டீமன் திரைப்பட விமர்சனம் :டீமன் வித்தியாசமான கோணத்தில் பயமுறுத்த முயற்சித்துள்ளது | ரேட்டிங்: 2.5/5
ஆர். சோமசுந்தரம் தயாரித்திருக்கும் டீமன் படத்தை பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் டி.யுவராஜ் வெளியீட படத்தை ரமேஷ் பழனிவேல் இயக்கியிருக்கிறார்.
இதில் விக்னேஷ் சிவனாக சச்சின், கார்த்திகாவாக அபர்நதி,அஸ்வினாக கும்கி அஸ்வின்,ஜெஸ்ஸியாக சுருதி பெரியசாமி,பிரபாவாக கேபிஒய் பிரபாகரன்,மஹிமாவாக ரவீனா தாஹா,நவ்யாவாக நவ்யா சுஜி,தரணி என தரணி,அபியாக அபிஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு : ஆர்.எஸ்.ஆனந்தகுமார்,இசை: ரோனி ரபேல், எடிட்டர்: எம்.ரவிக்குமார், கலை வடிவமைப்பு: விஜய் ராஜன், ஒப்பனை: ஏ.பி.முகமது, ஆடை: கடலூர் எம்.ரமேஷ், தயாரிப்பு மேலாளர்: குமார் வீரப்பசாமி, தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா ரேகா
விக்னேஷ் சிவன் (சச்சின்) முன்னேற துடிக்கும் சினிமா இயக்குனர் ஒரு திகில் திரைப்படத்தை எடுக்க விரும்ப அதற்கு திரைப்பட தயாரிப்பாளர் கிடைக்க நிம்மதியாக வேலை செய்வதற்கு நகரத்தின் நடுவில் ஒரு புதிய பிளாட்டுக்கு மாறுகிறார். இதனிடையே விக்னேஷ் சிவன் கார்த்திகாவை (அபர்நதி) காதலித்து, இருவரின் பெற்றோரிடமும் அனுமதி பெற்று அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அந்த பிளாட்டுக்கு குடியேறிய நாள் முதல் விக்னேஷ் ஒவ்வொரு இரவும் வித்தியாசமான கனவுகளை அனுபவிக்கத் தொடங்கும் போது பிரச்சனை தொடங்குகிறது. இதனால் அவருக்கு தூக்கம் வராமல் பயத்துடன் அந்த கனவுகளின் பாதிப்பால் இறந்தவர்களிடையே தங்கிவிடலாமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்த மருத்துவரை அணுகுகிறார். மருத்துவரோ மருத்து கொடுத்து அனுப்பி விடுகிறார். ஆனால் மீண்டும் அதே போல் கனவுகளால் பாதிக்கப்பட, வீட்டு புரோக்கரிடம் மிரட்டி விசாரிக்கிறார். அப்பொழுது ஒரு பெரிய உண்மையை அறிந்து கொள்கிறார். பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பெரிய மர்மம் என்ன? ஏன் விக்னேஷிற்கு கெட்ட கனவுகள் வருகிறது? விக்னேஷ் அதன் பின்னர் என்ன செய்தார்? அதிலிருந்து மீண்டாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
விக்னேஷ் சிவனாக சச்சின், கார்த்திகாவாக அபர்நதி இருவரின் காதல் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. விக்னேஷ் பயமுறுத்தும் காட்சிகளில் அளவான நடிப்பை வழங்கியுள்ளார்.
இவர்களுடன் அஸ்வினாக கும்கி அஸ்வின், ஜெஸ்ஸியாக சுருதி பெரியசாமி, பிரபாவாக கேபிஒய் பிரபாகரன், மஹிமாவாக ரவீனா தாஹா, நவ்யாவாக நவ்யா சுஜி, தரணி என தரணி, அபியாக அபிஷேக் மற்றும் காவல் அதிகாரியாக வரும் ராஜ்குமார் தேவையான பங்களிப்பை படத்திற்கு கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ஆர்.எஸ்.ஆனந்தகுமார்,இசை: ரோனி ரபேல், எடிட்டர்: எம்.ரவிக்குமார், கலை வடிவமைப்பு: விஜய் ராஜன் ஆகியோரின் ஹாரர் த்ரில்லராக படத்திற்கான தொழில்நுட்ப அம்சங்கள் சராசரியாக உள்ளது.
இயக்குனர் ரமேஷ், விக்னேஷ் தங்கியிருக்கும் வீட்டின் ரகசியங்களை வெளிக்கொணர நிறைய நேரம் எடுத்துக்கொள்வதால் ரசிக்கும் அளவுக்கு எந்த காட்சியும் பயமுறுத்தவில்லை. திகில் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறிப்பாக பேயின் பின்னணி, படத்தின் இறுதியில் வருவதால், ப்ரீ-க்ளைமாக்ஸில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மட்டும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.இந்தக் கதையின் சில அம்சங்களை இறுதிவரை ரகசியமாக வைத்திருப்பதற்குப் பதிலாக ஆரம்பக் காட்சிகளில் வெளிப்படுத்தியிருந்தால்,இன்னும் சுவாரஸ்யமாகவும் அவ்வப்போது சரியான பயமுறுத்தும் தருணங்களை உருவாக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மொத்தத்தில் ஆர். சோமசுந்தரம் தயாரித்திருக்கும் டீமன் வித்தியாசமான கோணத்தில் பயமுறுத்த முயற்சித்துள்ளது.