கொலை விமர்சனம் : கொலை – க்ரைம் த்ரில்லரில் புது தென்றலாக வித்தியாசமான கோணத்தில் புது அனுபவத்தை கொடுத்திருக்கும் மர்மம் கலந்த சங்கிலிவலை | ரேட்டிங்: 4/5

0
989

கொலை விமர்சனம் : கொலை – க்ரைம் த்ரில்லரில் புது தென்றலாக வித்தியாசமான கோணத்தில் சஸ்பென்ஸ் கலந்து கை தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் புது அனுபவத்தை கொடுத்திருக்கும் மர்மம் கலந்த சங்கிலிவலை | ரேட்டிங்: 4/5

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போஹ்ரா, டான் ஸ்ரீதுரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர், ஆர்விஎஸ் அசோக்குமார் தயாரிப்பில் பாலாஜி கே.குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் கொலை.

இதில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், நடிகர் சம்கிட் போஹ்ரா ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு-சிவகுமார் விஜயன், எடிட்டர்-செல்வா, கலை-கே.ஆறுசாமி, ஒலிவடிவமைப்பு-விஜய் ரத்னம், ஆடை-ஷிமோனா ஸ்டாலின், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்

அழகிய இளம் மங்கை மற்றும் சிறந்த குரல் வளம் மிக்க லைலா ( மீனாட்சி சவுத்ரி) மும்பையில் நடக்கும் வாய்ஸ் ஆஃப் இந்தியா போட்டியின் வெற்றியாளர். இந்த வெற்றியின் மூலம் மாடலிங் துறையில் கால் பதிக்கிறார். இந்தியாவில் பல முன்னணி பிராண்ட்களின் மாடலாக வந்து உச்சத்தை தொடுகிறார். சென்னைக்கு வேலை விஷயமாக இரண்டு மாத காலமாக ஒரு உயர்தர அபார்மெண்ட்டில் வசிக்கிறார். ஒரு நாள் அவரின்; காதலர் சித்தார்த்தா சங்கருடன் இரவில் வெளியே சென்று விட்டு வீடு திரும்புகிறாh.; மறுநாள் காலையில் லைலா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கு விசாரணையை போலீஸ் அதிகாரி சந்தியா (ரித்திகா சிங்) மேற்கொள்கிறார். இவருக்கு முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி 200 வழக்குகளை துப்பறிந்து கண்டுபிடித்து பெருமை சேர்த்த விநாயக்(விஜய் ஆண்டனி) உதவி செய்கிறார். லைலாவுடன் தொடர்பில் இருந்த நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்ரோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜேண்ட் முரளி சர்மா, மாடல் மேனேஜர் கிஷோர் குமார், வீட்டில் வேலை செய்த பெண் மற்றும் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி என்று அனைவரும் சந்தேக வலையில் சிக்குகின்றனர். ஆனால் அனைவரின் வாக்குமூலம் கொலைக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதோடு சில பேர் மர்மமாக இறந்தும் போகின்றனர். விநாயக் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து இறுதியில் கொலை செய்வரை கண்டுபிடித்தார்களா? குற்றவாளி எதற்காக கொலை செய்தார்? காரணம் என்ன?என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விநாயக் என்ற துப்பறியும் போலீஸ் அதிகாரியாக சால்ட், பெப்பர் லுக்குடன், மனவேதனையை உள்ளடக்கி, வழக்கிற்காக பல கோணங்களில் விசாரணை நடத்தும் அடக்கமான தோரணையில் விஜய் ஆண்டனி அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு மகளை விஜய் ஆண்டனி வற்புறுத்தி வெளியே அழைத்துச் செல்லும் போது விபத்து ஏற்பட்டு மகள் கோமா நிலையில் சென்று விட, அதனால் விரக்தியில் இருக்கும் பாசமுள்ள தந்தையாக மகள் இறக்கும் தருவாயில் உணர்ச்சிகர நடிப்பில் மனதை கவர்கிறார். வழக்கு விசாரணையை அவரவர் கோணங்களில் விசாரித்து துல்லியமாக ஆராயும் திறன் இருந்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் உயர் அதிகாரிகளின் பிடிவாதத்தால் இழுத்து மூடப்பட்ட வழக்கு பின்னர் சுவாரஸ்யத்துடன் மீண்டும் துவங்க உறுதுணையாக இருந்து வழக்கை வழிநடத்திச் செல்லும் நிபனுத்துவம் பெற்ற அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரியாக தன் கதாபாத்திரத்தை தலை நிமிரச் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

ரித்திகா சிங் முதல் வழக்கை வெற்றிகரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற மும்முரம், உயர் அதிகாரியின் திமிர் பேச்சை கேட்டு சகித்துக் கொண்டு, பொறுமையாக பதிலளித்து வழக்கி;ற்காக எடுக்கும் முயற்சிகள் என்று படம் முழுவதும் அமைதியின் உறைவிடமாக, தீர்க்கமான பார்வை, கூர்மையான கேள்விகள் என்று தன் மனதிற்கு சரி என்று பட்டதை தைரியமாக எடுத்துரைக்கும் விசாரணை போலீஸ் அதிகாரி சந்தியாவாக விடாப்பிடி குணத்துடன் சிறப்பாக செய்துள்ளார்.

