தேஜாவு விமர்சனம்: தேஜாவு மறைக்கப்பட்ட உண்மைகளை மறுபரிசீலனை செய்யும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் படம் |மதிப்பீடு: 3.5/5

0
429

தேஜாவு விமர்சனம்: தேஜாவு மறைக்கப்பட்ட உண்மைகளை மறுபரிசீலனை செய்யும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் படம் |மதிப்பீடு: 3.5/5

வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் தேஜாவு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
இதில் அருள்நிதி, மதுபாலா, அச்யுத்குமார், ஸ்மிருதி வெங்கட், சேதன், ராகவ் விஜய், காளி வெங்கட், மைம்கோபி,, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, ஹர்வின் ராம், மரியா வெங்கட், செந்து மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-பி.ஜி.முத்தையா, பாடல்கள்-விவேகா, படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த், கலை-வினோத் ரவீந்திரன், சண்டை-பிரதீப் தினேஷ், தயாரிப்பு நிர்வாகி-உமா மகேஷ்வர ராஜு, தயாரிப்பு மேற்பார்வை-ரவிச்சந்திரன்.கே, நிர்வாக தயாரிப்பு-ஆன்டோ.எல். பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

எழுத்தாளராக இருக்கும் அச்யுத்குமார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார். அதாவது தான் எழுதிய கதாபாத்திரங்கள் நேரில் வந்து மிரட்டுவதாக கூற காவல் நிலையத்தில் அனைவருமே கேலியாக சிரிக்கின்றனர். இருந்தாலும் புகார் அளித்துவிட்டு செல்கிறார். அன்றிரவே டிஜிபி மனோபாலாவின் மகள் காணாமல் போக, மறைமுகமாகதேடும் பணியை போலீஸ் அதிகாரி அருள்நிதியிடம் ஒப்படைக்கிறார். அதே சமயம் அச்யுத்குமார் வீட்டில் கான்ஸ்டபிள் காளி வெங்கட்டை அனுப்பி அவருடனேயே இருக்குமாறு போலீஸ் உயர் அதிகாரி சொல்கிறார். அதன்படி காளி வெங்கட் அச்யுத்குமார் எழுதும் கதையை படிக்க அது அப்படியே நிஜத்தில் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் அருள்நிதி விசாரிக்கும் இடங்களையும், சாட்சிகளையும் அச்சு பிசறாமல் முன்கூட்டியே அச்யுத்குமார் எழுத அதிர்ச்சியாகிறது போலீஸ். இதனால் குழப்பமடையும் அருள்நிதி இறுதியில் காணாமல் போன டிஜிபி மகளை கண்டுபிடித்தாரா?   எதனால் டிஜிபி மகள் கடத்தப்பட்டார்? உண்மையான காரணம் என்ன? எழுத்தாளரின் நிஜம் வெளிவருமா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே க்ளைமேக்ஸ்.

அருள்நிதி விக்ரம் குமார் என்ற அண்டர் கவர் ஆப்ரேஷன் அதிகாரியாக கம்பீர தோற்றம், மிடுக்கான நடை, உருட்டல் மிரட்டலுடன் கூடிய அதிகார தோரணை என்று படம் முழுவதும் விறைப்பான விசாரிக்கும் திறமையை நயம்பட கையாண்டு படத்தில் இறுதிக் காட்சியில் திருப்பத்தை தந்து தனித்து நின்று ஜெயித்துள்ளார்.

டிஜிபியாக மதுபாலா மகளை தேடும் பணியில் மும்முராக இறங்கி அதனால் தன்னால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே சொல்லும் அளவிற்கு நிர்பந்தப்படும் போது தயங்கி சொல்வதாகட்டும், அச்யுத்குமார் வீட்டில்  உருட்டி மிரட்டி பின்னர் பணிந்து கெஞ்சுவதாகட்டும் ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை கையாளும் உயர் போலீஸ் அதிகாரியாக திறம்பட செய்துள்ளார். கடைசியில் வேறு வழயில்லாமல் அவர் எடுக்கும் அதிர்ச்சி தருகிறது.

இவர்களுடன் இயல்பான தேர்ந்தநடிப்பில் அச்யுத்குமார், மகளாக ஸ்மிருதி வெங்கட், டிஜிபி செகரெட்டரியாக சேதன், ராகவ் விஜய், கான்ஸ்டபிளாக வந்தாலும் மனதில் பதியும் கதாபாத்திரத்தில் காளி வெங்கட், மைம்கோபி,, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, ஹர்வின் ராம், மரியா வின்சென்ட், செந்து மோகன் அளவான நடிப்பில் தத்ரூபமாக அசத்துகின்றனர்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கவனிக்க வைத்து உணர செய்துள்ளார்.

விசாரணை சூழலுடன் கூடிய கதைக்களத்தை அடித்தளமாக வைத்து காட்சிக் கோணங்களை வைத்து படத்தின் முக்கியத்துவத்தை பி.ஜி.முத்தையா அசத்தலாக கொடுத்து முத்திரை பதித்துள்னார்.

படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த், கலை-வினோத் ரவீந்திரன் ஆகிய இருவரும் படத்தின் விறுவிறுப்பை குறையாமலும், நிஜத்தில் அரங்கேறியது போல் சொல்லவும் பல வித திருப்பங்கள் நிறைந்துள்ளதால் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இணையதள பத்திரிகையாளராகவும், படங்களின் விமர்சகராகவும் இருந்து இன்று அருள்நிதியை வைத்து தேஜாவு என்ற படத்தை எழுதி புதுமுக இயக்குனராக அறிமுகமாயிருக்கும் அரவிந்த் ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டுக்கள். முதல் முயற்சியில் முற்றிலும் புதிய கோணத்தில் யோசித்து முதல் பாதியை நச்சென்று கொடுத்து, இரண்டாம் பாதியில் கதையின் போக்கை மாற்றி திருப்பங்களுடன் அசாத்திய முயற்சிகளுடன் சிறப்பாக கொடுத்துள்ளார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். ஏற்கனவே நடந்த சம்பவங்களை மறுபடியும் உருவாக்கி அதனை தொழில்நுட்ப உதவியுடன் நடைபெறச் செய்து தவறை உணர்த்தி உண்மையான குற்றவாளியை தண்டிக்கும் கதை தேஜாவு.

மொத்தத்தில் வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் தேஜாவு மறைக்கப்பட்ட உண்மைகளை மறுபரிசீலனை செய்யும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் படம்.