காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: காலங்களில் அவள் வசந்தம் வித்தியாசமான ரோமன்டிக் கதையம்சத்துடன் இளம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வெற்றி கொண்டாட்டம் | ரேட்டிங்: 3/5

0
128

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: காலங்களில் அவள் வசந்தம் வித்தியாசமான ரோமன்டிக் கதையம்சத்துடன் இளம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வெற்றி கொண்டாட்டம் | ரேட்டிங்: 3/5

ஸ்ரீ ஸ்டியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து காலங்களில் அவள் வசந்தம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தத்.
இதில் கௌசிக்ராம், அஞ்சலி, ஹிரோஷினி, மாத்யூ வர்கீஸ், ஜெயா சுவாமிநாதன், சுவாமிநாதன், ஆர்.ஜெ.விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், அருண், தருண் பிரபாகர், விஜே.ராஜீவ், சவுந்தர்யா நஞ்சுண்டான், ராஜம்மா, டாக்டர் மணிகண்டன், டாக்டர் பாயல் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கோபி ஜகதீஸ்வரன், எடிட்டர்-லியோ ஜான் பால், இசை-ஹரி எஸ்.ஆர், உடை-ரிமேக்கா மரியா, கலை-எஸ்.கே, நடனம்-சாண்டி, சண்டை-ஹரி தினேஷ், லைன் தயாரிப்பாளர்-அருண் பராஜித் மற்றும் சிவகுமார், நிர்வாக தயாரிப்பு -அரவிந்த் சுரேஷ்குமார், தயாரிப்பு மேற்பார்வை-சி.வி.விஜயன், தயாரிப்பு நிர்வாகி-சந்துரு சி.வி, பிஆர்ஒ-நிகில் முருகன்.

கௌசிக்ராம் சினிமாவை நேசிப்பவன் அதே போல் தன் வாழ்க்கையிலும் சினிமாவில் வருவது போல் காதலிக்க வேண்டும் என்று மழையில் காதலை சொல்வது, கேன்டல் லைட் டின்னர், சினிமாவில் பார்ப்பது போன்று காதல் செய்ய வேண்டும் என்று பட்டியலை தயாரித்து வைத்து தனக்கு பிடித்த பெண்களை காதலிக்க தொடங்குகிறான். எந்த காதலும் கைகூடாமல் போக இறுதியில் ஹிரோஷினி என்ற பெண்ணிடம் தன் காதலை சொல்லி செல்போன் நம்பரையும் வாங்கி வருகிறான்.மறுநாள் தந்தையின் நண்பர் குடும்பத்துடன் வீட்டிற்கு வர, அவரின் மகள் தொழிலதிபரான அஞ்சலி கௌசிக்கை பார்த்தவுடன் பிடித்து போக திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள்.முதலில் அதிர்ச்சியாகும் கௌசிக் பின்னர்  சம்மதம் n;தரிவிக்க திருமணம் இனிதே நடக்கிறது.அழகான பெண்ணே மனைவியாக கிடைத்த சந்தோஷத்தில் கௌசிக் சினிமாவில் வருவது போன்று காதலை சினிமாத்தனமாக அணுகுகிறான். முதலில் இதற்கு இணங்கும் அஞ்சலி, ஒரு நாள் அவனின் டைரியை படிக்கும் போதும் தான் எல்லோரிடமும் இதே ஃபார்மூலாவை கடைப்பிடித்து வருகிறான் என்பதை உணர்ந்து கௌசிக்கின் சினிமா காதலை மாற்ற நினைக்கிறாள். அதை புரிய வைக்க முயலும்போது அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் சண்டை ஏற்பட்டு மனக்கசப்பில் விவாகரத்து வரை செல்கிறது. இதற்கிடையே காதலி ஹிரோஷினியை கௌசிக் சந்திக்க நேரிடுகிறது. காதலி ஹிரோஷினியும் காதலிக்க வற்புறுத்த மனவருத்தத்தில் இருக்கும் கௌசிக் இதற்கு சம்மதம் சொன்னரா? அஞ்சலியும், கௌசிக்கும் மீண்டும் இணைந்தார்களா? கௌசிக் யதார்த்த காதலை உணர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