மாடலும், பாடகியுமான மீனாட்சி சவுத்ரி முதல் படத்திலேயே லைலா கதாபாத்திரத்திற்கு பொருந்தி அவர் வரும் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பு, நடை. உடை, பாவனை ஒரு தேர்ந்த மாடல் அழகிக்கான அம்சங்களுடன் அழகான தேவதையாக ஜொலிக்கிறார். இவரைச் சுற்றியே கதைக்களம் பயணிப்பதால் படத்தின் உயிர்நாடி.

மாடலிங் துறையின் தலைமை அதிகாரி ராதிகா சரத்குமார், நண்பராக, அப்பாவி முகப்பாவத்துடன், உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத முகபாவத்துடன், வியப்பில் ஆழத்தும் புது தோற்றத்தில் சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, போலீஸ் உயர் அதிகாரியாக தன் பேச்சால் எரிச்சலைடயச் செய்யும் ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம்,கிஷோர் சர்மா ஆகியோர் அவர்களுக்கேற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து படத்தின் விறுவிறுப்பிற்கு துணை புரிந்துள்ளனர்.

ஆரம்ப காட்சியில் தொடங்கும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற மயக்க வைக்கும் பழைய பாடலை இன்றைய டிரெண்டிங்கான ட்யூனில் நம் மனதை இசையாலும் மற்றும் காட்சிக் கோணங்களில் பின்னணி இசையாலும் கட்டிப் போட்ட ஸ்டைலிஷ் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். இப்படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கும் ஒலிவடிவமைப்பு-விஜய் ரத்னம்,

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம் கண்களில் விரியும் ரெட்ரோ திறன்மிக்க காட்சிகளின் பிரம்மாண்டத்தையும், நுணுக்கத்தையும், தன் நேர்த்தியான பரிமாணமிக்க காட்சிக் கோணங்கள் அசர வைக்கின்றன. படத்தின் விவரிப்புகேற்ற பங்களிப்பு படத்தின் மும்முரத்தை கூட்டியுள்ளதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் உலகத்தரத்தின் வெளிப்பாடு அற்புதம்.

எடிட்டர் செல்வாவின் கைத்திறன் படத்திற்கு மேலும் மெருகேற்றுகிறது.

கலை-கே.ஆறுசாமி, ஆடை-ஷிமோனா ஸ்டாலின் படத்தின் காட்சிகளுக்கு தேவைப்பட்ட ரிச் லுக்கை தக்க வைத்துள்ளன.

கொலை என்ற டைட்டில் தான் முழு படத்தின் ஒன் லைனில் விவரித்திருக்கிறார் அதேசமயம் ஆரம்ப காட்சியில் நடக்கும் துப்பாக்கி சூடு தான் படத்தின் இறுதிக் காட்சியாக வைத்து முடித்துள்ளார் இயக்குனர் பாலாஜி கே குமார். ஒரு மாடல் அழகி கொலையில் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறமைமிக்க போலீஸ் கதைக்களத்தில் மர்மத்தை தக்கவைத்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார் இயக்குனர் பாலாஜி கே.குமார். தொடக்கத்தில் கதை விவரிப்பு லைலாவின் பார்வையில் தொடங்கி, அதன் பின்னர் விசாரணைக்குட்பட்டவர்களின்; பார்வையில் பயணித்து, போலீஸ் பார்வையில் காட்சிகளின் விவரிப்பில் முடித்திருப்பது படத்தின் ஹைலைட். இந்தப் படத்தில் கொலைக்கான காரணம் கொள்ளை மற்றும் வழி வாங்குதல் அல்ல பல ரகசியங்கள், பொய்கள் உள்ளடக்கி மர்மம் கலந்த புலனாய்வு க்ரைம் த்ரில்லராக கொடுத்து உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட திரைப்படமாக பார்வையாளர்களுக்கு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். கவனத்தை ஈர்;க்கக்கூடிய ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, பாத்திரப்படைப்பு என்று அழுத்தமான பதிவும், மாடலிங் துறையில் புகழ், பணம் சம்பாதிக்க தூண்டும் இருண்ட பக்கத்தையும் கதை விவரிக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சி யூகிப்பதற்குள் விறுவிறுவென்று முடிந்து விடுகிறது.  ஹாலிவுட் பாணியில் கலை இயக்குனருடன் கை கோர்த்து க்ரைம் த்ரில்லரை வித்தியாசமான அனுபவத்துடன் தந்த இயக்குனர் பாலாஜி கே. குமாருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போஹ்ரா, டான் ஸ்ரீதுரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர், ஆர்விஎஸ் அசோக்குமார் தயாரிப்பில் கொலை – க்ரைம் த்ரில்லரில் புது தென்றலாக வித்தியாசமான கோணத்தில் சஸ்பென்ஸ் கலந்து கை தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் புது அனுபவத்தை கொடுத்திருக்கும் மர்மம் கலந்த சங்கிலிவலை.