ஜிகிரி தோஸ்து சினிமா விமர்சனம் : ஜிகிரி தோஸ்து நெருடலான மூன்று நண்பர்களின் த்ரில்லர் பயணம் | ரேட்டிங்: 2/5
லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல், விவிகே என்டர்டெயின்மென்ட் சார்பில் பிரதீப் ஜோஸ்.கே, அரண் வி தயாரித்திருக்கும் ஜிகிரி தோஸ்து படத்தை இயக்கியிருக்கிறார் அரண்.வி.
இதில் ஷாரீக் (ரிஷி), அரண் வி (விக்கி), ஆஷிக் (லோகி), அம்மு அபிராமி (திவ்யா), பவித்ரா லட்சுமி (சஞ்சனா), சீவம் (அர்ஜுனன்), முலுP சரத் (மாரி) ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இணை தயாரிப்பாளர்கள் : எஸ் பி அர்ஜுனர், ஹாக்கா.ஜெ, ஒளிப்பதிவாளர்: ஆர்.வி.சரண், இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி, படத்தொகுப்பாளர்: அருள் மொழி வர்மன்,சண்டை பயிற்சி : மகேஷ் மாத்யூ, கலை: கிஷோர், பாடலாசிரியர்: சுதன் பாலா, மக்கள் தொடர்பு: பி. ஸ்ரீP வெங்கடேஷ்.
விக்கி, ரிஷி மற்றும் லோகி ஆகிய மூன்று நண்பர்கள் மகாபலிபுரத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்வதில் இருந்து கதை தொடங்குகிறது, அப்பொழுது ஒரு பெண்ணின் கடத்தலைப் பார்த்த பிறகு அவர்களின் பயணம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. அவளைக் காப்பாற்ற நினைத்து மூவரும் விக்கி கண்டுபிடித்த புதிய கருவியான புதுமையான டெரரிஸ்ட் ட்ராக்கரைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கருவி ஏற்கனவே கல்லூரியில் நிராகரிக்கப்பட்ட விக்கியின் கண்டுபிடிப்பு. இருந்தாலும் இது ஒரு அச்சுறுத்தும் கும்பலின் பிடியில் இருந்து பெண்ணைக் காப்பாற்ற பயன்படுகிறதா என்பதை அறிய நினைத்து அதை உபயோகிக்கின்றனர்.இறுதியில் அவர்களால் அந்த பெண்ணை காப்பாற்ற முடிந்ததா? அவள் கடத்தப்பட்டதன் காரணம் என்ன? புதிய கருவி அவர்களுக்கு உதவியதா? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஷாரீக் (ரிஷி), அரண் வி (விக்கி), ஆஷிக் (லோகி), அம்மு அபிராமி (திவ்யா), பவித்ரா லட்சுமி (சஞ்சனா), சீவம் (அர்ஜுனன்), கேபிஒய் சரத் (மாரி) ஆகியோர் தங்களால் முடிந்த வரை சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், இசை – அஸ்வின் விநாயகமூர்த்தி, படத்தொகுப்பு – அருள் மொழி வர்மன், சண்டை பயிற்சி – மகேஷ் மாத்யூ, கலை – கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தாலும் கதைக்களத்தின் தன்மைக்கு எடுபடவில்லை.
மூன்று நண்பர்கள் ஒன்று கூடி, கடத்தப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்பதை மையமாக வைத்து காமெடியாகவும் த்ரில்லாரகாவும் நினைக்க தோன்றாமல் தடுமாற்றத்துடன் பயணிப்பதைப் போல் இயக்கியிருக்கிறார் அரண்.வி. டைட்டிலுக்கு ஏற்றவாறு நட்பு, நகைச்சுவை, கலகலப்பு கலந்து படத்தை இயக்கவில்லை. அதற்கு பதிலாக த்ரில்லருக்கான சாதகமான அம்சங்களை வைத்து இயக்கியிருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி அழுத்தமான கதையாக கொடுத்திருந்தால் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல், விவிகே என்டர்டெயின்மென்ட் சார்பில் பிரதீப் ஜோஸ்.கே, அரண் வி தயாரித்திருக்கும் ஜிகிரி தோஸ்து நெருடலான மூன்று நண்பர்களின் த்ரில்லர் பயணம்.