தி அக்காலி சினிமா விமர்சனம் : தி அக்காலி – மயானபலி கொடூர நம்பிக்கையின் உச்சம் | ரேட்டிங்: 2/5

0
223

தி அக்காலி சினிமா விமர்சனம் : தி அக்காலி – மயானபலி கொடூர நம்பிக்கையின் உச்சம் | ரேட்டிங்: 2/5

பி உகேஸ்வரன் தயாரித்திருக்கும் அக்காலி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முகமது ஆசிப் ஹமீத்.

இதில் நாசர் – டொனால்ட் மற்றும் செபாஸ்டியன் ஹாலோவே, ஜெய் குமார் – ஹம்சா ரஹ்மான், தலைவாசல் விஜய் – விஜய், ஸ்வயம் சித்தா – எஸ் சௌம்யா, வினோத் கிஷன் – வின்சென்ட், வினோதினி – தாக்ஷ்யாணி, அர்ஜை – செல்வம், சேகர் – டேவிட், யாமினி – யாஸ்மின், தரணி – அனிதா, பரத் – கௌதம், இளவரசன் – ஈசா, விக்னேஷ் ரவிச்சந்திரன் -விக்கி , சபீர் அலி – சபீர் அலி, மசிஹா சபீர் – ஜானிஸ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு- கிரி மர்பி , இசை – அனிஷ் மோகன் , கலை இயக்குனர் – தோட்டா தரணி, ஆடை வடிவமைப்பாளர் – பூர்ணிமா, எடிட்டர் – இனியவன் பாண்டியன், சண்டைக்காட்சி – தினேஷ் காசி, டப்பிங் இன்ஜினியர் – ராம் கதிர்வேலு,மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

2016ல் கல்லறையில் போதைப்பொருட்களை மறைந்து வைத்திருந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மானிடம் ஏழு வருடங்கள் கழித்து 2023ல் புதிதாக நியமிக்கப்பட்ட இன்டர்னல் அஃபையர்ஸ் போலீஸ் அதிகாரி சௌம்யா (ஸ்வயம் சித்தா) தகவல்களை பெற நியமிக்கப்படுகிறார். ஹன்ஸா ரஹ்மான் அந்த வழக்கின் தான் மேற்கொண்ட விசாரணைகளையும், சந்தித்த திடுக்கிடும் சம்பவங்களையும் சௌம்யாவிடம் விவரிப்பதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது. இந்த வழக்கை போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து விசாரணை தொடங்கினாலும் நரபலி, சாத்தானிய வழிபாடுகள், மாயமான ஜானிஸ் (மசிஹா சபீர்) என்ற இளம் பெண்ணால் பல கொலைகள் அரங்கேறியுள்ளன என்ற தகவலை ஹன்ஸா ரஹ்மான் கூறுகிறார். ஜானிஸ் யார்? அவரிடம் பழகியவர்கள் யார்? அவர்களின் நிலை என்ன ஆனாது? இதனை முதலில் கண்டுபிடித்த பத்திரிகை நிருபர் என்ன ஆனார்? நரபலி எதற்காக கொடுக்கப்பட்டது? இதற்கு காரணமான முக்கிய புள்ளி யார்? என்பதே சுற்றி வளைத்து செல்லும் கதையில் இறுதி அரை மணி நேரத்தில் கிடைக்கும் க்ளைமேக்ஸ் பதில்.

முன்னால் போலீஸ் அதிகாரியாக ஜெய்குமார் இவரின் பார்வையிலிருந்து தான் கதைக்களம் விரிவடைகிறது, இரட்டை வேடங்களில் ஒன்று கிறிஸ்துவ மத போதகராக நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக தலைவாசல் விஜய், முடிந்த விசாரணையை பற்றிய வழக்கை பற்றிய விவரங்களை சேகரிக்கும் போலீஸ் அதிகாரி ஸ்வயம் சித்தா, சிறிய வேடத்தில் வினோத் கிஷன், வினோதினி, சாத்தானின் பாதிப்பில் அர்ஜய், சேகர், பிளாக் மேஜிக் செய்யும் யாமினி, பேய் பிடியில் தாரணி, பரத், டேவிட், இளவரசன் – ஈசா, விக்னேஷ் ரவிச்சந்திரன் – விக்கி, சபீர் அலி – சபீர் அலி, சமூக வலைதளத்தில் மூலம் மாந்திரீக கொள்கைகளை பரப்பும் ஜானீஸ் என்ற மசிஹா சபீர்  என சாதாரண மற்றும் சாத்தானின் பிடியில் சிக்கிக் தவிக்கும் நபர்களும், அவர்களை ஆட்டுவிக்கும் மனிதர்களால் என்ன விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதை இயல்பு மாறாமல் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிரி மர்பி, கலை இயக்குனர் – தோட்டா தரணி, இசை – அனிஷ் மோகன் இவர்களின் கூட்டணி அமானுஷ்யம் கலந்த படத்தில் முக்கிய பங்களிப்பால் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

எடிட்டர் – இனியவன் பாண்டியன் இயக்குனரின் விவரிப்புக்கு ஏற்றவாறு காட்சிகளை படத்தொகுப்பு செய்திருப்பது புரிகிறது. அதனால் எந்த காட்சிகளை இணைப்பது என்ற குழப்பத்தில் கொடுத்துள்ளது தெளிவாக தெரிகிறது.

அக்காலி என்றால் மரணமில்லாதவன் என்று பொருள்.கடவுளை வழிபடுவதில் மனிதர்களில் வேறுபாடு இருப்பதைப் போல், தீய சக்திகளை வழிபடுவதிலும் பல மதத்தில் வேறுபாடு இருக்கிறது. அந்த வகையில் சாத்தான் வழிபாடு செய்யும் முறையில் பில்லி சூனியம், நரபலி, திகில், அமானுஷ்யம், திரில்லர் அனைத்தையும் கலந்து முதலில் சுவாரஸ்யமாக தொடங்கும் கதைக்களம், காட்சிகள் நகர நகர பலதரப்பட்ட குழுக்களின் சாத்தான் வழிபாடு, உயிர்பலி, தேடுதல், சண்டை, துரத்தல் என்று திசை மாறி பயணித்து பல கிளைக்கதைகளாக உருவெடுத்து பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை உருவாக்கி எதற்காக இத்தனை விவரிப்பு என்ற சலிப்பையும் தோய்ப்பையும் ஏற்படுத்தி முடிந்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளிவிடுகிறார் இயக்குனர்  முகமது ஆசிப் ஹமீத்.

மொத்தத்தில் பி உகேஸ்வரன்  தயாரித்திருக்கும் தி அக்காலி – மயானபலி கொடூர நம்பிக்கையின் உச்சம்.