டூடி விமர்சனம் : டூடி குழப்பமான காதலை சொல்லும் புரியாத புதிர் | ரேட்டிங்: 2/5

0
177

டூடி விமர்சனம் : டூடி குழப்பமான காதலை சொல்லும் புரியாத புதிர் | ரேட்டிங்: 2/5

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம்; தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எமுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன்.

இதில் கார்த்திக் மதுசூதன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவாரவி, ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ், சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- கே.சி.பாலசாரங்கன், ஒளிப்பதிவு – மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என், எடிட்டிங்- சாம் ஆர் டி எக்ஸ், பாடல்கள்-அரவிந்த் குமார், கலை இயக்கம் – கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர், பி ஆர் ஒ – மணவை புவன்.

பெங்க@ர் மதுபான பாரில் கிதார் இசைக்கலைஞராக பாடிக் கொண்டு தன்மனம் போன போக்கில் மது, மாது என்று சகலமும் அனுபவிக்கும் ஒரு உல்லாசப் பிரியர். திருமணம், காதல் என்பதில் சிறிதும் நம்பிக்கையில்லாதவர். தன் நண்பனின் திருமணத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதா சிவதாஸை சந்திக்கிறார். பார்த்தவுடன் ஈர்ப்பு ஏற்பட்டு உல்லாசத்திற்கு அழைக்க ஸ்ரீதா மறுத்தாலும் அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. கார்த்திக் பற்றி தெரிந்து கொண்டாலும், ஸ்ரீதா நட்புடன் பழகி பெங்க@ரை அவருடன் சுற்றி பார்க்கிறார். ஒரு வார கால சந்திப்பு ஸ்ரீதாவிற்கு கார்த்திக்கை பிடித்து போக, தன் காதலை சொல்கிறார். ஆனால் காதலும், திருமணமும் தனக்கு ஒத்து வராது என்று மறுக்கிறார் கார்த்திக். பின்னர் ஒரு சில தினங்களில் ஸ்ரீதாவை சந்தித்து தானும் காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் ஸ்ரீதா தான் ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடையும் கார்த்திக் மனமுடைந்து வெளியேறுகிறார்.சென்னைக்கு திரும்பும் ஸ்ரீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இறுதியில் ஸ்ரீதா முதல் காதல், இரண்டாம் காதல் இதில் எதை தேர்ந்தெடுத்தார்? கார்த்திக் திரும்பி வந்து ஸ்ரீதாவை சந்தித்தாரா? ஸ்ரீதா எடுத்த முடிவு என்ன? என்பதே மீதிக்கதை.

புதுமுகம் அறிமுகம் கார்த்திக் மதுசூதன் வித்தியாசமான தோற்றத்தில், வசீகரக் குரலுடன்; மது, மாது, பீடி என்று அத்தனை பழக்கங்களையும் கொண்ட கதாபாத்திரத்தில்; கவனத்தை ஈர்க்க வைக்கும், யாரும் அவ்வளவு சுலபமாக செய்ய முடியாத கதாபாத்திரத்தை முடிந்த வரை சிறப்பாக செய்துள்ளார். படத்தில் இயக்கம், கலை, கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்திருப்பது அவரின் தனிச்சிறப்பை காட்டுகிறது.

ஸ்ரீதா சிவதாஸ் குழப்பமான காதலியாக ஐந்து வருட காதலையும், ஒரு வார காதலையும் நம்பி முடிவெடுக்க முடியாமல் திணறுவதும் பின்னர் தன் தந்தையின் முடிவை ஏற்றுக் கொள்வது நம்ப முடியாததாக உள்ளது. ஆனால் வரும் காட்சிகளில் அனைத்திலும் அழகாலும், உணர்ச்சிகரமான நடிப்பாலும் முத்திரை பதித்துள்ளார்.

மற்றும் ஜீவாரவி, ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ், சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ஆகியோர் திறம்பட செய்துள்ளனர்.

கிதார் இசை சம்பந்தப்பட்ட படம் என்பதால் வெஸ்டர்ன் இசையும் அரவிந்த் குமார் பாடல்களை கலந்து கொடுத்து அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன்.

பப், பெங்க@ர், ஒட்டல்கள், கார்த்திக்கின் நூதனமான வீடு, அங்கிளின் பாராம்பர்ய வீடு, சென்னை என்று கண்களுக்கு குளிர்ச்சியான லோகேசன்களை கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர் ஒளிப்பதிவாளர்கள் மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என்.

எடிட்டிங் சாம் ஆர் டி எக்ஸ் மெதுவாக செல்லும் கதைக்களத்தை கொஞ்சம் விறுவிறுப்போடு கொடுத்திருக்கலாம்.

இந்தப் படத்தில் இன்றைய இளைய சமூதாயம் காதல் என்ற போர்வையில் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதை சித்தரித்துள்ளார். ஆதிக்கக் காதலை முதலில் விரும்பும் பெண் பின்னர் உல்லாச பிரியரின் குணாதிசயங்களை நம்பி தன் முதல் காதலை வெறுப்பதும், இரண்டாம் காதலை நம்பினாலும் தனக்கு மகிழ்ச்சி கொடுக்காது என்பதையறிந்து மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்வது போல் காட்சிப்படுத்தியிருப்பது திரைக்கதையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் படத்தின் தலைப்பு அனாதையாக திரியும் நாயை காதலி எடுத்து வந்து காதலனிடம் வளர்க்க கொடுப்பதும், அதன் பெயர் டூடி என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார். கடைசி காட்சிக்கு தான் இந்தப் பெயர் பொருந்துகிறது. காதலின் நினைவாக காதலன் டூடி என்ற நாயை எடுத்துச் செல்வது போல் உள்ளது.

மொத்தத்தில் கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் டூடி குழப்பமான காதலை சொல்லும் புரியாத புதிர்.