செல்ஃபி விமர்சனம்: கல்வி முறையைத் தின்று கொண்டிருக்கும் தனியார் கல்லூரியின் கல்வி மாஃபியா பற்றி, பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ‘செல்ஃபி’. | ரேட்டிங் – 3/5

0
134

செல்ஃபி விமர்சனம்: கல்வி முறையைத் தின்று கொண்டிருக்கும் தனியார் கல்லூரியின் கல்வி மாஃபியா பற்றி, பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ‘செல்ஃபி’. | ரேட்டிங் – 3/5

இயக்குனர் மதி மாறனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் என்டர்டெய்னர் படம் ‘செல்ஃபி’. ஜி.வி. பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, டி.சபரீஷ் தயாரித்துள்ளார். குணாநிதி, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை வித்யா ஆகியோர் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு குமரேசன்.

ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த கனல் (ஜி.வி. பிரகாஷ்), தொழிலில் இறங்க விரும்புகிறார், ஆனால் அவரது தந்தைக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது. மகனை பொறியியலாளராகப் பார்ப்பது. கனலுக்கு சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனைவியின் சில நகைகளை அடகு வைத்தும் அவர் நிறைய பணம் செலவழிக்கிறார். கானல் தனது இருக்கைக்கு பணம் கொடுத்ததற்கு உண்மையில் பல இடைத்தரகர்கள் மற்றும் முகவர்கள் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதை பார்த்து கோபமடைந்த பொறியியல் மாணவர் கல்லூரி சேர்க்கை மோசடியில் சிக்கிக் கொள்கிறார். அதனால், அதில் நிறைய பணம் இருப்பதை உணர்ந்து, அவர் ஒரு முகவராக மாறுகிறார். நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய முயற்சிக்கிறார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு சீட் பிடிக்கும் ஏஜெண்ட் ரவி வர்மா கௌதம் மேனன்), நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களையும் நிரப்பும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டதையும் கனல் கண்டுபிடித்தார். ரவிவர்மாவின் கும்பலில் உள்ள ஒரு இணைப்பின் மூலம், கனலும் அவரது நண்பர்களும் ஒரு பிரபலமான கல்லூரியில் மருத்துவ இருக்கையை கந்துவட்டிக்காரர் ஒருவரின் மகனுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கௌதம் மேனன் டீமுக்குத் தெரியாமல் அதிக பணம் பெற்றுக்கொண்டு சீட் பிடித்துக்கொடுக்கிறார் ஜி.வி பிரகாஷ். பின்னர் பணம் கொடுத்த கந்துவட்டிக்காரரால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாரகள் ஜி.வி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களும். இறுதியில் சிக்கலை எப்படி சமாளித்தார்? அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் ஒரு கோபமான யங் காலேஜ் இளைஞராக பொருந்தியிருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக் காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கௌதம் மேனனின் அலட்டல் இல்லாத வில்லத்தனமான நடிப்பில் அதகளப்படுத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக வாகை சந்திரசேகர் ஸ்கோர் செய்துள்ளார்.

வர்ஷா பொல்லாமாவுக்கு ஸ்கோர் செய்ய திரைக்கதைளில் இடமில்லை, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாசின் நண்பர் நஸீராக நடித்திருக்கும் குணாநிதி முதல் படமே சிறப்பான அறிமுகம்.

கல்லூரி சேர்மனாக சங்கிலி முருகன், கல்லூரி சேர்மனின் மருகனாக சாம்பால், தங்கதுரை, வித்யா திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பங்களித்துள்ளார்கள்.

விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை.

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் படத்தொகுப்பும் கதை ஒட்டத்திற்கு பெரிய பலம்.

நீட்டால் எம்.பி.பி.எஸ் படிக்க முடியாமப் போய்டுவாங்க. தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியாகும் இடங்களை மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் எப்படி காசு பறிகொடுக்கிறோம் என்பதை மையப்படுத்திய கதையில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கல்வி முறையைத் தின்று கொண்டிருக்கும் அசிங்கத்தை திரைக்கதை அமைத்து சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் மதிமாறன். அதற்காக அவரை தாராளமாய் பாராட்டலாம்.

மொத்தத்தில் கல்வி முறையைத் தின்று கொண்டிருக்கும் தனியார் கல்லூரியின் கல்வி மாஃபியா பற்றி, பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ‘செல்ஃபி’.