மாயன் சினிமா விமர்சனம் : மாயன் புரியாத மர்மத்தின் மாய வித்தை | ரேட்டிங்: 2/5

0
196

மாயன் சினிமா விமர்சனம் : மாயன் புரியாத மர்மத்தின் மாய வித்தை | ரேட்டிங்: 2/5

ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் ஜெ.ராஜேஷ் கண்ணா மற்றும் ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரித்திருக்கும் மாயன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெ.ராஜேஷ் கண்ணா.

இதில் வினோத் மோகன் (ஆதி), பிந்து மாதவி (கோபெரும்தேவி), ஜான் விஜய் (சக்ரவர்த்தி), ஆடுகளம் நரேன் (ராமலிங்கம்), சாய் தீனா (வீர சூரன்), ரஞ்சனா நாச்சியார் (சின்னா), கஞ்சா கருப்பு (தக்லஸ்), ராஜா சிம்மன் (முருக சூரன்), மரியா (ஆதிகாளி), பியா பாஜ்பாயி (கௌரவ தோற்றம்) நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவாளர்: கே.அருண் பிரசாந்த், இசையமைப்பாளர் : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், படத்தொகுப்பு: எம்.ஆர்.ரெஜிஸ், கலை இயக்குனர்: எ.வனராஜ், வி.எஃப்.எக்ஸ் : எஸ்.ரமேஷ் ஆச்சார்யா, உடை வடிவமைப்பு: நிவேதா ஜோசப், ஒலி வடிவமைப்பு: யுகேஐ.ஐயப்பன், சண்டைப்பயிற்சி : தினேஷ் காசி, நடனம் : நந்தா கோபால், கலரிஸ்ட் : எஸ்.சிவசந்தோஷ், ஸ்டில்ஸ்: ஹரி, மக்கள் தொடர்பு – வெங்கடேஷ்

தென் அமெரிக்காவில் உள்ள பண்டைய மாயன் நாகரிகம் உண்மையில் குமரிக்கண்டம் அல்லது லெமூரியாவில் வேரூன்றியவர்கள் பண்டைய தமிழர்கள் என்ற நம்பிக்கையும் அதன் கோணத்திலும் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஆதி (வினோத் மோகன்) தன் முதலாளியின் கெடுபிடியும், அவமதிப்பையும் தாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்.  அவருக்கு எப்பொழுதும் ஒரு கனவு வருவதும் திடுக்கிட்டு எழுவதுமாக இருக்க, ஒரு நாள் மின்னஞ்சல் வர அதில் இன்னும் 13 நாள்களில் உலகம் அழியப் போகிறது, நீ வாழ நினைத்தவற்றை வாழு என்பதை  முதலில் நம்பாத ஆதி, தன்னைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்கள், நிகழ்வுகளால் நம்ப ஆரம்பிக்கிறார். எனவே தான் எப்போதும் விரும்பிய அனைத்தையும் செய்யத் தொடங்குகிறார். அவர் தன​து பிடிக்காத வேலையை விட்டு விட்டு,  முதலாளியின் (நரேன்) மகள் கோப்பெரும்தேவியை (பிந்து மாதவி) உடனே திருமணம் செய்து கொள்கிறார். வங்கியில் கடன் வாங்கி தனது தாயாருக்கு (ஸ்ரீPரஞ்சினி) ஒரு வீட்டை வாங்கி குடும்பத்துடன் குடியேறுகிறார். ஒரு நாள், அவர் ஒரு போலீஸ்காரரை (ஜான் விஜய்) சந்திக்கிறார், நகரத்தில் உள்ள சில ரௌடிகளை அழிக்கும் பணியை அவருக்கு வழங்குகிறார். அவர் அழிக்க வேண்டிய குண்டர்களை சந்திக்கும்போது என்ன நடக்கிறது? ஆதியின் நிகழ்காலம் கடந்த காலத்திற்கும் மாயன்களுக்கும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? உலகம் அழிந்ததா?ஆதிக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆதியாக புதுமுகம் வினோத் மோகன் அந்த பாத்திரத்தை உணர்ந்து கம்பீர உடல் மொழியுடன் உறுதியுடனும் நேர்மையுடனும் சிறப்பாக செய்திருக்கிறார்.

காதலியாக பிந்து மாதவி, முதலாளியாக நரேன் தனது வழக்கமான கோபமான சுயரூபத்திலும், பாசமான அம்மாவாக ஸ்ரீPரஞ்சினி, ஜான் விஜய், வில்லனாக சாய் தீனா (வீர சூரன்), ரஞ்சனா நாச்சியார் (சின்னா), கஞ்சா கருப்பு (தக்லஸ்), ராஜா சிம்மன் (முருக சூரன்), மரியா (ஆதிகாளி), பியா பாஜ்பாயி ஆகியோர் சிறிது நேரமே வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர்: கே.அருண் பிரசாந்த், இசையமைப்பாளர் : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், படத்தொகுப்பு: எம்.ஆர்.ரெஜிஸ், கலை இயக்குன ர்: எ.வனராஜ், வி.எஃப்.எக்ஸ் : எஸ்.ரமேஷ் ஆச்சார்யா ஆகியோர் படத்தில் பெரிய பங்களிப்புடன் உழைப்பை கொடுத்திருப்பதை சிறப்பாக கையாண்டிருக்கலாம் இயக்குனர்.

கதை, வரலாறு மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர், அவை அனைத்தையும் இணைக்கும் கற்பனையின் கூறுகளுடன், மாயன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு கார்ப்பரேட் நிர்வாகியின் வாழ்க்கைப் பற்றியதாக இயக்கியிருக்கிறார் ராஜேஷ் கண்ணா.பல யுகம் யுகமாக நன்மைக்கும் தீமைக்குமாக நடக்கும் போரில் விதி அவனை ஆதிசக்தியாக எதிரிகளால் அழிக்க முடியாதவராக காட்டப்படுவதும், மறுஜென்மம் எடுக்கும் எதிரிகள் தோல்வி காண்பது தொடர்வதாக காட்டப்படும் திரைக்கதை, நான்-லீனியர் என்பதால் குழப்பமாகவும், ஒரு புராண கற்பனையின் நாவல் கருத்து மற்றும் விளக்கக்காட்சி வழக்கத்திலிருந்து வேறுபடாக காட்டப்பட்டாலும் இன்னும் ஈர்க்கக்கூடிய த்ரில்லரை உருவாக்கும் மேக்கிங் சிறப்பாக கையாளப்பட்டிருக்கலாம். அனிமேஷன் கிராபிக்ஸ் மற்றும் தேர்ந்த நடிகர்களைப் பயன்படுத்தி முன்வைக்க முயற்சிக்கும் இயக்குனர் ராஜேஷ் கண்ணாவின் பல சுவாரஸ்யமான கருத்துகள் இந்தப் படத்தில் உள்ளன. இது சுவாரஸ்யமாக இருந்தாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் ஜெ.ராஜேஷ் கண்ணா மற்றும் ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரித்திருக்கும் மாயன் புரியாத மர்மத்தின் மாய வித்தை.