்டு குடும்ப சென்டிமெண்ட்  உணர்ச்சிகள் மேலிட இடைவெளி கொடுத்து சற்றும் எதிர்பாராத திடீர் க்ளைமாக்ஸில் திருப்பங்களை தந்து  கற்பனை கலந்த சித்தர்கள் சூப்பர்பவர், மெமரி ரிகவரி, பாரா உளவியல் சம்பந்தப்பட்ட  திரைக்கதையை திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.

மொத்தத்தில், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள மார்கன் திகிலூட்டும் சிந்தனையை தூண்டும் சூட்சமங்கள் நிறைந்த சித்து விளையாட்டு.