செல்ல குட்டி விமர்சனம் : செல்ல குட்டி ஒரு தலைக்காதலின் விபரீத விளைவு | ரேட்டிங்: 2/5
ஸ்ரீ சித்ரா பௌர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’.
புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ், புதுமுக நடிகைகள் தீபிக்ஷா, சிம்ரன் இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு ஜெ.கார்த்திக்
இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
90களின் காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தில் பள்ளி பருவத்தில் நடக்கும் காதல் கதை. சிவா, சூர்யா, செந்தாமரை ஆகியோர் பள்ளி நண்பர்கள் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அனாதையான சிவா நன்றாக படிக்கும் மாணவன், அவனிடம் நன்றாக பழகுகிறார் செந்தாமரை. சூர்யாவின் உறவினர் செந்தாமரையை என்பதால் சிவா தன் காதலை செந்தாமரையிடம் தெரிவிக்க சொல்கிறார். இதனை அறியும் செந்தாமரை நட்பாக மட்டுமே சிவாவிடம் பழகினேன் காதலிக்கவில்லை என்பதை தெரிவித்து, சூர்யாவைத்தான் காதலிப்பதாக கூறுகிறார். இதனை கேட்கும் சூர்யா சிவாவின் காதலுக்கு இடையூறாக இருக்க விரும்பாமல் நட்புக்காக செந்தாமரையின் காதலை நிராகரிக்கிறார். ப்ளஸ் டூ தேர்வு நடைபெற நன்றாக படிக்கும் சிவா காதல் தோல்வியால் தேர்ச்சி பெறாமல் போகிறார். ஆனால் சூர்யா, செந்தாமரை மற்றும் அவரது நண்பர்கள் தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்கிறார்கள். கூலி வேலை செய்யும் சிவா மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். இந்நிலையில் செந்தாமரைக்கு திருமண நிச்சயம் ஆகிறது. இறுதியில் செந்தாமரை யாரை திருமணம் செய்து கொண்டார்? அதன் பின் அவர் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் என்ன? என்பதே மீதிக்கதை.
புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ சூர்யாவாகவும் மற்றும் மகேஷ் சிவாவாகவும் பள்ளி, கல்லூரி, இளமை பருவ காலத்திற்கேற்ப தங்களுடைய நடை, உடை, பாவனையில் வேறுபடுத்தி காட்டி, தங்களின் முழு பங்களிப்பை கொடுத்து தேர்ந்த நடிகர்கள் போல் நடித்துள்ளனர்.இறுதியில் சிவாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்த அதற்கு சூர்யாவின் அதிரடி ஆக்ஷனில் பதில் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு.
புதுமுக நடிகை தீபிக்ஷா காதலிக்க தன்னை வற்புறுத்தும் ஒருவர், விலகி செல்லும் காதலர் ஆகிய இருவரின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் காட்சிகள், வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டு அதிலும் நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட துன்பப்படும் சோகமான காட்சியில் அழகும் நடிப்பும் கலந்து கண் கலங்க செய்து விடுகிறார்.
இவர்களுடன் சிம்ரன், சிரிக்க வைக்க முயலும் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா மற்றும் திடியன், இடையில் காதலை பங்கு போட நினைக்கும் சாப்ளின் பாலு, மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் பக்கமேளங்கள்.
டி.எஸ்.முரளிதரன் பாடல்களுக்கும், சிற்பி பின்னணி இசையும் கொடுத்து படத்திற்கு மெருகு சேர்த்து ரசிக்க வைத்துள்ளனர்.
லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு, ஓம்பிரகாஷ் ஸ்டண்ட், பாபி ஆண்டனி நடனம் என்று 90களின் இனிய நினைவுகளை அழகாக பதிவு செய்துள்ளனர்.
இன்றைய காதலர்களுக்கு 90களின் காதலின் வித்தியாசத்தை இந்த படத்தின் மூலம் ஆழமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் சகாயநாதன். முக்கோணக்காதலுடன், நட்பு, பொறாமை, செண்டிமென்ட் கலந்து காதலால் தடுமாறும் பெண்ணின் மனநிலையையும், விருப்பம் இல்லாத காதல் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தி அவளின் வாழ்க்கையை சீர்குலைய வைக்கிறது என்பதையும், நட்புக்காக தியாகம் செய்து, பின்னர் பழி வாங்கும் நண்பனை சுற்றி கதைக்களத்தை திறம்பட கொடுத்து காதலை விரும்பாத பெண்ணை விட்டு விலகுவதே நல்லது என்ற மெசேஜையும் சொல்லியுள்ளார் இயக்குனர் சகாயநாதன்.
மொத்தத்தில் ஸ்ரீ சித்ரா பௌர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரித்திருக்கும் செல்ல குட்டி ஒரு தலைக்காதலின் விபரீத விளைவு.