புதுமுகம் கௌசிக்ராம் இளமையான வசீகர முகம்,  ஸ்டைலிஷ் கெட்டப்பில், சினிமா காதலை நம்புவது, மனைவியிடம் அளவு கடந்த காதல் அதை உணர்த்த தெரியாத அப்பாவித்தனமாக அணுகும் முறை, வசனங்களில் கலகலப்பு, கோபம், தாபம், ஆக்ஷன்  என்று ஷ்யாம் என்ற ரோமான்டிக் கதாநாயகனாக மனதில் நச்சென்று பதிந்து விடுகிறார். சினிமாகாதல்சிண்ரோமில் அவதிப்படும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதன் பின் சிறந்த படத்தை தேர்ந்தெடுத்து நடித்தால் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
அஞ்சலி அழகான ராட்சசியாக இளம் தொழிலதிபர் ராதேயாக தைரியமும், விவேகமும், சாமார்த்தியம் நிறைந்த பெண்ணாக கண்களாலும், அசத்தல் குரலாலும், யதார்த்த வாழ்க்கையை புரிய வைக்க எடுக்கும் முயற்சி என்று நடிப்பிற்கு முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரத்தில் படம் முழுவதும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் வெல்டன். ஹாசினிசிண்ரோமில் தவிக்கும் ஹிரோஷினி சில காட்சிகள் தான் என்றாலும் கலகலப்புடன் சிறப்பாக செய்துள்ளார்.

இவர்களுடன் கௌசிக் அப்பாவாக மாத்யூ வர்கீஸ், கௌசிக் அம்மாவாக பல ஐடியாக்களை அள்ளி வழங்கி அசத்தியிருக்கும் ஜெயா சுவாமிநாதன்,  கம்பெனி பாஸ்சாக சுவாமிநாதன், நண்பராக ஆர்.ஜெ.விக்னேஷ்காந்த், தோழியாக அனிதா சம்பத், வில்லனாக அருண், நண்பராக தருண் பிரபாகர், அஞ்சலியின் நண்பராக விஜே.ராஜீவ், ஷாலினியாக சவுந்தர்யா நஞ்சுண்டான், பாட்டியாக ராஜம்மா, அஞ்சலியின் அப்பா டாக்டர் மணிகண்டன், அஞ்சலியின் அம்மாவாக டாக்டர் பாயல் மணிகண்டன் ஆகியோர் படத்திற்கு பலம்.

மழைக்காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் என நான்கு வித காலங்களை மழைகளின் ஊடே ஒவ்வொரு காட்சியையும் சம்பந்தபடுத்தி, மணிரத்னத்தின் அக்மார்க் காட்சிக்கோணங்கில் காதலை கொண்டாட்டமாக காட்டி கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையோடு அழகாக காட்சிப்படுத்தி கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்வரன்.

ஹரி எஸ்.ஆர்; இசையும், பின்னணி இசையும் காதலுக்கும், காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து விருந்து படைத்திருக்கிறார்.

எடிட்டர்- லியோ ஜான் பால்,  கலை-எஸ்.கே, நடனம்-சாண்டி, சண்டை-ஹரி தினேஷ் இவர்களின் பங்கு படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம்.

காதலை கொண்டாடும் கணவன், அதை சரி செய்ய நினைக்கும் மனைவி, மகனின் வாழ்க்கை சிதறாமல் இருக்க போராடும் பெற்றோர், இடையே நட்பு, காதல், பகை, சண்டை என்று வித்தியாசமான கோணத்தில் திரைக்கதையமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தத். கொஞ்சம் தேவையில்லாத காட்சிகள் இருந்தாலும் தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் சரி செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார் இயக்குனர் ராகவ் மிர்தத்.

மொத்தத்தில் ஸ்ரீ ஸ்டியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் காலங்களில் அவள் வசந்தம் வித்தியாசமான ரோமன்டிக் கதையம்சத்துடன் இளம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வெற்றி கொண்டாட்டம்.