பயாஸ்கோப் சினிமா விமர்சனம் : பயாஸ்கோப் கலகலப்பு கலந்த தனி மனித வைராக்கியத்தின் பின்னணியில் வலி மிகுந்த இயக்குனரின் கசப்பான போராட்டம் | ரேட்டிங்: 3/5

0
265

பயாஸ்கோப் சினிமா விமர்சனம் : பயாஸ்கோப் கலகலப்பு கலந்த தனி மனித வைராக்கியத்தின் பின்னணியில் வலி மிகுந்த இயக்குனரின் கசப்பான போராட்டம் | ரேட்டிங்: 3/5

ப்ரொடியூசர் பசார்.காம் மற்றும் 25 டாட்ஸ் கிரியேஷன் நிறுவனம் சார்பில் சந்திராசூரியன், பிரபு மற்றும் பெரியசாமி இணைந்து தயாரித்திருக்கும் பயாஸ்கோப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

இதில் சங்ககிரி ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ் எம் மாணிக்கம் ,இந்திராணி, எஸ் எம் செந்தில் குமார், சிவரத்தினம் , பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா நடித்துள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :-படத்தொகுப்பு மற்றும் இயக்கம் : சங்ககிரி ராஜ்குமார், இசை :  தாஜ்நூர்,ஒளிப்பதிவு : முரளி கணேஷ், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

பாசமிகு சித்தப்பாவின் ஆசிர்வாதத்துடன் டைரக்டராகும் ஆசையில் படம் எடுக்க ராஜ்குமார் சென்னைக்கு வந்து தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கிராமத்தில் சித்தப்பா தன் எதிர்காலத்தை கணிக்க சாமியாரிடம் செல்ல, அவர் அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று சொல்ல, அதைக் கேட்டு விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.இதையறிந்து பதறியடித்துக் கொண்டு கிராமத்திற்கு வரும் ராஜ்குமார் மனமுடைந்து மூடநம்பிக்கை மற்றும் அறியாமையால் சித்தப்பா மற்றும் கிராம மக்கள் இறப்பதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த படம் எடுக்க முடிவு செய்கிறார். படத்தை எடுக்க பணம் தேவைப்பட அதற்காக ஆடு, மாடுகளை விற்று தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வைத்து வெங்காயம் என்ற பெயரில் படத்தை ஆரம்பித்து பல இன்னல்களுக்கு சந்திக்கிறார். இதனிடையே போலி சாமியார் படத்தை பற்றி கேள்விப்பட்டு ராஜ்குமாருக்கு தொல்லை கொடுத்து கொலை முயற்சி செய்யவும் ஏற்பாடு செய்கிறார். இவற்றைn​யல்லாம் கடந்து கஷ்டப்பட்டு முடிக்கும் தருவாயில் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. அதற்காக ராஜ்குமார் என்ன செய்தார்? போலி சாமியாரிடமிருந்து தப்பித்தாரா? படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தாரா? அதை வெளியிட ஏற்படும் தடைகளை தாண்டி வெற்றிகரமாக நினைத்ததை  நடத்திக் காட்டினாரா? என்பதே மீதிக்கதை.

டைரக்டராக ராஜ்குமார் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்வது முதல் அதை முடிக்கும் வரை தனி ஒருவராக பட்ட கஷ்டங்களை தத்ரூபமாக தன் நடிப்பின் மூலம் அறிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பாவாக எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக இந்திராணி, தம்பிகளாக எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக மோகனபிரியா, ஜோதிடராக தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நமச்சிவாயம், நண்பராக ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக ரஞ்சித், ஹீரோயினாக நிலா மற்றும் பலர் கிராமத்தின் இயல்பான குணாதிசயங்களுடன் கதைக்கேற்றவாறு கச்சிதமாக புதுமுகங்கள் என்று தெரியாத வண்ணம் யதார்த்தமான நடிப்பில் மனதில் பதிந்து விடுகிறார்கள்.

இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் வரும் சத்யராஜ் மற்றும் சேரன் ஒரு சில காட்சிகள் என்றாலும் கூடுதல் கவனத்தை ஈர்க்கின்றனர்.

இசை :  தாஜ்நூர் மற்றும் ஒளிப்பதிவு : முரளி கணேஷ் கிராமத்து எழிலையும், மக்களின் வாழ்வியலையும், படம் எடுக்க படும் கஷ்டங்களையும் ரசிக்கும்படி கொடுத்துள்ளனர்.

படத்தில் கதையின் நாயகனாகவும், படத்தொகுப்பையும் கவனித்துக் கொண்டு இயக்கியுள்ளார் சங்ககிரி ராஜ்குமார். பயாஸ்கோப் என்பது இயக்குனரின் முதல் படமான வெங்காயம் (2011) உருவான கதையாகும், இது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கதை வந்து பலதரப்பினரிடையே பாராட்டுதல்கள, கைதட்டல்கள் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. திரைப்படத் தயாரிப்பானது வெற்றி தோல்விகளின் மையக்கருவாக இருப்பதை யதார்த்தமாக காட்டி ராஜ்குமாரின் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்தையும் அவரது ஆர்வத்தின் பின்னணியில் உள்ள உணர்ச்சிகரமான காரணத்தையும் அழகாக சமநிலைப்பாட்டுடன் சித்தரிக்கிறது. முதல் படம் எடுக்கும் போது ஏற்பட்ட தனிப்பட்ட சோகம், அதுவே மையக்கருவாக உருவாகி, தன் குடும்பத்தார், உறவினர்கள், கிராமத்து மக்கள் வயது வித்தியாசமின்றி நடிக்க வைத்து, கிடைக்கும் உபகரணங்களை பயன்படுத்தி, சொத்துக்களை விற்று படம் வெளியிட கடைசி வரை போராடும் ஒரு கிராமத்து இளைஞனின் அசாத்திய தைரியத்தை தன் சொந்தக்கதையை முதல் படமான வெங்காயம் படத்தின் காட்சிகளோடு இணைத்து நகைச்சுவை கலந்து தன் நேர்த்தியான இயக்கத்தால் கவனிக்க வைத்துள்ளார் சங்ககிரி ராஜ்குமார்.

மொத்தத்தில் ப்ரொடியூசர் பசார்.காம் மற்றும் 25 டாட்ஸ் கிரியேஷன் நிறுவனம் சார்பில் சந்;திராசூரியன், பிரபு மற்றும் பெரியசாமி இணைந்து தயாரித்திருக்கும் பயாஸ்கோப் கலகலப்பு கலந்த தனி மனித வைராக்கியத்தின் பின்னணியில் வலி மிகுந்த இயக்குனரின் கசப்பான போராட்டம்.