நாயாடி சினிமா விமர்சனம் : நாயாடி தொடரும் முடிவில்லா திகில் அமானுஷ்ய மனித பயணம் | ரேட்டிங்: 2/5

0
223

நாயாடி சினிமா விமர்சனம் : நாயாடி தொடரும் முடிவில்லா திகில் அமானுஷ்ய மனித பயணம் | ரேட்டிங்: 2/5

அத்விக் விஷுவல் மீடியா, வாரியர் ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா, ஃபுடர்ஸ் ஆஸ்திரேலியா சார்பில் மோகன்தாஸ் புல்லாணிகாட்டில், மணி சுரேஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் இவர்களுடன் சேர்ந்து ஆதார் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில்; நாயாடி படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் ஆதார் மதிகாந்தம்.

இப்படத்தில் காதம்பரி, ஆதர்ஷ் மதிகாந்தம், யூடியூபர் ஃபேபி, அரிவிந்சுவாமி, ஷிபு சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அருண் இசையமைக்க, மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்ய, சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பு செய்துள்ளார். பிஆர்ஓ: நிகில் முருகன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பிரிவுகளாக மனித இனம் பிரிக்கப்பட்டிருக்க, அதில் அதிகாரங்கள் கொண்ட மூன்று பிரிவு மனிதர்கள் நான்காவது பிரிவு மனிதர்களான நாயாட்டிகளை கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். நாயாட்டிகள் தங்களை மூன்று பிரிவு மனிதர்களிடமிருந்து காத்துக் கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும் பில்லி சூனியம், மாந்திரீகம், கூடு விட்டு கூடு பாய்வது, மனிதர்களை பலியிடுவது என்று தங்களை கொடியவர்களாக காட்சிப்படுத்தி பயமுறுத்தி வாழ்கின்றனர். இதனை மையமாக வைத்து தான் நாயட்டி கதைக்களம் தொடங்குகிறது. ஒரு பணக்கார தம்பதி 200 வருடங்கள் பழமையான பங்களாவை வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு ஒய்வு விடுதியாக மாற்ற நினைக்கிறார்கள். ஆனால் அந்த பங்களாவிலும், சுற்றியுள்ள காட்டுப்பகுதியிலும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கருதி யாரும் அந்த விடுதியில் தங்க வராததால், அமானுஷ்ய இருப்பு உண்மையா என்று கண்டறிய வீடியோ எடுத்து பதிவிட வேண்டும் என்று கூறி பணம் கொடுத்து இளம் யூடியூபர்கள் ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி ஆகியோரின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். அந்த பங்களாவிற்கு வரும் ஐந்து பேரும் ஏதோ ஒரு தீய சக்தி பின் தொடர்வது போன்றும், காட்டில் அமானுஷ்யமாக விஷயங்களும், திகில் அனுபவங்களையும் சந்திக்கின்றனர். ஐந்து பேரில் இரண்டு பேர் இறந்து போக, மீதமிருக்கும் மூன்று பேரும் தங்களை காத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த மூன்று பேரில் யார் உயிரோடு தப்பித்தார்கள்? இவர்களை பழி வாங்க துடிக்கும் அந்த அமானுஷ்ய உருவம் எது? எதற்காக இந்த துரத்தல்? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன் என படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்களாக தங்களுடைய கதாபாத்திரங்களை உணர்ந்து தேர்ந்த நடிப்பை வழங்கி பயமுறுத்தியிருக்கிறார்கள்.

திகில் பங்களாவையும், மர்மங்கள் நிறைந்த காட்டுப்பகுதிகளையும், மந்திர தந்திர காட்சிகளையும் முடிந்த வரை பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியல் கொடுத்திருந்தாலும் அருணின் இசையும், பின்னணி இசையும் படத்தின் காட்சிகளை பேரிரைச்சலாக காட்டி அந்த அனுபவத்தை உணர முடியாமல் செய்து விட்டார். சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.

திகில் மர்மத்தை கண்டறிய வரும் இளைஞர்கள், தங்களை பலி கொடுக்கப்போகிறார்கள் என்பதையறியாமலும், அழைத்து வரும் நபர்களின் பின்னணியை திருப்பங்களுடன் கொடுத்து, 60 வருடங்களுக்கு ஒரு முறை கூடு விட்டு கூடு பாயும் நாயாட்டிகளை பற்றிய தகவலை க்ளைமேக்சில் புகுத்தி   அவர்களின் வாழ்வியல் முறைகளையும் திருப்பங்களுடன் சொல்லி உண்மையையும் கற்பனையும் கலந்த திகில் கதையை முடிந்தவரை சிறப்பாக கொடுத்துள்ளார் ஆதார் மதிகாந்தம். பட போஸ்டர்களில் நாயாடி என்று விளம்பரம் செய்திருந்தாலும் பட டைட்டிலில் நாயாட்டி என்றே குறிப்பிட்டு படம் தொடங்குகிறது.

மொத்தத்தில் அத்விக் விஷுவல் மீடியா, வாரியர் ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா, ஃபுடர்ஸ் ஆஸ்திரேலியா சார்பில் மோகன்தாஸ் புல்லாணிகாட்டில், மணி சுரேஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் இவர்களுடன் சேர்ந்து ஆதார் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் நாயாடி தொடரும் முடிவில்லா திகில் அமானுஷ்ய மனித பயணம்.