பெல் சினிமா விமர்சனம் : பெல் வித்தயாசமான கோணத்தில் செல்லும் மர்மங்கள் நிறைந்த மூலிகை பயணம் | ரேட்டிங்: 2.5/5
பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் புவன் இயக்கி இருக்கும் படம் ‘பெல்”.
குருசோம சுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- எடிட்டிங் – தியாகராஜன், ஒளிப்பதிவு – பரணி கண்ணன், இசை – ராபர்ட், மக்கள் தொடர்பு வேலு.
சித்தர்கள் உலகத்திற்கு அறியப்படாமல் பத்திரமாக மறைத்து காப்பாற்றப்படும் 6 மகா ரகசியங்கள் ஒன்று நிசம்பசூதனி என்ற மூலிகை.இதை உட்கொள்பவர்கள் இறவா வரம் பெறுவார்கள் என்பதாலும் இதனால் பல அழிவுகள் நிகழலாம் என்பதாலும் இது ரகசியமாக காக்கப்பட்டு வருவதாகவும், அதனை கண்டுபிடிக்க ஆரண்யா ஆர்கனிக் பார்ம் நடத்தி பெரும் பெரும் செல்வந்தரான குரு சோமசுந்தரம் முயற்சிகள் மேற்கொள்கிறார். இதனை கண்டுபிடித்தால் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் என்ற வைராக்கியத்துடன் பல வழிகளில் முயல்கிறார். இதனிடையே செங்கவனம் என்கிற மலை காட்டில் மர்மமான முறையில் ஒரு கும்பல் இறந்து கிடப்பதாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கிறது. அதில் இரண்டு பேர் உயிரோடு இருக்க, அவர்களை விசாரித்து உண்மை நிலையை கண்டறிய காவல்துறை முயற்சிக்கிறது அதில் பெல் மற்றும் அவரது நண்பரை போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விசாரணையில் சித்தர்களின் வழித்தோன்றல் வழியில் வந்த பெல் (ஸ்ரீPதர்) நிசம்பசூதணி என்ற மூலிகையை பற்றிய தகவலை கூறுகிறார். அதை அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த குருசோமசுந்தரம் அந்த நிசம்பசூதனி மூலிகையைக் கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை பற்றி விளக்கமாக கூறுகிறார். குருசோமசுந்தரம் நிசம்பசூதனி மூலிகையை கைப்பற்ற ஸ்ரீதரை எவ்வாறு துன்புறுத்தினார்? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? நிசம்பசூதனி மூலிகை பத்திரமாக காப்பாற்றப்பட்டதா? செங்கவனம் காட்டில் இறந்தவர்கள் யார்? அதன் பின் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பார்வை இழந்த பெல் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குநர் ஸ்ரீPதர் போலீஸ் அதிகாரிகளுக்கு நடந்த சம்பவங்களை விவரிக்கும் இடங்கள், காதலியுடன் பழகிய நாட்களை நினைவு கூறும் விதம், மூலிகையை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் இடங்களை தன் நினைவில் வைத்து தத்துரூபமான விவரிக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். சில இடங்களில் மிகையான நடிப்பு கூடுதலாக தெரிகிறது.
ஸ்ரீதரின் கற்பனை உருவத்தில் நாயகனாக வரும் மறைந்த நடிகர் நிதீஷ் வீரா நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளும் தூய்மையான மணம் படைத்த கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். கதாபாத்திரத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சிறப்பான இயல்பான நடிப்பால் மனம் கவர்கிறார்.
பணக்கார திமிர் நிறைந்த குரு சோமசுந்தரம் வழக்கம் போல் உருட்டல், மிரட்டல் அதட்டலுடன் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.
பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா ஜாக் அருணாச்சலம், கல்கி, உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மலைக்காட்டின் இயற்கை அழகை காட்சிக்கோணங்களில் திறம்பட காட்சிப்படுத்திய பரணி கண்ணன் ஒளிப்பதிவும், பின்னணி இசை மூலம் அதிர்வை எற்படுத்தி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ராபர்ட். தியாகராஜனின் எடிட்டிங் படத்திற்கு பலம்.
அரிய வகை மூலிகையை தேடிச் செல்லும் ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிபர் மற்றும் ஒரு மூலிகையை தேடி கண்டுபிடிக்கும் பார்வை இல்லாத ஒரு சித்த வைத்திய இளைஞர் அவர்களுக்குள் நடக்கும் உரிமை போராட்டத்தை இயக்குநர் வெங்கட் புவன் வித்தியாசமான கோணத்தில் ஒன்று நிஜ கதாபாத்திரம் மற்றுறொன்று கற்பனை கதாபாத்திரத்தை வைத்து திரைக்கதையமைத்து அனைவருக்கும் புரியும் வண்ணமும், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் சிறப்பையும் திறம்பட இறுதிவரை கொடுத்திருந்தாலும் கொஞ்சம் கதையில் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரித்திருக்கும் பெல் வித்தயாசமான கோணத்தில் செல்லும் மர்மங்கள் நிறைந்த மூலிகை பயணம்.