பட்டத்து அரசன் விமர்சனம் : பட்டத்து அரசன் ஊரையே எதிர்த்து வென்று கபடியில் முடிசூடா மகுடம் ஏற்கும் மாமன்னன் | ரேட்டிங்: 3.5/5

0
433

பட்டத்து அரசன் விமர்சனம் : பட்டத்து அரசன் ஊரையே எதிர்த்து வென்று கபடியில் முடிசூடா மகுடம் ஏற்கும் மாமன்னன் | ரேட்டிங்: 3.5/5

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் பட்டத்து அரசன் திரைப்படத்தை சற்குணம் இயக்கியுள்ளார்.
இதில்  ராஜ்கிரண், அதர்வா, ஆஷிகா ரங்கநாதன், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: ஜிப்ரான்,ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீPனிவாஸ்,படத்தொகுப்பு: ராஜா முகமது,கலை இயக்கம்: அந்தோணி,பாடல் வரிகள்: விவேக்-மணி அமுதவன்,ஆடை வடிவமைப்பு: நட்ராஜ், ஒப்பனை: சசி குமார், சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,நடன இயக்குநர்: பாபி ஆண்டனி ஷெரிஃப்,தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன், நிர்வாகத் தயாரிப்பாளர்: நாராயணன், தயாரிப்பு மேற்பார்வை- ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டிஒன்.

தஞ்சாவூரில் காளையார் கோவில் கிராமத்தில் ராஜ்கிரண்(பொத்தாரி) புகழ்பெற்ற கபடி வீரர். அந்த ஊரில் அவருக்கு சிலையும், கபடிக்குழுவிற்கு அவரின் பெயரையும் வைத்து கௌரவிக்கும் அளவிற்கு செல்வாக்குமிக்கவர். அதே ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர், ராஜ்கிரணின் வளர்ச்சியும், புகழும் பிடிக்காமல் இருக்க, தக்க சமயம் பார்த்து பழி வாங்க காத்திருக்கிறார்.ராஜ்கிரணுக்கு இரண்டு மனைவிகள், அதில் மறைந்த இரண்டாவது மனைவியின் மகன் ஆர்.கே.சுரேஷ் கபடி விளையாட்டில் விளையாடி உயிர் விடுகிறார். ஆர்.கே.சுரேஷின் மனைவி ராதிகா கோபமடைந்து சிறு வயது அதர்வாவை அழைத்துக் கொண்டு சொத்தில் தன் பாகத்தை பிரித்து கொண்டு தனியாக வாழ்கிறார்.அது முதல் இரு குடும்பமும் பிரிந்தே வாழ்கின்றனர். வளர்ந்த பிறகு அதர்வா தன் தப்பை உணர்ந்து ராஜ்கிரணிடம் சமரசம் பேச முயற்சித்தாலும், அவருடைய முதல் மனைவியின் மகன்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கிடையே ராஜ்கிரணின் முதல் மனைவியின் மகன் வழி பேரன் கபடி போட்டியில் சிறந்து விளங்க, தமிழ் தலைவாஸ் கபடி குழுவில் விளையாட தேர்வாகிறார். இதற்கு பயிற்சி செய்ய மூன்று லட்சம் தேவைப்பட, ஊராட்சி மன்றத் தலைவர் பேரனின் உதவியுடன் பணம் வாங்குகிறார். இதை ஆதாரமாக வைத்து  ராஜ்கிரணின் பேரன் கபடிப் போட்டியில் தோற்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சொல்லி ஊராட்சி தலைவர் பேரன் சூழ்ச்சி செய்ய, இதனால் அவமானம் தாங்காமல்  ராஜ்கிரணின் பேரன்  தற்கொலை செய்து கொள்கிறார். கிராமத்து மக்கள் இதை உண்மை என்று நம்பி ராஜ்கிரண் குடும்பத்தை ஊரை விட்டே தள்ளி வைக்கின்றனர். தன் தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்க களமிறங்குகிறார் அதர்வா. பிரிந்து போன குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர வைத்து ஊர் மக்களை எதிர்த்து குடும்பத்தினருடன் கபடி விளையாடி ஜெயித்து களங்கத்தை துடைக்க சபதமிடுகிறார் அதர்வா. அதற்காக ராஜ்கிரணையும், அவருடைய மகன்களையும் சம்மதிக்க வைத்து ஒன்றிணைத்தாரா? அனைவரும் சேர்ந்து கபடி போட்டியில் கலந்து கொண்டார்களா? இறுதியில் ஜெயித்தார்களா? களங்கத்தை துடைத்து இழந்த செல்வாக்கை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

தாதாவாக ராஜ்கிரண், பேரனாக அதர்வா இருவருமே கபடியை மையமாக வைத்துள்ள கதைக்களத்திற்குகேற்ற அர்ப்;பணிப்பையும், உழைப்பையும் கொடுத்து படத்தின் முக்கிய அச்சாணியாக இருந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
காதலியாக ஆஷிகா ரங்கநாதன் வந்து போகிறார்.சில காட்சிகளில் முத்திரை பதிக்கும் ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ் மற்றும்  ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு ஆகியோர் படத்தின் இன்றியமையாத கதாபாத்திரங்களாக தோன்றி செல்கின்றனர்.

லோகநாதன் ஸ்ரீனிவாஸ் முதல் காட்சியில் வெற்றிலை தோட்டம், பராமரித்து பறித்து விற்கும் விதம் என்று காட்சிக் கோணங்கள் குளிர்ச்சியாக கொடுத்துள்ளார். அதன் பின் கிராமத்து சண்டை, கபடி விளையாட்டு, போட்டி என்று களத்திற்கேற்ற காட்சிகளை மும்முரமாக கிராமத்து அம்சங்களுடன் கொடுத்துள்ளார்.

பாடல்களையும், பின்னணி இசையையும் ஜிப்ரான் காட்சிகளுக்கேற்றவாறு கொடுத்து கவனத்தை ஈர்க்கிறார்.

படத்தொகுப்பு: ராஜா முகமது,கலை இயக்கம்: அந்தோணி ஆகியோர் கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம் பட்டத்து அரசன் படத்தில் குடும்ப செண்டிமெண்ட், ஊர்ப்பகை, கபடி விளையாட்டு, காதல், சண்டை, போட்டி என்று அனைத்து அம்சங்களையும் கலந்து கிராமத்து எண்டர்டெயின்ட் கலந்த கபடியை மையமாக வைத்து ஊகிக்க கூடியதாக இருந்தாலும் முடிந்த வரை விறுவிறுப்பாக கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் சற்குணம். இறுதியில் கிராமத்தையே எதிர்;த்து வென்ற கபடி குடும்பம் என்ற டைட்டில் கார்டுடன் முடித்திருப்பது இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரத்துடன் முடித்துள்ளார்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் பட்டத்து அரசன் ஊரையே எதிர்த்து வென்று கபடியில் முடிசூடா மகுடம் ஏற்கும் மாமன்னன்.