மஞ்சக்குருவி விமர்சனம் : மஞ்சக்குருவி பாசத்தையும்,காதலையும் ஒருங்கிணைக்க திணரும் கருவி| ரேட்டிங்: 2.5/5

0
308

மஞ்சக்குருவி விமர்சனம் : மஞ்சக்குருவி பாசத்தையும்,காதலையும் ஒருங்கிணைக்க திணரும் கருவி| ரேட்டிங்: 2.5/5

வி. ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் படம் மஞ்சக்குருவி.
இதில் கிஷோர், கதிராக விஷ்வா, நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன் கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார்.
ராஜா முகமது படத்தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அரங்கன்சின்னத்தம்பி. பிஆர்ஒ கிளாமர் சத்யா

கும்பகோணத்தில் மிகப்பெரிய ரவுடியாக இருப்பவன் சங்கிலி வாத்தியார் (மாஸ்டர் ராஜநாயகம்). இவரிடம் தொழில் கற்றுக் கொண்ட (கிஷோர்) ரவுடி குணாவாக செல்வாக்குடன் அவரை விட பெரிய ரவுடியாக மிரட்டலுடன் வலம் வருகிறான். இவர்களுக்குள் இருக்கும் பகையால் சங்கிலி வாத்தியார் மேல் ஒரு கொலை பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான் குணா.  ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் குணாவிற்க்கு நந்தினி (நீரஜா) என்ற ஒரு அழகான தங்கை இருக்க அவள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறான்.அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. தங்கைக்கு அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை.  தங்கை அண்ணன் குணாவிடம் ரவுடியிசத்தை விட்டு விட சொல்கிறார். ஆனால் குணாவோ தங்கையை காதலிக்கிறான் என்று தவறாக எண்ணி நந்தினியின் பள்ளி நண்பனை கடத்தி கொலை செய்வதால் அண்ணன் மீது தங்கை வெறுப்படைகிறாள்.  அண்ணன் எவ்வளவோ தடுத்தும் அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். தனியே வசித்து வரும் நந்தினியை கதிர் காதலிக்க தொடங்குகிறான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வர தன்னுடைய அண்ணனின் கொலைவெறியை பற்றியும் யாரையும் காதலிக்கமாட்டேன் என்றும் நந்தினி அண்ணனின் ரவுடியிசத்தை பற்றியும் கதிரிடம் கூறுகிறாள். காதலிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை நந்தினியை அவள் அண்ணன் குணாவிடம் சேர்த்து வைக்க கதிர் ஆசைபடுகிறான். அதனால் குணாவிடம் கொஞ்ச கொஞ்சமாக மனித நேயத்தை புரிய வைத்து நெருங்கி பழகி மாற்ற வைக்க முயற்சி செய்கிறான் கதிர். முடிவில் குணா தங்கைக்காக ரவுடியிசத்தை கைவிட்டு போலிசில் சரணடைய வருகிறான். இந்த சமயத்தில் குணாவின் பரம எதிரி சங்கிலி வாத்தியார் கொலை செய்ய முற்படுகிறார். அப்பொழுது யாரும் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது? அண்ணன் தங்கை ஒன்று சேர்ந்தார்களா? கதிர் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே மீதி கதை.

அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் தனது இயல்பான நடிப்பால் ரவுடி , பாசமான அண்ணன் என இரண்டு பாத்திரத்திலும் மிக பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அறிமுக நாயகன், காதலன் கதிராக விஷ்வா,  அறிமுக நாயகி  நீரஜா அழகும், கண்களாலே உணர்வுகளை புரிய வைக்கிறார்.  பஸ் கண்டக்டராக கஞ்சா கருப்பு, விஷ்வாவின் நண்பனாக பசங்க பாண்டி, நீரஜாவின்சித்தப்பாவாக  பசங்க சிவகுமார் உள்ளிட்ட பலரும் பொருத்தமான தேர்வு. குறிப்பாக தாதாவாக வரும் மாஸ்டர் ராஜநாயகம் தன் நடையாலும், மிரட்டாலும்  வில்லத்தனமான நடிப்பால் உணர்த்தியுள்ளார். மற்றும் சுப்புராஜ் அவரவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.

கதைக்கேற்ற சௌந்தர்யன் இசை, பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு துணை நிற்கிறது.

ஆர்.வேல் ஒளிப்பதிவு, ராஜா முகமது எடிட்டிங், மிரட்டல் செல்வாவின் சண்டை காட்சிகள், கே.எம்.நந்தகுமார் கலை ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதையின் ஒட்டத்திற்கு தங்களால் முடிந்தவரை முயற்சித்துள்ளனர்.

அண்ணன் தங்கை பாசக் கதையில் ரவுடிகளின் பகை, பழி வாங்குதல், கொலை, நட்பு, காதல், ஆக்ஷன் என்று    கலந்து கொடுத்து க்ளைமேக்சில் டிராஜிடியாக கொடுத்து யூகிக்க கூடிய கதைக்களத்துடன் கதையை இயக்கியிருக்கிறார் அரங்கன்சின்னத்தம்பி.

மொத்தத்தில் வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் மஞ்சக்குருவி பாசத்தையும்,காதலையும்  ஒருங்கிணைக்க திணரும் கருவி.