நாட் ரீச்சபிள் விமர்சனம்: நாட் ரீச்சபிள் ரசிகர்களுக்கு நன்கு ரீச்சபிளாகும் | ரேட்டிங்: 2.5/5

0
302

நாட் ரீச்சபிள் விமர்சனம்: நாட் ரீச்சபிள் ரசிகர்களுக்கு நன்கு ரீச்சபிளாகும் | ரேட்டிங்: 2.5/5

க்ராக்பிரையின் புரொடக்ஷன்ஸ் மற்றும் எம் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் நாட் ரீச்சபிள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்துரு முருகானந்தம்

மூன்று இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் விசாரணை அதிகாரிகளாக விஷ்வா மற்றும் சுபா ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இதில் இருவர் கொலை செய்யப்பட்டிருக்க, ஒருவரை தேடிச் செல்கின்றனர். இறுதியில் காணாமல் போன அந்தப் பெண்ணை கண்டுபிடித்தார்களா? மற்ற இருவரை கொலை செய்து யார்? காரணம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

விஷ்வா மற்றும் சுபா இருவரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நிறைவாகவும், அழுத்தமாகவும் செய்துள்ளனர்.

மற்றும் சாய் தன்யா, ஹரிதாஸ்ரீ, காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்திஇவக்கியா, சாய் ரோகிணி ஆகியோர் படத்தின் முக்கிய அம்சங்களாக இருந்து ஸ்கோர் செய்துள்ளனர்.

சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை முடிந்தவரை தக்க வைத்துள்ளார்.

சரண்குமார் இசை படத்திற்கு பலம்.

படத்தொகுப்பு மற்றும் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சந்துரு முருகானந்தம் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து க்ரைம் த்ரில்லரை காதல் கலந்து யாரையும் நம்பக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கொடுத்துள்ளார்.தெளிவாக திரைக்கதையமைத்து இறுதியில் யூகிக்கக்கூடிய வகையில் முடித்திருந்தாலும் பார்க்க விறுவிறுப்பாக கொடுத்திருப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.

மொத்தத்தில் க்ராக்பிரையின் புரொடக்ஷன்ஸ் மற்றும் எம் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் நாட் ரீச்சபிள் ரசிகர்களுக்கு நன்கு ரீச்சபிளாக குற்ற பின்னணியில் கொடுத்துள்ளனர்.