பார்ட்னர் திரைப்பட விமர்சனம் : பார்ட்னர் புதிய உருவமாற்ற ஆராய்ச்சிக்காக ஒரு முறை பார்த்து சிரித்து மகிழலாம் | ரேட்டிங்: 2.5/5

0
468

பார்ட்னர் திரைப்பட விமர்சனம் : பார்ட்னர் புதிய உருவமாற்ற ஆராய்ச்சிக்காக ஒரு முறை பார்த்து சிரித்து மகிழலாம் | ரேட்டிங்: 2.5/5

ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூர்யபிரகாஷ் தயாரித்துள்ள பார்ட்னர் படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கிறார்.

இதில் ஆதி பினிசெட்டி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ரோபோ சங்கர், முனிஸ்காந்த், ஜான் விஜய், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பாட்னர்’.

ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு யுவராஜ்.

கிராமத்தில் ஸ்ரீPதர் (ஆதி பினிசெட்டி) 25 லட்சம் கடன் வாங்கி தொடங்கிய தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட ஃபைனான்சியர் பணம் கேட்டு தகராறு செய்து கடன் தொகை ரூபாய் 25 லட்சத்தை ஒரே மாதத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது அவரது சகோதரியை தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறார். ஸ்ரீதர் தனது சகோதரியை உடனடி ஆபத்தில் இருந்து காப்பாற்ற போதுமான பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையில் தனது சொந்த ஊரிலிருந்து தன் நண்பன் கல்யாணை (யோகி பாபு) சந்திக்க சென்னைக்கு வருகிறார். கல்யாண் திருட்டு மற்றும் மோசடி ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதன் உரிமையாளர் விக்கிரவாண்டி வைகுண்டம் (முனிஸ்காந்த்). ஸ்ரீPதரின் இக்கட்டான சூழ்நிலை கருத்தில் கொண்டு பணத்தேவைக்கு அவரை அந்த மோசடி நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்துகிறார் கல்யாண். ஸ்ரீPதர் விருப்பம் இல்லையேன்றாலும் வேறு வழியில்லாமல் அவருடன் சேர்கிறார். இதனிடையே ஒரு விலங்கின் குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகளை மற்றொரு விலங்குக்கு மாற்றக்கூடிய ஒரு முறையை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானி (பாண்டியராஜன்) அதில் வெற்றி கண்டு மனிதனுக்கு அதை செலுத்தி பார்க்க அந்த பார்முலாவை ஒரு சிப்பில் ரகசியமாக வைத்துள்ளார்.இந்த கண்டுபிடிப்பை திருடி சர்வதேச சந்தையில் விற்று பெரும் லாபம் சம்பாதிக்க விஞ்ஞானியின் முன்னாள் கூட்டாளியான ஜான் விஜய் (ஜான் விஜய்) திட்டமிடுகிறார். அந்த பார்முலா சிப்பைத் திருட, ரோபோ சங்கர் (சமாதானம்), தங்கதுரை (அன்னதானம்), மற்றும் அகஸ்டின் (பிளாக்பெர்ரி) ஆகிய மூன்று பேரும் அனுப்பப்பட அந்த முயற்சி தோல்வி அடைகிறது. அதனால், ஜான் விஜய் அந்த பணியை முடிக்க கல்யாணின் நிறுவனத்தை அணுக ஸ்ரீPதர் திட்டமிட்டு விக்கிரவாண்டி வைகுண்டத்தை அந்த டிலை ஏற்க விடாமல் திரும்ப அனுப்பி விடுகிறார். அதன் பின் தனது சகோதரியின் கட்டாய திருமணத்தை நிறுத்த பணத்தேவையில் இருக்கும் ஸ்ரீதர், ஜான் விஜய்யிடம் ரூ.50 லட்சம் பேரம் பேசி கல்யாணை தன்னுடன் இந்த முயற்சியில் சேரும்படி சம்மதிக்க வைக்கிறார். அதற்காக வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை அரசியல்வாதி ரவி மரியாவிடம், தான் வந்து கேட்டால் மட்டுமே தர வேண்டும் என யோகிபாபு கொடுத்து வைக்கிறார். அவர்கள் பார்முலாவை திருடப் போகும் விஞ்ஞானியின் ஆராய்ச்சி கூடத்தில் நடக்கும் குளறுபடியால், கல்யாணுக்கு தவறுதலாக ஆராய்ச்சி செய்ய வைத்திருக்கும் உருவமாற்ற ஊசி ஒன்று குத்தி விடுகிறது. இருவரும் அங்கிருந்து தப்பி வர மறுநாள், ஆணாக இருந்த கல்யாண், கல்யாணியாக (ஹன்சிகா) ஆகிவிடுகிறார். அதன் பின்னர் கல்யாண் பெண்ணாக மாறியதால் ரவி மரியாவிடம் கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் ஸ்ரீதர் தவிக்கிறார். இறுதியில் கல்யாணை மீண்டும் ஆணாக மாற்றி ஸ்ரீதர் பணத்தை மீட்டாரா? தன் தங்கை திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? ஏன்பதே படத்தின் மீதிக்கதை.

ஸ்ரீதராக ஆதி பினிசெட்டி, இடைவேளை வரை கல்யாணாக வரும் யோகி பாபு, இடைவேளைக்கு பிறகு கல்யாணியாக வரும் ஹன்சிகா, ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், வில்லனாக வரும் ஜான் விஜய், விஞ்ஞானியாக வரும் ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக வரும் பல்லக் லல்வானி, யோகி பாபுவின் காதலியாக வரும் ‘மைனா’ நந்தினி, விக்கிரவாண்டி வைகுண்டமாக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்களும், ஷபீர் அகமது ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.எடிட்டர் கச்சிதமாக இரண்டு மணி நேரத்தில் கதைக்களத்தை முடித்து கொடுத்துள்ளார்.

பணத்தை உடனடியாக சம்பாதித்து தன் குடும்பத்தை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற நினைக்கும் இளைஞனின் போராட்டத்தை அறிவியல் ஆராய்ச்சி, விஞ்ஞான முயற்சி, கடத்தல், உருமாற்றம்,நட்பு, காமெடி கலந்து லாஜிக் இல்லா மேஜிக் செய்ய முயற்சி செய்துள்ளார் இயக்குனர் மனோஜ் தாமோதரன்.

மொத்தத்தில் ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூர்யபிரகாஷ் தயாரித்துள்ள பார்ட்னர் புதிய உருவமாற்ற ஆராய்ச்சிக்காக ஒரு முறை பார்த்து சிரித்து மகிழலாம்.