கொன்றால் பாவம் விமர்சனம்: கொன்றால் பாவம் சஸ்பென்ஸ் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள்;: சந்தோஷ் பிரதாப், சார்லி, வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ், மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன்
இசை: சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : செழியன்
தயாரிப்பு: பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் ஏ
டைரக்ஷன்: தயாள் பத்மநாபன்
மக்கள் தொடர்பு : டி.ஒன், சுரேஷ்சந்திரா, ரேகா.ஆசை என்ற கருத்தைப் பற்றியும், அது வாழ்க்கைக்கு எரிபொருளாக எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும் ஒரு சாமியார் (மனோபாலா) பிரசங்கிப்பதைக் கொன்றால் பாவத்தின் ஆரம்பக் காட்சி. அதிகப்படியான ஆசை, காமம் மற்றும் சுயநல நோக்கங்கள் மனிதர்களை தவறான செயல்களின் வலைக்குள் இழுக்கின்றன என்று அவர் வலியுறுத்துகிறார். அது 1981 ஆம் ஆண்டு. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பகுதியில் ஒரு சிறு கிராமம். மல்லிகா (வரலக்ஷ்மி சரத்குமார்) மற்றும் அவரது பெற்றோர்கள் – ஈஸ்வரி ராவ் மற்றும் சார்லி கடனில் தத்தளித்த குடும்பம் பல ஆண்டுகளாக வறுமையில் வாடுகிறது. மல்லிகா ஒரு மகிழ்ச்சியான திருப்தியான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறாள், ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அது சாத்தியமற்றதாக தோன்றுகிறது, மேலும் வயது முதிர்வின் கவலையும் அவளை வேட்டையாடுகிறது. ஒரு நாள், ஒரு குடுகுடுப்பைக்காரர் அவர்களைச் சந்தித்து, ஒரே இரவில் அவர்களின் அதிர்ஷ்டம் மாறும் என்று கூறும் வரை, மூவரும் இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்கின்றனர். அந்த நேரத்தில்தான், குடும்பத்தில் வரவேற்கப்படாத விருந்தினர், அர்ஜுன் (சந்தோஷ் பிரதாப்) என்ற இளைஞன், அவர்களின் இடத்திற்கு வந்து ஒரு இரவில் தங்குவதற்கு கோரிக்கை வைக்கிறான், அதற்கு மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒப்புக்கொள்கிறது. மேலும் ஒரே இரவில் நடக்கும் தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுடன் கதை விரிவடைகிறது. கடன் கொடுத்தவர் கேட்டதால் சார்லியின் குடும்பம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறது. இதை கேட்டுக்கொண்டிருந்த அர்ஜூனன், சார்லி குடும்பத்திற்கு உதவ முடிவு செய்கிறார். அர்ஜூனன் ஒரு சூட்கேஸைத் திறந்து அதில் இருக்கும் பணம், தங்க நகைகள் அவர்களிடம் காண்பிக்கிறார். பின்னர் அது போல் அவர்களால் சம்பாதித்து கடனை அடைக்க முடியும் என்று கூறுகிறார்.ஏற்கனவே பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சார்லியின் குடும்பத்தினர் சபலமடைந்து சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்து விட்டு பணம் நகையை அபகரிக்க திட்டம் போடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது, என்பதே படத்தின் மீதி கதை.படத்தின் மையக் கதை மல்லிகா கதாபாத்திரத்தை தான் சுற்றி செல்கிறது. வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக படத்துக்கு மல்லிகா கதாபாத்திரத்திற்கு தன்னை முழுமையைக் கொடுத்திருக்கிறார். அவரது நெகடிவ் பாத்திரம் அதிர்ச்சியாக இருந்தாலும் பாராட்டத்தக்கது.

அர்ஜுன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் சிறப்பாக நடித்துள்ளார்.
மருத்துவச்சியாக ஈஸ்வரி ராவ் மற்றும் தந்தையாக சார்லி இருவரும் பொருத்தமான கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை அளித்து ஒரு நேர்த்தியான படமாக அமைய இவர்களது பங்களிப்பு அமைத்துள்ளது. மற்ற துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
சாம் சி எஸ் ஸின் இசை, பின்னணி இசை கதையை விரிவுபடுத்த உதவியது, செபியா வண்ணத் டோன் பயன்படுத்தி, ஆற்றங்கரையின் இயற்கைக் காட்சிகள், விண்டேஜ் திண்ணை வீடும் நம்மை 80களுக்கு அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன்.
படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, படத்தின் முக்கிய பகுதி ஒரு கொலையைச் சுற்றி வருகிறது. கன்னடத் திரைப்படம் ஆ கரால ராத்திரியின் தமிழ் ரீமேக்கான கொன்றால் பாவத்தில், மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்கள்தான். அது, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. இயக்குனர் தயாள் பத்மநாபன் இதனை திறம்பட செய்துள்ளார்.
மொத்தத்தில் பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் ஏ தயாரித்திருக்கும் கொன்றால் பாவம் சஸ்பென்ஸ் த்ரில்லர்.